தமிழகத்தில் இன்று மாலை முதல் 144 தடையுத்தரவு கொண்டு வரப்படுவதால் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் தங்கி உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக, சென்னை மாநகர பஸ்கள் திருச்சி வரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கை குறித்து, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுடன், மத்திய அமைச்சரவை செயலர் மற்றும் பிரதமரின் முதன்மை செயலர் உள்ளிட்டோர், ஆலோசனை நடத்தினர். இதன்படி, மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து, மார்ச், 31 வரை ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகம் உள்ள, 75 மாவட்டங்களின் எல்லைக்கு, 'சீல்' வைக்கப்படுவதாகவும், இந்த மாவட்டங்களில் மக்கள் ஊரடங்கை, இந்த மாத இறுதி வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை புரசைவாக்கம், திருப்பூர், மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழக அரசின் விதித்துள்ள கட்டுப்பாடுகள்:
டீ விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் கூட்டமாகக் கூட அனுமதியில்லை என்று அறிவித்துள்ளது.
பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகள் செயல்படவும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கால்நடை தீவன விற்பனை நிலையங்கள், பால் பூத்துகள், வங்கி ஏடிஎம்கள், ஊடக அலுவலகங்கள் செயல்படும்.
உணவகங்கள், உணவு தயாரிப்புக் கூடங்கள், பார்சல் வழங்க அனுமதி; ஆனால் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் ஏப்.1 வரை அமலில் இருக்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் ஏப்.1 வரை அமலில் இருக்கும் என அரசாணை வெளியீடு
கொரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழக அரசின் விதித்துள்ள கட்டுப்பாடுகள்:
கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, உணவுகளை டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் செயல்படத்தடை விதித்துள்ளது.
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் +1, +2 பொதுத்தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும். +1, +2 தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், +1, +2 பொதுத்தேர்வுகள் எழுதும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் மதியம் 2.45 மணி வரை தேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும். தேர்வு மையத்திற்கு செல்ல தேர்வர்கள் போக்குவரத்து வசதி கோரினால் செய்து தர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் மாநகராட்சியுடன் இணைந்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
மாநகராட்சியின் கொரோனா தடுப்பு பணிகளில் ஆர்வமுள்ள தனி நபர்களும் பங்கேற்கலாம் என சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்திவருகிறார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊடகங்களிடம் கூறுகையில், “விழுப்புரம், திண்டிவனம், திருச்சி வரை சென்னை மாநகர பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளின் இயக்கம் குறைவாக இருப்பதால் சென்னை பேருந்துகள் கூடுதல் தொலைவு இயக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் - முதல்வர் பழனிசாமி
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவு
மருந்து, காய்கறி, மளிகைக்கடைகள் ஆகிய அத்தியாவசியப் பொருட்களுக்கான விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள், வெளிநாட்டினர் பொதுவெளியில் நடமாடினால், அவர்களின் பாஸ்போர்ட்கள் முடக்கப்பட்டு விசாக்களை ரத்து செய்ய மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதை பிறர் அறியும் வகையில், அவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும் என்று தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் உள்ளிட்ட தேசிய அளவில் 80 மாவட்டங்களுக்கு வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் மத்திய மாநில அரசுகள் வகுத்துள்ள விதிகளை மீறும்பட்சத்தில் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்த கேள்விகள், ஆலோசனை மற்றும் உதவிக்கு தேசிய அளவிலான கட்டணமில்லா 24 மணிநேர உதவி எண் 1075-ஐ அழையுங்கள்.
Please call the 24x7 toll free National Helpline number 1075 for support, guidance, and response to health related queries on #COVID19.#SwasthaBharat#HealthForAll pic.twitter.com/ZsxBANaY6U
— Ministry of Health (@MoHFW_INDIA) March 23, 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 26ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களை உறுப்பினர் தேர்தலை தள்ளிவைக்க இந்திய தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஏப்ரலில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, உச்சநீதிமன்றத்தில் நேரடியான விசாரணை கிடையாது. வசர வழக்குகளை காணொலி காட்சி மூலம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களின் அறைகளுக்கு நாளை மாலை 5 மணிக்கு சீல் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் புதிதாக 81 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகம் ( ICMR) தெரிவித்துள்ளது. ICMR, மார்ச் 23ம் தேதி காலை 10 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டில் 415 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வீட்டில் உள்ளவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கான அரசின் கடுமையான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளிநாடு சென்று வந்த பயணிகளின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் கண்காணிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
#update: Though tracked,some of the travellers violate Govt’s strict order to #selfquarantine,thus becoming a threat for community transmission.The list of travelers is handed over to district admin & police for tracking,if anyone violates the order, legal action will be taken
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 23, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை பெரும்பாலான மக்கள் உதாசீனப்படுத்துவதாக தகவல்கள் வந்துள்ளன. தங்களை பாதுகாத்துக்கொண்டு தங்களை சார்ந்தவர்களையும் இந்த பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு நான் அவர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். மாநில அரசுகளும் இதுதொடர்பாக வகுக்கப்பட்ட விதிகளை தவறாது கடைபிடிக்கவேண்டும் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
लॉकडाउन को अभी भी कई लोग गंभीरता से नहीं ले रहे हैं। कृपया करके अपने आप को बचाएं, अपने परिवार को बचाएं, निर्देशों का गंभीरता से पालन करें। राज्य सरकारों से मेरा अनुरोध है कि वो नियमों और कानूनों का पालन करवाएं।
— Narendra Modi (@narendramodi) March 23, 2020
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு வரும் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மாவட்டங்களின் கலெக்டர்களுடன் முதல்வர் பழனிசாமி, வீடியோ கான்பரன்சிங்கில் ஆலோசனை நடத்த உள்ளார். இதன்பின்னர் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,436 ஆனது. அங்கு 59.138 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,000 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதனால் உயரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights