Advertisment

முடிவுக்கு வருமா இந்த நீண்ட பயணம் ? புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு புகைப்படத் தொகுப்பு

தொலை தூரத்தில் இருந்து அழைக்கும் வீட்டின் நினைவுகளை சுமந்து கொண்டு பறக்கும் சிறகற்ற பறவைகளின் புகைப்படத் தொகுப்பு இங்கே.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bihar CM Nithish Kumar talks about migrant workers

Bihar CM Nithish Kumar talks about migrant workers

coronavirus lockdown migrant crisis Indian express special photo gallery : கொரோனா கொல்லும் வியாதியா என்று கேட்டால் தெரியவில்லை. ஆனால் பசியும் வறுமையும் உயிரைக் கொல்லும் நோய் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். ரயில்வே தண்டவளாஙக்ளில், சாலைகளில், லாரிகளில் எங்கு பார்த்தாலும் புலம் பெயர் தொழிலாளர்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிகின்றார்கள். தொலை தூரத்தில் இருந்து அழைக்கும் வீட்டின் நினைவுகளை சுமந்து கொண்டு பறக்கும் சிறகற்ற பறவைகளின் புகைப்படத் தொகுப்பு இங்கே.

Advertisment

மேலும் படிக்க : சென்னையில் இருந்து உ.பி.க்கு நடந்தே சென்ற இளைஞர்… வீட்டை அடையும் முன்னே உயிரிழந்த சோகம்!

போதுமான உணவு இல்லாமல், நீண்ட தூர பயண களைப்பால், ஏற்கனவே உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாததால் செல்லும் வழியிலேயே பலர் உயிரிழக்கின்றனர். சில நேரங்களில் ரயிலில் அடிபட்டு,சாலை விபத்தில் சிக்கியும் மாண்டு போகின்றார்கள். நம் நகரங்கள் மூச்சு விட காரணம் இவர்களின் உழைப்பு தான். ஆனால் இன்று இவர்கள், எங்கிருந்து வறுமையை போக்க நகரங்களுக்கு சென்றார்களோ, அங்கேயே தன் வறுமையை தன் தலைகளிலும், தோள்களிலும் சுமந்து கொண்டு , நடந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் சூட்கேஸை தலையில் வைத்துக் கொண்டு நடப்பது அனைவருக்கும் எளிது. ஆனால் அந்த வறுமையை ஒழிக்க அரசு தான் முயல வேண்டும். 20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார திட்டங்கள் அவர்களுக்கு கை கொடுக்கும் என்று நம்புவோம்.

மேலும் படிக்க : உறங்கும் குழந்தையை சூட்கேஸில் படுக்க வைத்து இழுத்துச் செல்லும் தாய் (வீடியோ)

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், களத்தில் நின்று பணியாற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் புகைப்பட செய்தியாளர்கள் எடுத்த புகைப்படங்கள், புலம் பெயர் தொழிலாளர்களின் அவல நிலையை நமக்கு எடுத்துச் சொல்கிறது.

மும்பை 

நவி மும்பையில் அமைந்திருக்கும் கோப்பர் கைரனே பகுதியில் ப்ளம்பர்களாக பணியாற்றி வருபவர்கள் ரஞ்சித் குமார் (25), ஸ்வாமி சரண் (28). இவர்களின் சொந்த ஊர் ஒரிசாவில் இருக்கும் கட்டாக். வேலையை இழந்து வாடி வரும் இவர்கள், தங்களின் சொந்த மாநிலத்திற்கு ரயில்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் சைக்கிளில் இருவரும் பயணித்து வருகின்றனர். மும்பை-நாசிக் தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் பயணிக்கும் காட்சி. Express photo by Nirmal Harindran

coronavirus lockdown migrant crisis Indian express special photo gallery மும்பை - நாசிக் நெடுஞ்சாலையில் நடக்கும் ரஞ்சித் குமார் (25) மற்றும் ஸ்வாமி சரண் (28)

டெல்லி

புதுடெல்லியின் சீலம்பூரில் இருக்கும் ஜீன்ஸ் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் சொஹைல் (19) மற்றும் அஸ்லாம் (17). இவர்களின் சொந்த ஊர் பிஹாரில் இருக்கும் கத்திஹார். சீலம்பூரில் இருந்து காசியாபாத் வந்தால் அங்கிருந்து பிஹாருக்கு லாரி அல்லது ட்ரெக்கில் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தோடு வீட்டில் கிளம்பிய இருவராலும் காசியாபாத்திற்கு பேருந்தினை பிடிக்க முடியவில்லை. நாள் முழுக்க நடந்து களைத்துப் போன அவர்கள், சாலை ஓரமாக இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் தங்கள் உடமைகளுடன் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். Express Photograph by Tashi Tobgyal

 

coronavirus lockdown migrant crisis Indian express special photo gallery பேருந்து நிறுத்தத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் அஸ்லாம் (17) மற்றும் சொஹைல் (19)

டெல்லி

மத்தியப் பிரதேசம் சாகரில் வசித்து வந்த ராகவேந்திரா அஹிர்வால் (30) தன் குடும்பத்தினரோடு இந்த ஜனவரி மாதம் டெல்லிக்கு வந்தார். தன்னுடைய சொந்த ஊரில் வாங்கியிருந்த கடனை திருப்பி செலுத்துவதற்காக டெல்லிக்கு வந்த அவர், வேலை பறிபோன காரணத்தால் மீண்டும் தன் சொந்த ஊர் நோக்கி பயணமாகியுள்ளார். காசியாபாத் வரை சென்றால், அங்கிருந்து சாகருக்கு சென்றுவிடலாம் என்று எண்ணி கிளம்பிய அவர்களுக்கு பேருந்துகள் கிடைக்கவில்லை. தன் குடும்பத்தினருடன் சாலையின் ஓரமாக அமர்ந்திருக்கும் காட்சி. Express Photograph by Tashi Tobgyal

coronavirus lockdown migrant crisis Indian express special photo gallery தன் குடும்பத்தினருடன் சாலையின் ஓரமாக அமர்ந்திருக்கும் ராகவேந்திரா அஹிர்வால் (30)

ஹரியானா

ஹரியானாவின் தாத்ரி ரயில்வே நிலையத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் இருக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள். தங்களின் சொந்த மாநிலங்களுக்கு பேருந்துகள் மற்றும் ரயில் போக்குவரத்து எப்போது துவங்கும் என்று காத்துக் கொண்டிருக்கும் காட்சி. Express photo by Gajendra Yadav

coronavirus lockdown migrant crisis Indian express special photo gallery coronavirus lockdown migrant crisis Indian express special photo gallery

நொய்டா

நொய்டா செக்டார் 51-ல் இருக்கும் மெட்ரோ நிலையத்தில் கூடிய நூற்றுக் கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள். Express photo by Abhinav Saha

coronavirus lockdown migrant crisis Indian express special photo gallery நொய்டா மெட்ரோ நிலையத்தில், தங்களின் சொந்த ஊருக்கு செல்ல காத்திருக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள்.

மகாராஷ்ட்ரா

புனே புறநகர் பகுதியான கரடியில் இருந்து தங்களின் சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது காத்திருக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள். Express photo by Ashish Kale

coronavirus lockdown migrant crisis Indian express special photo gallery

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment