Advertisment

கொரொனாவில் இருந்து சிறைக் கைதிகளை காப்பாற்ற என்ன நடவடிக்கை? உச்சநீதிமன்றம் கேள்வி

உத்தர பிரேதேசம், லடாக், ஜம்மு-காஷ்மீர் போன்ற இடங்களில் புதிய வழக்குகள்  பதிவானதையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸின் எண்ணிக்கை 114- ஆக உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Health officials worry coronavirus untraceable clusters emerge

கொரோனா வைரஸ் தொற்று: நேற்று, ஞாயிற்றுக்கிழமை  ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் 26 புதிய வழக்குகள்  பதிவானது. இன்று கேரளா, உத்தர பிரேதேசம், லடாக், ஜம்மு-காஷ்மீர் போன்ற இடங்களில் புதிய வழக்குகள்  பதிவானதையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸின் எண்ணிக்கை 114- ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

இந்தியாவில்,13 பேர் குணமடைந்த நிலையில், இரண்டு பேர் இறந்துள்ளனர்.

இதுவரை, கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 5,800 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1,68,000 ஐத் தாண்டியுள்ளது.

ராஜஸ்தானில் இந்திய மறுத்தவர்கள் முயற்சி வெற்றி:   இரண்டாவது வரிசை எச்.ஐ.வி மருந்து கொடுக்கப்பட்ட இத்தாலிய தம்பதியினர் இருவரும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்போது குணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் : இந்தியாவில் பரிசோதனை மையங்கள் போதுமானவையா?

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் தனது ட்வீட்டில், " எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் இணை நோயுற்ற தன்மை (நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம்) உள்ள 2 மூத்த குடிமக்கள் உட்பட 3 கொரோனா நோயாளிகள் வெற்றிகரமாக சிகிச்சை பெற்றுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பாராட்டத்தக்க மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக எஸ்.எம்.எஸ் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் ”என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் ட்வீட் செய்துள்ளார்.

மேலும், விவரங்களுக்கு : எய்ட்ஸ் மருந்தால் குணமான கொரோனா: இந்திய மருத்துவர்கள் முயற்சி வெற்றி

ஓடிசாவில் முதல் கொரோனா வைரஸ் வழக்கு: ஒடிசா மாநிலம் தனது முதல் கொரோனா வைரஸ் வழக்கை சந்தித்துள்ளது. 33 வயதுடை அவர், இத்தாலி நாட்டிற்கு சமீபத்தில் பயணம் செய்தவர்.

தமிழ்நாடு: கொரோனா பரவாமல் தடுக்க சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்" என வழக்கறிஞர் சூரியபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். சுகாதாரமற்ற முறையில் பார்கள் இயங்குகின்றன எனவும், அதனால் கொரோனா வைரஸ் பரவ 90 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடி கொரோனா பாதித்து பலி ஆனவர்களுக்கான இழப்பீட்டை ரூ.10 லட்சமாக அதிகரிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆனந்த் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும், குழந்தைகளுக்கு தேவையான சத்துணவை தயாரித்து வீடுகளுக்கு சென்று வழங்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, வேலூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக திருவிழாக்கள், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தடை விதித்துள்ளார்.

கமல்நாத் ஆட்சியைக் காப்பாற்றிய கொரோனா வைரஸ்:  மத்தியப் பிரதேச சபாநாயகர் என். பி பிரஜாபதி சட்டமன்றம் துவங்கிய ஒரு மணி நேரத்திற்குள், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சபை நடவடிக்கையை வரும்  26 வரை ஒத்திவைப்பதாக தெரிவித்தார்.

ஆளுநர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் அமர்வின் முதல் நாளான இன்று, கமல்நாத் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் தொற்றை மேற்கோள் காட்டி சபாநாயகர் மார்ச் 26 வரை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார். பாஜக எம்.எல்.ஏக்களைத் தவிர, சபாநாயகர், முதல்வர் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று சபையில் கொரோனா மாஸ்கை அணிந்திருந்தனர்.

டெல்லியில் 50 பேருக்கு மேல் கூடத் தடை : கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு;மதம், குடும்பம், சமூகம், அரசியல், கலாச்சார போன்ற எந்த கூட்டத்திலும் 50-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்ள தடை செய்யப்படுவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார். திருமண நிகழ்வுக்கு தற்போது எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என்றாலும், முடிந்தவரை திருமணங்களை ஒத்திவைக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். உடற்பயற்சி மையங்கள், நைட் கிளப்புகள் போன்றவைகளும் வரும் மார்ச் 31ம் தேதி மூடப்படுகிறது. ஷாப்பிங் மால்கள் மூடப்படுவது குறித்து அறிவிப்பு, ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்களின் தேசிய பதிவு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான ஷாஹீன் பாக் ஆர்ப்பாட்ட தளத்திற்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் நடவடிக்கையை டெல்லி கெஜ்ரிவால் அரசு இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முழு செலவுகளை அரசே ஏற்கும்: பீகார் மாநிலத்தில் கொரோனா வைரஸ் சிகிச்சையளிப்பதற்கான முழு செலவுகளையும் அரசு ஏற்கும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் திங்கள்கிழமை தெரிவித்தார். கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ .4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் என்ன நடவடிக்கை ? உச்ச்சநீதிமன்றம் கேள்வி : கைதிகள் அதிகளவில் இருக்கும் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவாமால் இருக்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? என்ற கேள்வியை உச்ச நீதிமன்றம் வினவியுள்ளது. மேலும், மார்ச் 20ம் தேதிக்குள் கொரோனா வைரஸ் தடுப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

சிறைத் தலைமை இயக்குநர், மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களின் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதுடன், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவக்கூடிய ஒரு பொறுப்பான அதிகாரியை நியமிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸின் பரவுதலை அடுத்து சிறைகளில் உள்ள நிலைமை குறித்து ஒரு விரிவான வழிகாட்டுதல்களை நாம் உருவாக்க வேண்டும்,என்று நீதிமன்றம் கூறியது.

coronavirus, Coronavirus map உலகெங்கிலும் உள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பகுதிகளை இந்த வரைப்படம் காட்டுகிறது.

 

ஆர்.அஷ்வின் கருத்து:  உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் அதி தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் போதுமான அளவு விழிப்புணர்வுடன் மக்கள் நடந்து கொள்ளவில்லை என்று  இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிசந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “பொது வெளியில் இருந்து தனித்து கொள்ளுதல் என்ற விஷயம் சென்னை மக்களை மத்தியில் போய் சேரவில்லை. கோடை காலம் வந்தால் கொரொனா தொற்று சரியாகிவிடும் என்றோ, அல்லது எதுவும் நடக்காது என்றோ அவர்கள் கருதி வருகின்றார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment