Advertisment

Corona Updates : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 : துபாயில் இருந்து திருச்சி வந்த இளைஞருக்கு சிகிச்சை

Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus latest news updates

coronavirus latest news updates

Covid-19 Cases Update: நாட்டில், 'கொரோனா' வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை, 612 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், முதல் பலி நேற்று பதிவான நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

கொரோனா வைரசுக்கு, ஏழை - பணக்காரன் பேதம் கிடையாது. சமூக விலகலும், வீட்டுக்குள்ளேயே 21 நாட்கள் இருப்பதும் மட்டுமே, கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த ஒரே தீர்வு.மஹாபாரத போரை வெல்ல, 18 நாட்கள் ஆனது. கொரோனாவுக்கு எதிரான போரை, வெல்ல 21 நாட்கள் தேவை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இந்தியா முழுவதும், 21 நாட்கள் முழுமையான ஊரடங்கிற்கு உத்தரவிட்டதன் மூலம், கொரோனாவுக்கு எதிரான போரில், விரிவான மற்றும் வலுவான நடவடிக்கையை, பிரதமர் நரேந்திர மோடி, முன்னெடுத்துள்ளார். 'இந்த போரை வெல்ல, இந்தியாவுடன், ஐ.நா., என்றும் துணை நிற்கும்' என, உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்














Highlights

    21:55 (IST)26 Mar 2020

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்ணிக்கை 694 ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 694 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    21:48 (IST)26 Mar 2020

    கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஒரு மாத ஊதியத்தை வழங்கும் அதிமுக எம்எல்ஏக்கள் எம்பிக்கள்

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்களது மார்ச் மாத ஊதியத்தினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

    அதோடு, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்பிக்கள் ரூ.1 கோடியும், எம்எல்ஏக்கள் ரூ.25 லட்சத்தையும் வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    20:45 (IST)26 Mar 2020

    இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் என்ணிக்கை 16 ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    20:04 (IST)26 Mar 2020

    கொரொனா பரவலைத் தடுக்க தாம்பரம் சித்த மருத்துவமனையில் சிகிச்சைகள் நிறுத்தம் - மருத்துவமனை நிர்வாகம்

    சென்னை தாம்பரம் சித்த மருத்துவமனையில் சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் இந்த திடீர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    சாதாரண சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வர தேவையில்லை என்றும் சித்த மருத்துவ இயக்குநர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    19:02 (IST)26 Mar 2020

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 ஆக இருந்த நிலையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    லண்டனில் இருந்து சென்னை வந்த 24 வயது இளைஞர், 65 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சென்னை கீழ்ப்பாக்கம் மருதுவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

    18:43 (IST)26 Mar 2020

    தனிமைப்படுத்தும் இடங்கள் தேவை; விடுதிகள், வீடுகள் அளித்து உதவலாம் - சென்னை மாநகராட்சி ஆணையர்

    தனிமைப்படுத்த அதிக இடங்கள் தேவை என்பதால் பயன்படுத்தப்படாத விடுதிகள் வீடுகள் இருந்தால் மாநகராட்சிக்கு அளித்து உதவலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    18:11 (IST)26 Mar 2020

    இடைக்கால ஜாமீன் உத்தரவுகளும் , பரோல் உத்தரவுகளும் நீட்டிப்பு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    இடைக்கால ஜாமீன் உத்தரவுகளும் , பரோல் உத்தரவுகளும் நீட்டிப்பு. பாதிப்பு ஏற்பட்டால் அரசு மற்றும் உரியவர்கள் நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    17:18 (IST)26 Mar 2020

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிகை 27 ஆனது - அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

    அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “துபாயிலிருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட இளைஞரின் உடல்நிலை சீராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

    16:19 (IST)26 Mar 2020

    தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள் சுய உதவி குழுக்களுக்கு வட்டி வசூலிக்க தடை - முதல்வர் அறிவிப்பு

    முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் அத்தியாவசிய சேவைகளுக்காக என்று ஸ்டிக்கர் ஒட்டியிருக்க வேண்டும். தனியார் வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள் சுய உதவி குழுக்களுக்கு வட்டி வசூலிக்க தடை. மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயம் தொடர்பான எந்த போக்குவரத்துக்கும் தடையில்லை. அவசர உதவி தேவைப்படுவோர் 108 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இறைச்சி, கோழி, மீன் போன்ற உணவு பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு தடையில்லை. தனியார் உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் உணவு விநியோகிக்க தடை. அனைத்து வகையான கடைகளிலும் மக்கள் 2 அடி இடைவெளிவிட்டு நிற்க வேண்டும்.  தொடர்கிறது என்று அறிவித்துள்ளார். 

    16:10 (IST)26 Mar 2020

    அத்தியாவசியப் பணிகள் தடையின்றி கிடைப்பதை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் - முதல்வர்

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தாலும் மக்கள் சிலர் வெளியே வருவது நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்திய முதல்வர், மளிகை கடைகள் உணவகங்கள் இயங்க நேர வரம்பு எதுவும் செய்யப்படவில்லை. மளிகை கடைகள் மளிகைப் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க அறிவுறுத்தல். அத்தியாவசியப் பணிகள் தடையின்றி கிடைப்பதை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

    14:40 (IST)26 Mar 2020

    முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 மாதங்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் - நிதியமைச்சர்

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 2 தவணைகளாக 3 மாதங்களுக்கு
    வழங்கப்படும்

    14:39 (IST)26 Mar 2020

    100 பேருக்கு குறைவாக ஊழியர்கள் உள்ள நிறுவனம், ஊழியர்கள் 3 மாதத்துக்கு பி.எப். கட்டதேவையில்லை - நிதியமைச்சர்

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: 100 பேருக்கு குறைவான ஊழியர்களை கொண்ட நிறுவனம், ஊழியர்கள் 3 மாதத்துக்கு பி.எப். கட்ட
    தேவையில்லை, அதனை மத்திய அரசே செலுத்தும். இது மாத ஊதியம் ரூ.15,000 கீழ் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே சலுகை பொருந்தும்.

    14:14 (IST)26 Mar 2020

    ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் 24% பங்குகளை மத்திய அரசு செலுத்தும்

    ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தொழில் நிறுவனங்கள் பங்கு 12 % மற்றும் ஊழியர்களின் பங்கு 12% என மொத்தம் 24% மத்திய அரசு செலுத்தும்- நிர்மலா சீதாராமன் 

    14:09 (IST)26 Mar 2020

    மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் இணை இல்லாத கடன்கள் உயர்த்தப்படும்

    இந்தியாவில் செயல்படும் 7 கோடி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் இணை இல்லாத கடன்கள் ரூ.20 லட்சமாக  உயர்ந்தப்படும்  - நிர்மலா சீதாராமன்  

    14:03 (IST)26 Mar 2020

    நிர்மலா சீதாராமன் : உஜ்வாலா திட்ட பயனர்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும்

    மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனடைந்த 8 கோடி குடும்பங்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும். 

    பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள்  கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .   

    13:53 (IST)26 Mar 2020

    நிர்மலா சீதாராமன்: 80 கோடி மக்களுக்கு கூடுதலாக 5 கிலோ (அரிசி/ கோதுமை) வழங்கப்படும்

    இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்தியாவில் ஏற்கனவே 80 கோடி மக்களுக்கு 5 கிலோ (அரிசி/ கோதுமை) கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது,  அடுத்த மூன்று மாதங்களுக்கு கூடுதாலக 5 கிலோ (அரிசி/ கோதுமை) கொடுக்கப்படும் என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கிலோ விருப்பமான பருப்பு வகைகள் கொடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.     

    13:47 (IST)26 Mar 2020

    நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பு : 8.69 கோடி விவசாயிகளுக்கு பணப்பரிமாற்றம் செய்யப்படும்

    8.69 கோடி விவசாயிகள் நேரடி பணப்பரிமாற்றம் மூலம் உடனடியாக பயனடைவார்கள். ஏப்ரல் முதல் வாரத்தில் ரூ .2000 தவணை விவசாயிகள் வங்கிக்கணக்கில் பரிமாற்றம் செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.    

    13:39 (IST)26 Mar 2020

    நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பு: சுகாதாரப் பணியாளருக்கு ரூ .50 லட்சம் மருத்துவ காப்பீடு

    ஒவ்வொரு சுகாதாரப் பணியாளருக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு ரூ .50 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். இந்த மூன்று மாத காலகட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுபாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.  

    13:35 (IST)26 Mar 2020

    நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பு, 1.7 லட்சம் கோடி நிவாரணம் அறிவிப்பு

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் உதவி தேவைப்படும் ஏழைகளுக்கான நிவாரண உதவி குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார் நிர்மலா சீதாராமன். யாரும் பசியோடு இருக்க மாட்டார்கள் என்று கூறிய அவர், கொரோனா வைரஸ் பொருளாதரா பேக்கேஜாக  ரூ1.7 லட்சம் கோடி அறிவித்தார்.   

    12:57 (IST)26 Mar 2020

    சுகாதார பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை - டெல்லி அரசு முடிவு

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

    12:25 (IST)26 Mar 2020

    2 நாள் விடுமுறை ரத்து

    144 தடை உத்தரவு அமலில் இருந்தாலும், கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வழக்கம் போல் இயங்கும் என காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மற்றும் நாளை மறுநாள் 27, 28ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 2 நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாக சேராமல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள காவல்துறை உறுதியளித்துள்ளதால், நாளை மற்றும் நாளை மறுநாள் வழக்கம் போல் மார்க்கெட் செயல்படும் என சென்னை கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.  

    12:02 (IST)26 Mar 2020

    கொரோனா பரவல் விரைவில் குறையும்

    கொரோனா நோய்த்தொற்று, உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில், இந்த நோய்த்தொற்று, விரைவில் முடிவுக்கு வரும் என,சீனாவின் நிலையை கணித்த நோபல் பரிசு பெற்ற உயிர் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் லேவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    11:47 (IST)26 Mar 2020

    காலை 9 மணிவரை மட்டுமே பால் விற்பனை

    தமிழகத்தில் நாளை முதல் அதிகாலை 3.30 மணிமுதல் காலை 9 மணிவரை பால் விற்பனை செய்யப்படும் என்று பால் முகவர் சங்கம் அறிவித்துள்ளது.

    11:12 (IST)26 Mar 2020

    நாகர்கோவில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றவர் பலி

    கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த கோடிமுனை  பகுதியை சேர்ந்த 40 வயது ஜெகன் என்பவர் உயிரிழந்தார்.  கடந்த மூன்றாம் தேதி குவைத் நாட்டில் இருந்து குமரி திருப்பிய இவர் மூளைக் காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு  காரணமாக கொரோனா வார்டில்  அனுமதிக்கப்பட்டார்.  இவரது சளி மற்றும் ரத்த மாதிரிகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவரது பரிசோதனை முடிவுகள் இன்னும் வராத நிலையில் இவர் இன்று காலை உயிரிழந்தார். பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே இவர் கொரோனாவால் உயிர் இறந்தாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா என தெரியவரும்

    10:59 (IST)26 Mar 2020

    கொரோனாவுக்கு இந்தியாவில் 649 பேர் பாதிப்பு

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    10:37 (IST)26 Mar 2020

    டுரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

    சென்னையில் வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில், ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் மருத்துவ குழுக்கள் மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    10:08 (IST)26 Mar 2020

    லாக்-டவுன் மட்டும் போதாது : உலக சுகாதார அமைப்பு

    உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ் கரோனா வைரஸை ஒழிக்க லாக் டவுன்  மட்டும் போதாது, நோய்க்கிருமித் தொற்றை கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து, சிகிச்சை அளிப்பதும் மிக மிக அவசியம் என்று கூறியுள்ளார்.

    09:56 (IST)26 Mar 2020

    நாடு முழுவதும் டோல் கட்டணம் ரத்து: மத்திய அரசு

    ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் வரையில் நாடு முழுவதும் டோல் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இது குறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ​​இந்தியா முழுவதும் உள்ள அனைத்து டோல் பிளாசாக்களிலும் கட்டண வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது அவசரகால சேவைகளை வழங்குவதில் உள்ள சிரமத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், முக்கியமான நேரத்தையும் மிச்சப்படுத்தும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    09:54 (IST)26 Mar 2020

    காஷ்மீரில் முதல் மரணம்

    கொரோனா தொற்றுக்கு காஷ்மீர் மாநிலத்தில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. 65 வயது முதியவர் பலியாகியுள்ளார். 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    09:13 (IST)26 Mar 2020

    சென்னை மெட்ரோ சார்பில் விழிப்புணர்வு

    கொரோனா தொற்று பரவாமல் இருக்க சமூக விலகலை ( social distancing)  அனைவரும் வலியுறுத்தி வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனமும், தனது டுவிட்டர் பக்கத்தில் விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கியுள்ளது.

    publive-image

    09:07 (IST)26 Mar 2020

    ‘ஜி-20’ தலைவர்கள் இன்று ஆலோசனை

    கொரோனா' வைரஸ் பாதிப்பு, உலகளாவிய பிரச்னையாக உருமாறியுள்ள நிலையில், அதை எதிர்கொள்வது குறித்து, 'ஜி - 20' அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், இன்று (மார்ச் 26) ஆலோசனை நடத்த உள்ளனர். 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நடக்கும் இந்த சந்திப்பில், பிரதமர், நரேந்திர மோடியும் பங்கேற்கிறார்.

    Corona latest news updates : டில்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    .

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட டில்லியில் இருந்து வந்தவர் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சையில் குணமடைந்துள்ளதாகவும், இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    Tamil Nadu Corona Virus Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment