/tamil-ie/media/media_files/uploads/2020/04/New-Project-20.jpg)
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மிக முக்கியமாக கருதப்படும் ரேபிட் கிட் சாதனங்களை, தமிழகத்திற்கு கூடுதாலாக ஒதுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தொலைபேசியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த தொலைபேசி உரையாடலில் தமிழகத்திற்கு கூடுதல் ரேபிட் கிட் வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை வைத்ததார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மே, 3 வரை, அரசு அறிவித்த ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையில், கோடை வெயிலும் கொளுத்த துவங்கியுள்ளதால், 'வெளியில் சுற்ற வேண்டாம்' என, வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை, மற்றொரு ஊரடங்காக அமைந்துள்ளது. 'காலை, 11:00 முதல் மாலை, 3:00 மணி வரை, வெளியில் தலை காட்டாதீர்கள்' என, 10 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களாக, ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மார்ச், 24 முதல், மே, 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க, பொது மக்கள் யாரும் வெளியில் வராமல், வீட்டில் இருக்குமாறு, அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, இயற்கையும் உதவிக்கு வந்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு, ஏப்ரலிலேயே, கோடை வெயில் கொளுத்த துவங்கியது. தற்போது, அதன் உக்கிரம், நாள்தோறும் அதிகமாகி வருகிறது. அதன் காரணமாக, 'பொது மக்கள், பகலில் வெளியே வர வேண்டாம்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தமிழக அரசு சார்பில், 50 ஆயிரம் கருவிகள், மாநிலத்திலேயே பாதிப்பு அதிகமுள்ள சென்னை மாநகராட்சி சார்பில், 50 ஆயிரம் கருவிகள் வாங்குவதற்கான நடவடிக்கையை, கடந்த வாரமே அரசு மேற்கொண்டது. ஆனால், பன்னாட்டு அரசியல் காரணமாக, தமிழகத்திற்கு வரவேண்டிய கருவிகள் முழுமையாக வரவில்லை.இதற்கிடையே, 24 ஆயிரம், ரேபிட் டெஸ்ட் கருவிகள், சீனாவிடமிருந்து நேரடியாக தமிழகத்திற்கு வந்துள்ளன. தற்போது உள்ள கருவிகளை பாதிப்பு அதிகமுள்ள, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை ராஜிவ்காந்தி, சேலம், கோவை, திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு, கொரோனா அறிகுறியுடன் வந்தவர்களுக்கு, இந்தக் கருவி உதவியுடன் பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Coronavirus Latest LIVE Updates: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
பெங்களூரு நகரில் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதியில் மோதல்
* பாடராயனபுராவில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாடராயனபுராவில் ஏற்கனவே 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை தனிமைப்படுத்த போலீஸ் சென்றபோது மோதல் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவையை தொடங்குவது குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட பின்னரே , தனியார் விமான நிறுவனங்கள் முன்பதிவு சேவையை தொடங்க வேண்டும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சில தனியார் விமான நிறுவனங்கள் , முன்பதிவு சேவையை தொடங்கியுள்ளன. இது தொடர்பாக ஏர் ஏசியா நிறுவன ஆதிகாரிகள் கூறுகையில், ஊரடங்கு காலத்திற்கு பிறகான,பயணங்களுக்கு தான் முன்பதிவை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதனிடையே விமான பயணங்களுக்கான , டிக்கெட் முன்பதிவை தனியார் நிறுவனங்கள் தொடங்க கூடாது என விமான போக்குவரத்து துறை துணை இயக்குநர் சுனில் குமார் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று சீனாவிற்குள் தெரிந்தே நிகழ்ந்திருந்தால் அந்நாடு அதற்கான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இது சீனாவின் கட்டுப்பாட்டை மீறி நிகழ்ந்த தவறா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார். கொரோனா உயிரிழப்பு குறித்து சீனா கூறியுள்ள புள்ளிவிவரங்களின் மீது சந்தேகம் எழுப்பிய ட்ரம்ப் ஒரு லட்சம் பேருக்கு 0.33 இறப்பு என்பது சாத்தியமற்ற எண்ணிக்கை என்று கூறினார்.
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டம் இல்லை என்றும், ஊரடங்கு தொடர்வது அவசியம் என்றும் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 186 பேரும், எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தவர்கள் என்றார். டெல்லியில் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வருவதாகவும், எனினும் நிலைமை கட்டுக்குள் இருப்பதால் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், அரசின் உணவு விநியோக மையத்தில் பணியாற்றியவர் என்பதால், அந்த மையத்துக்கு வந்த அனைவருக்கும் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கெஜ்ரிவால் கூறினார்.
பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்’
கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ள பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்
கொரோனா பாதிப்பை மன உறுதியுடன் எதிர்கொண்டு 2 பத்திரிகையாளர்களும் மீண்டு வருவர்
- தமிழிசை சவுந்திரராஜன்,தெலங்கானா ஆளுநர்
ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் இளம் நடிகை ஒருவர் விவசாயப் பணிகளில் இறங்கியுள்ளார்.
நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். தும்பா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தற்போது ஹெலன் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம் அப்பா - மகள் உறவை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் கீர்த்தி பாண்டியன் உடன் அவரது தந்தை அருண் பாண்டியனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன், தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை உழும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் இன்று (ஏப்.19) மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்ட புதிய பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் #COVID__19 பாதிக்கப்பட்டவர்களின் விவரம்#Covid_19indiapic.twitter.com/mb1wLFWEa3
— PIB in Tamil Nadu 🇮🇳 #StayHome #StaySafe (@pibchennai) April 19, 2020
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், மாங்காடு, ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் பகுதிகளில் பொதுமக்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வெளியே வர அனுமதி என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா பொதுமக்களுக்கு புதிய காட்டுப்படுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அத்தியாவசிய தேவைகளுக்கு மாவட்ட உதவி எண்களை அழைக்க அறிவுறுத்தியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் லூக் மான்டேனியர் கூறியுள்ளார்.
இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் மிக அதிக அளவில் பாதித்தனர். அந்த நாடுகளில் சீனாவில் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிகமாக இருந்தது. அதேபோல, அமெரிக்காவிலும் ஏழு லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஹெச்ஐவி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக 2008 ஆம் ஆண்டு நோபல் பரிசுபெற்ற மான்டேனியர் ஃபிரெஞ்சுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்த வைரஸ் உருவானதாக அவர் கூறியுள்ளார்.
ஹெச்ஐவி வைரஸின் மூலக்கூறுகள் கொரோனா வைரஸின் மரபணுக் குறியீட்டில் இருப்பதாகக் கூறும் மான்டேனியர் ஊஹானில் உள்ள தேசிய உயிரிகாப்பக ஆய்வகத்தில் நடந்த விபத்தால் கொரோனா வெளிப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவி வரும் இச்சூழ்நிலையில் முககவசம் அணிவது அத்தியாவசியமாகி உள்ளது. இதனையொட்டி முன்னாள்,இன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் முககவசத்தின் அவசியத்தையும், வீட்டிலேயே முககவசத்தை தயாரிக்க மத்திய அரசின் ஆரோக்கிய சேது ஏப்பை பதிவிறக்கம் செய்யுமாறும் வலியுறுத்தும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெட்ரோல் நிலையங்களில் மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் என்று அனைத்திந்திய பெட்ரோல் டீலர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவை ஊழியர்களின் நலன் கருதி எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வெளி மாநில தொழிலாளர்கள் தற்போது தங்கியிருக்கும் மாநிலங்களை விட்டு வெளியேறக் கூடாது என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வெளி மாநில தொழிலாளர்கள் பணி பற்றி பதிவு செய்தபின் மாநில அரசு பணி தரலாம். வெளிமாநில தொழிலாளர்களை பணியிடங்களுக்கு அழைத்துச் செல்லும் முன்பு சுகாதாரத்துறையின் வழிமுறை பின்பற்றப்பட வேண்டும். வேறு மாநிலத்துக்கு பணிக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தப்போவதாக வரும் தகவல் உண்மை அல்ல. ஓய்வூதியத்தை குறைக்கவோ, நிறுத்தவோ மாட்டோம். ஓய்வூதியதாரர்களின் நலனை பூர்த்தி செய்வதில் உறுதி பூண்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
விழுப்புரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை டெல்லி இளைஞர் சென்றதால் நோய் பரவல் ஏற்பட்டதா என அச்சம் உருவானது. விழுப்புரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, வந்த பரிசோதனை முடிவில் கொரோனா உறுதி என்றதால்
அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அவர் மீது நோய் தொற்று பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி இளைஞரின் ரத்த மாதிரி சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதைத் தொடர்ந்து, அவர் விழுப்புரத்தில் கொரோனா வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்: நாடு முழுவதும் எப்போது ரயில், விமான சேவை தொடங்கும் என விவாதிப்பது பயனற்றது. ரயில், விமான சேவையை எப்போது தொடங்குவது என்பது பற்றி மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மே 3ம் தேதி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் காணொலி காட்சி மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உள்ளிட்டவைகளுக்கு கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதப்பிரச்சாரம் செய்ததாக வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் திண்டுக்கலில் கைது ஆகியிருந்தனர். அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் . அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு பணி பற்றி தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல்கள்; முதலமைச்சர் முதல் அதிகாரிகள் வரை குழம்பி, தடுமாறுவது ஏன்?; தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பாெதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ( ஏப்ரல் 19ம் தேதி) துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்.
சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 96 ஆயிரத்து 488 பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் அதிகபட்சமாக 7 லட்சத்து 38 ஆயிரத்து 792 பேர் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். அங்கு ஒரே நாளில் ஆயிரத்து 891 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 39 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய அரசு அறிவித்த சில தளர்வுகள் நாளை அமலுக்கு வரும் நிலையில், புதிய உத்தரவு வரும் வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வல்லுநர் குழுவின் ஆலோசனைகள் நாளை முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டு அதன் பின்னரே அறிவிப்பு வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 15,712 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மொத்தமுள்ள 15,712 பேரில் (12,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2231 பேர் குணமடைந்துள்ளனர். 507 பேர் மரணமடைந்துள்ளனர்) தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் சபரிமலையில் சித்திரை மாத பூஜைக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த 13ம் தேதி மாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அன்று பூஜைகள் இல்லை. இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.14ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்த பின்னர் விஷூ கனி தரிசனம், தொடர்ந்து கணபதி ேஹாமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. வழக்கத்தை விட நடை திறக்கும் நேரம் பாதியாக குறைக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights