/tamil-ie/media/media_files/uploads/2020/05/template-2020-05-15T072325.058-1.jpg)
Covid-19 Cases Update: தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சைகளின் மூலம் குணமடைந்து ஒரேநாளில் 939 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
இந்தியாவின் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது சீனாவை தாண்டியுள்ளது. சமிபத்திய, நிலவரப்படி நாடு முழுவதிலும் மொத்தம் 85,761 பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் புதிதாக 3,967 பேர் கொரோனா நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டு இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று, ஒரே நாளில் 100 பேர் உயிர் இழந்ததை அடுத்து, கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,649 ஆக அதிகரித்துள்ளது. இந்த நோய் இரட்டிப்பாகும் கால அளவு, கடந்த மூன்று நாட்களில் 13.9 ஆக இருந்தது. தற்போது 13 ஆக குறைந்துள்ளது.
கொரோனாவை எதிர்கொள்ள நாட்டில் 18,885 வென்டிலேட்டர்கள் கைவசம் உள்ளதாகவும், 84.22 லட்சம் N95 முக கவசம் மற்றும் 47.98 கவச உடைகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / மத்திய அரசு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் அளித்த 3வது பகுதி அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Coronavirus Live Updates : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய செய்திகளை இந்த லிவ்வே ப்ளாக்கில் காணலாம்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதுவரை இல்லாத அளவில் இன்று அதிக நபர்கள் குணமாகியிருப்பதாக அமைச்சர் தெரிவித்த புள்ளிவிவரம் கூறுகிறது.
கொரோனாவுக்கு பின்னான காலங்களில் இருக்கும் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன் நான்காவது நாள் அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகிறது. இது தொடர்பான முழுமையான தகவல்களை படித்து தெரிந்து கொள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.
வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு அல்லது நாளை காலை ஆம்பன் புயலாக உருமாற உள்ளது. இந்நிலையில் கடலோர காவல்துறையினர் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் ஐ.சி.ஜி. கப்பல்கள், கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் கப்பல்களை, எச்சரிக்கை செய்து துறை முகங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது.
In view of cyclone build-up, Indian Coast Guard has initiated various measures in co-ordination with West Bengal&Odisha. ICG vessels are directing fishing boats to return to harbour&giving warming in local language: CPRO Kolkata,Directorate of Public Relations,Ministry of Defence pic.twitter.com/U7fgmpOyPu
— ANI (@ANI) May 16, 2020
சென்னையில் 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களின் பட்டியலை கேட்கிறது பள்ளிக் கல்வித்துறை. மாநிலம் முழுவதும் இது தொடர்பான கணக்கெடுப்பு தீவிரம்
பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான கொரோனா தடுப்பு உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மீட்பு பணிகளின் போது சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம் எனவும் தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவித்துள்ளது. சீல் வைக்கப்பட்ட இடங்களில் புயல் எச்சரிக்கை இருந்தால் மக்கள் அனைவரையும் உடனடியாக இடம் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை.
நாம் அனைவரும் ஒன்றாக இணைந்தே இந்த கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறோம். இது போன்ற நேரத்தில் உலக்க நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து கொரோனா இல்லாத, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்க வேண்டும் என டொனால்ட் ட்ரெம்ப் ட்வீட்டிற்க்கு பதில் அளித்துள்ளார் மோடி.
Thank you @POTUS @realDonaldTrump.
This pandemic is being fought collectively by all of us. In such times, it’s always important for nations to work together and do as much as possible to make our world healthier and free from COVID-19.
More power to 🇮🇳 - 🇺🇸 friendship! https://t.co/GRrgWFhYzR
— Narendra Modi (@narendramodi) May 16, 2020
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 701 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக திரு.வி.க. நகர் மண்டலத்தில் 119 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக 5, 946 நபர்களுக்கு கொரோனா நோய் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பதே அரசின் நோக்கம் ஆனால் பூரண மதுவிலக்கு என்பதை உடனடியாக அமல்படுத்த முடியாது. டாஸ்மாக்கை மூடுவதால் வருவாய் இழப்பு ஏற்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தோம் என்றும் அவர் கூறினார்.
முடிதிருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு ரூ. 2000 நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கும் இந்த நிதி உதவி அளிக்கப்படும் என்றும் அறிவிப்பு
தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளியூரில் சிக்கித் தவிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள் 3 நாளுக்கு முன்பே அழைத்து வந்து தனியார் பள்ளி விடுதியில் தங்க வைக்கப்படுவர் என்று தமிழக கல்வித்துறை அமைச்சார் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சிபிஎஸ்இ, 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடக்கநிலை காரணமாக முக்கியமான 29 படங்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வை நடத்த உள்ளதாக ஏப்ரல் 1 ம் தேதி சிபிஎஸ்இ அறிவித்தது. வகுப்புவாத கலவரம் காரணமாக பரீட்சைக்கு வரமுடியாத வடகிழக்கு டெல்லி மாணவர்களுக்காக மட்டும் 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படும்.
கடலூர் பேருந்துநிலையம் அருகே உள்ள மதுக்கடையில் போலி டோக்கன் மூலம் மதுபானங்கள் வாங்க முயன்ற 16 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
சமூக விலகல் நெறிமுறையை பராமரிக்கும் முயற்சியாக, ஒரு மதுக்கடை 500 டோக்கன்களை மட்டுமே வினியோகிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் முதல் கூட்டம் தலைமை செயலகத்தில் தொடங்கியது. கொரோனா பெருந்தொற்றால் ஜப்பான், தென் கொரியா, தைவான், சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்புக்குழுவை முதல்வர் பழனிசாமி முன்னதாக அறிவித்தார்.
ஊரடங்கு ஒருபுறம்...இரை தேடும் பறவைகள் மறுபுறம்...
தருமபுரியில் இருந்து ஒரு செய்தித் தொகுப்பு...#Corona #TamilNadu #StayHome #India #தமிழகம் pic.twitter.com/gfRyR8aSvw
— AIR News Chennai (@airnews_Chennai) May 16, 2020
நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.இதன்மூலம், மாவட்டத்தின் மோதட எண்ணிக்கை 176 ஆக உயர்ந்தது. முன்னதாக, நேற்று நெல்லை மாவட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வந்த 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, தென்காசி மாவட்டத்திலும் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பாதிப்பு மிக லேசாக / அறிகுறி தென்படுவதற்கு முந்தைய நிலையில் வீடுகளிலேயே தனிமைப்படுத்தலுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது.
அறிகுறிகள் தோன்றியதில் இருந்து (அல்லது அறிகுறி தென்படுதலுக்கு முந்தைய நிலையில் மாதிரி எடுத்த தேதியில் இருந்து) 17 நாட்கள் கழித்து மற்றும் காய்ச்சல் குணமாகி 10 நாட்கள் கழித்து வீட்டில் தனிமைப்படுத்தல் நிலையை முடித்துக் கொள்ளலாம். வீட்டில் தனித்திருப்பதற்கான காலம் முடிந்த பிறகு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
சிறப்பு திட்டமாக ரூ.20 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டமைக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அறிவித்த திட்டங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசின் நடவடிக்கைகளால் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் செல்லும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது சீனாவை தாண்டியுள்ளது. சமிபத்திய, நிலவரப்படி நாடு முழுவதிலும் மொத்தம் 85,761 பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் புதிதாக 3,967 பேர் கொரோனா நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டு இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று, ஒரே நாளில் 100 பேர் உயிர் இழந்ததை அடுத்து, கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,649 ஆக அதிகரித்துள்ளது. இந்த நோய் இரட்டிப்பாகும் கால அளவு, கடந்த மூன்று நாட்களில் 13.9 ஆக இருந்தது. தற்போது 13 ஆக குறைந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights