Advertisment

ஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா? தயங்கும் மாநில அரசுகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஏப்.14-க்கு பிறகு முடக்கம் முடிவுக்கு வருமா? தயங்கும் மாநில அரசுகள்

இந்தியா கொரோனா வைரஸ் தொற்றின் மொத்த எண்ணிக்கையில் (4,281 ), மூன்றின்  ஒரு பங்கைக் கொண்டிருக்கும் ( 1,367 ) ஏழு மாநிலங்கள், 21 நாட்கள் பொது முடக்கத்திற்குப்பின்பும் சில கட்டுப்பாடுகளை நீட்டிக்கவிருப்பதாக, கடந்த திங்களன்று சுட்டிக் காட்டியுள்ளன.

Advertisment

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் 21 நாட்கள் பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அடுத்த செவ்வாய்க்குப் பின், ஊரடங்கு தளர்வு குறித்த முடிவுகள் எடுக்க  முடியாத சூழ்நிலையில் இருப்பதாக மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திர பிரேதேசம், அசாம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களும் தெரிவித்துள்ளன.

அதிகபட்ச எண்ணிக்கையை (748) பதிவு செய்துள்ள மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, புனே  போன்ற ஹாட்ஸ்பாட் பகுதிகளில் பொது முடக்கத்தை  நீட்டிக்க வாய்ப்புள்ளது. டெல்லியில் நடந்ததப்லிக் ஜமாத் மாநாட்டுக்குப் பின் (305 இல் 159) தொற்று எண்ணிக்கை அதிகாரத்தைத் தொடர்ந்து, “21 நாட்கள் பொது முடக்கம் நீக்குவது குறித்த முடிவில் நிச்சயமற்ற நிலை உருவாகி உள்ளதாக உ.பி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

274 எண்ணிக்கையைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலம், "21 நாட்களுக்குப் பிறகு, உயர் ஆபத்துள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று தெரிய வருகிறது. இதன்மூலம், பிராந்தியம் வாரியாக பொது முடக்க உத்தரவுகளை தளர்த்தும் யுக்திகளை செயல்படுத்த இருக்கிறது.

அதே நேரத்தில், சத்தீஸ்கர் (10) முதலமைச்சர் பூபேஷ் பாகேல்," 21 நாட்கள் பொது முடக்கத்திற்குப் பின், மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைகளை நீக்க வேண்டாம்" என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், மத்திய பிரேதேசம் மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்,"ஏப்ரல் 15 முதல் கோதுமை கொள்முதல் தொடங்கும்" என்று தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்: “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கத்தைத்  தவிர வேறு எந்த ஆயுதமும் நம்மிடம் இல்லை. பொது முடக்கத்தை மேலும் நீட்டிக்குமாறு நான் பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன், அதை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன்.  பொருளாதார இழப்பை  ஆறு மாதங்கள் (அ) ஒரு வருடத்திற்குள் மீட்டுவிடலாம், ஆனால் உயிர்கள் இழந்தால், அவற்றை மீண்டும் கொண்டு வர முடியாது” என்று தெரிவித்தார்.

 

6, 2020

மேலும், இந்த செய்தியாளர்கள் சந்திப்பில்,"ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவில் கோவிட் -19 எண்ணிக்கைகள் கடும் உச்சத்தைத் தொடும் என்று மதிப்பிடப்பட்ட அறிக்கையையும் அவர் மேற்கோள் காட்டினார்.

மகாராஷ்டிரா மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப், "மும்பை, புனே போன்ற பிராந்தியங்களில் எண்ணிக்கை  அதிகமாக இருப்பதால், மிகுந்த கவனத்துடன் நாம் செயல்பட வேண்டியுள்ளது ..... எனவே, ஏப்ரல் 15 முதல் பொதுமுடக்கம் முழுமையாக தளர்த்தப்படும் என்று யாரும் கருத வேண்டாம்" என்றார்.

அசாம் சுகாதார மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாகூறுகையில், “பொது ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்பு , அசாம் மாநிலத்திற்குள் ​வர விரும்புவோர் மீது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் . தற்காலிக காலத்திற்கு மட்டும், இன்னர்  லைன் பெர்மிட் முறையை செயல்படுத்தும் சூழ்நிலை எங்களுக்குத் தேவைப்படலாம், ” என்று தெரிவித்தார்.

ஐ.எல்.பி (இன்னர் லைன் பெர்மிட்) என்பது நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் மிசோரம் ,  மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், வெளியாட்கள்  நுழைவை ஒழுங்குபடுத்தும் ஒரு ஆவணமாகும்.

ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் திரும்பி வந்தால், தனிமைப்படுத்தலை ஏற்பாடு செய்வது ஒரு பிரச்சினையாக மாறும். மக்கள்  சில குழுக்களாக மட்டும் அனுமதிக்கப் படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நிலைவாரியாக ஊரடங்கில் தளர்வு ஏற்படலாம் என்று சுட்டிக்காட்டிய அடுத்த நாளே , இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

“கடந்த மூன்று- நான்கு நாட்களில், தப்லிக் ஜமாத் தொடர்பான 159 பேருக்கு கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன . இந்த உயர்வைத் தொடர்ந்து, மாநிலத்தில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, ”என்று கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி கூறினார்.

இதற்கிடையில், அதிக ஆபத்து நிறைந்துள்ள பகுதிகளில்,  கடுமையான பொது முடக்கத்தை அமல்படுத்த இருக்கும் ராஜஸ்தான்,  மாநிலத்தின் ஊரடங்கு தளர்வு மூலோபாயத்தை வகுக்க குழு ஒன்றை அமைத்துள்ளது

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளன என்ற திருப்தி  அரசாங்கத்திற்கு வந்த பின்னரே, பொது முடக்கத்திற்கான தளர்வை நீக்குவது குறித்து யோசிப்போம். இல்லையெனில், தளர்வை சிறிது காலம் தாமதப்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.

21 நாட்கள் பொது முடக்கத்திற்கான தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் மாநிலத்திற்கு வருவார்கள்… அதிர்ஷ்டவசமாக, ஜார்க்கண்டில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் கிராமப்புறங்கள் சார்ந்தது. ஏற்கனவே , அங்கு மக்கள் அடர்த்தி குறைவு.கொவிட் -19 பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஒரே தீர்வு. மேலும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் நாங்கள் தயாராக இருக்க வேண்டும்,”என்றும் தெரிவித்தார்.

256 வழக்குகள் மற்றும் 14 இறப்புகளை பதிவு செய்துள்ள மத்திய பிரேதேசம் முதல்வர், வீடியோ மாநாட்டின் போது," ஏப்ரல் 14க்குப் பின், ஊரடங்கில்  ரத்து  செய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மேலும், கோதுமை கொள்முதல் திட்டங்களை மறுஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.  அதிகமான கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு மே மாதம் 31க்குள் செயல்முறை முடிக்கப்படும். மக்கள் கூடுவதைத் தவிர்க்க இந்தூர், போபால் , உஜ்ஜைன் போன்ற மாவட்டங்களின் உள்ள நகர்ப்புற மையங்களில் கொள்முதல் தொடங்காது என்றும்  கூறினார்.

ஏப்ரல் 14 க்குப் பிறகு, விரிவான கலந்துரையாடலுக்குப்பின்பு,  மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை அனுமதிப்பது தொடர்பான முடிவை எடுக்குமாறு “ சத்தீஸ்கர், முதலமைச்சர் பாகேல்பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடித்தத்தில்,மருத்துவமையில் அனுமதிக்கப் பட்ட 10 பேரில் எட்டு பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர், “ஏப்ரல் 14 க்குப் பிறகு, ரயில்கள், விமானப் போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான சாலைப் போக்குவரத்து தொடங்கப்பட்டால், பிற மாநிலங்களிலிருந்து கொவிட் -19 நோய்த்தொற்று கொண்ட மக்கள்,  சத்தீஸ்கர் மாநிலத்திற்குள் வரக் கூடிய சூழல் உருவாகும்.  இதன் மூலம் அரசு புதிய சிரமங்களை சந்திக்கக்கூடும்” தெரிவிக்கப்பட்டிருந்தது

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment