உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக பயணிகள் விமான சேவைகளை தொடங்குவது குறித்து அரசாங்கம் முடிவுக்கு பின்னர், முன்பதிவு சேவையை தொடங்குமாறு உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சனிக்கிழமை தெரிவித்தார்.
"உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகைகள இயக்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என்பதையம் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டரில் தெளிவுபடுத்தியிருந்தார்.
முன்னதாக, மே 4 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களிலும், ஜூன் 1 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச விமானங்களிலும் முன்பதிவு சேவையைத் தொடங்க உள்ளதாக ஏர் இந்தியா விமானம் அறிவித்தது.
நான்கு நாட்களுக்கு முன்பு, மே 4 முதல் படிப்பாடியாக விமான சேவைகளை தொடங்க இருப்பதாக இன்டிகோ விமானம் அறிவித்திருந்தது. தனியார் கேரியர் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களில் முன்பதிவு செய்து வருகிறது.
இந்தியாவில், முதலாவதாக 21 நாள் பொது முடக்கம் ஏப்ரல் 14, 2020 அன்று நடைமுறையில் இருந்தது. இந்த பொது முடக்கம் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல். 14 அன்று நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக பயணிகள் விமான சேவைகள் இந்த பொது முடக்க காலத்தில் நிறுத்தப்பட்டன.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு உதவும் வகையில், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும் அத்தியாவசிய மருத்துவ சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்ளும் உயிர்காக்கும் உடான் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, ஏப்ரல் 30 வரை உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான முன்பதிவு சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஏர் இந்தியா விமான நிலையம் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி அறிவித்தது.
இந்நிலையில் நேற்று (ஏப்ரல். 18), ஏர் இந்தியா அதிகாரிகள், "உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகள் விமான சேவைகள், முறையே மே 3 மற்றும் மே 31 வரை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவித்தனர்.
ஏப்ரல் 14 ஆம் தேதி, இன்டிகோ, மே 4 முதல் படிப்பாடியாக தொடங்குவதாக அறிவித்தது. ஆரம்பத்தில் முக்கியமான உள்நாட்டு வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படும் என்றும், பின்னர் சேவைகள் படிப்படியாக முன்னேறும் என்றும் தெரிவித்தது.
பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது பொது முடக்கத்தை மே.3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாக அறிவித்த அதே நாளில் தான் இன்டிகோ விமான நிறுவனத்தின் அறிக்கையும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் தான், அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி-ன் நேற்றைய ட்வீட் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil