2 judges travelling over 2000 km by road to assume charge as HC chief justices : கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 40 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. பயணங்கள், பொது இடங்களில் கூடுதல், பொது வழிபாடு ஆகியவற்றிற்கு பலத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா மற்றும் அலகாபாத் நீதிமன்றங்களில் பணியாற்றும் இரண்டு நீதிபதிகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக மாற்ற குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது கொலீஜியம்.
Advertisment
வியாழக்கிழமை நீதிபதிகளுக்கான பதவி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். இந்நிலையில் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள நீதிபதிகள் இருவர் 2000 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ள்ளனர்.
கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த தீபன்கர் தத்தா பம்பாய் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அடைந்துள்ளார். அவர் தன்னுடைய குடும்பத்தினருடன் 2000 கி.மீ பயணம் செய்து கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு பயணமாகியுள்ளார். சனிக்கிழமை காலை கிளம்பிய இவர்கள் இன்று மதியம் மும்பையை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போன்று, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்துக் கொண்டிருந்த பிஸ்வநாத் சோமாதர், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அவரும் உத்திர பிரதேசத்தில் இருந்து கொல்கத்தா மார்கத்தில் ஷில்லாங்கிற்கு சாலை வழியே பயணமானார். தன்னுடைய மனைவியுடன் வெள்ளிக்கிழமை மாலை அவர் பயணமானது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
இவ்விரு நீதிபதிகளும், கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 2006ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.