Lokpal member Justice AK Tripathi death: கொரோனா பாதிப்பால் லோக்பால் உறுப்பினர் நீதிபதி ஏ.கே.திரிபாதி மரணம் அடைந்தார். இவர் லோக்பால் அமைப்பின் 4 உறுப்பினர்களில் ஒருவர். இந்தியாவில் உயர் பதவியில் உள்ள ஒருவர் கொரோனாவுக்கு பலியாவது இதுவே முதல் முறை.
Advertisment
நீதிபதி (ஓய்வு) ஏ.கே.திரிபாதி, இந்தியாவில் ஊழலை ஒழிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமைப்பான லோக்பால் அமைப்பின் உறுப்பினர் ஆவார். அவரையும் சேர்த்து மொத்தம் இந்த அமைப்புக்கு 4 உறுப்பினர்கள்.
இந்தியா மட்டுமல்லாது உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று தாக்குதலால் நீதிபதி ஏ.கே.திரிபாதியும் பாதிக்கப்பட்டார். சனிக்கிழமை ( மே 2) அவர் மரணம் அடைந்தார்.
உயர் பதவியில் உள்ள ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியிருப்பது இந்தியாவில் இது முதல் முறை. இவரது மரணம் நாடு முழுவது அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான அஜய்குமார் திரிபாதி, கொரோனா பாதிப்புடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏப்ரல் மாதம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சில தினங்களாக அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் இருந்தார்.
சனிக்கிழமை இரவில் 9 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். மரணம் அடைந்த ஏ.கே.திரிபாதி வயது 52. நீதித்துறை பிரமுகர்கள் பலரும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"