கடந்த மார்ச் 24ம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் நடவடிக்கையாக, 21 நாள் எல்லை மூடலுக்கு அழைப்பு விடுத்தார்.
ஒட்டுமொத்த தேசமும் முழுமையான எல்லை மூடலின்கீழ் கொண்டுவரப்பட்டது. 21 நாட்களுக்கு மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வரக்கூடாது என முழுமையாகத் தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து, மற்ற நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன.
அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தொடர்ந்து சுமூகமாகக் கிடைப்பதை உறுதிசெய்தாலும், தினசரி கூலித் தொழிலாளர்கள், வறுமைப்பிடியில் இருக்கும் மக்கள், புலம்பெர்யர்ந்தோர், சாலையோரங்களில் வாழும் மக்கள் இந்த எல்லை மூடலால் அவதியுற்றனர்/அவதியுற்றும் வருகிறனர். குறிப்பாக டெல்லி, மகராஷ்டிரா, உத்தர்பிரேதேசம், பீகார், ராஜஸ்தான், குஜாராத் போன்ற வடமாநிலங்களில் இவர்களின் நிலைமை சமூக ஊடகங்களில் அதிகாமாக பகிரப்பட்டது.
ரொட்டி வங்கியை நாடிய மும்பை போலிஸ்: இந்நிலையில், பல்வேறு சமூக பிரச்சனைகளை மிகவும் சாதூரியமாக கையாளும் மும்பை காவல்துறை, தற்போது இந்த 21 நாள் எல்லை மூடல் பிரச்சனையிலும் தனது தனித்தன்மையை காண்பித்துள்ளது.
அதன் படி, மகாராஷ்டிரா காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குனர் டி .தனுஷ்கோடி சிவானந்தன் நடத்தும் நடத்தும் ‘ரொட்டி வங்கி’ என்ற அறக்கட்டளையோடு இணைந்து, மகாராஷ்டிரா சாலையோரத்தில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மும்பை காவல்துறையினர் உணவளித்து வருகின்றனர்.
தனுஷ்கோடி சிவானந்தன்
பொள்ளாச்சி தாலுகாவைச் சேர்ந்த தனுஷ்கோடி சிவானந்தன் மும்பை காவல்துறை மத்தியில் மிகவும் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். இவர் 2010 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா காவல்துறையின் தலைமை இயக்குனராக பதவி உயர்வு பெற்றார்.
மும்பை காவல்துரையினரின் இந்த செயல்பாடுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தனுஷ்கோடி சிவானந்தன் இதுகுறித்து கூறுகையில், " கடந்த இரண்டரை ஆண்டுகளில் இருந்து வீடற்றவர்களுக்கும், சேரி பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கும், ஒவ்வொரு நாளும் 6,000 க்கும் மேற்பட்ட உணவுகளை தவறாமல் வழங்கி வருகிறோம்.

21 நாள் எல்லை பூட்டு அறிவிப்பின் காரணமாக எங்கள் சேவைகள் தடைபட்டுள்ளது. காவல்துறையினருடன் இணைந்து செயல்படுவதன் மூலம், உணவு பார்சல் மீண்டும் விநியோகிக்க முடிகிறது, "என்று தெரிவித்தார்.