சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய கேரளா மாணவர் ஒருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர் என கண்டறியப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகிறது. இதனால், உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரொனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் இதுவரை 170 பேர் உயிரிழந்தனர். 7,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமல்லாமல் 17 நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் 70 பேர் இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சீனாவின் வுஹான் பகுதியில் இருந்து இந்தியா திரும்பிய கேரளாவைச் சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் பாசிட்டிவ் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர் கண்டறியப்பட்டுள்ளார்.
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ள இந்த மாணவர் சீனாவில் சீனாவில் உள்ள வுஹான் பகுதியில் எம்.பி.பி.எஸ். படித்துவந்துள்ளார். அங்கே கொரோனா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து சீனாவில் வசிக்கும் வெளிநாட்டினர் வெளியேறிவருகின்றனர். அந்த வகையில், இந்தியா வந்த கேரள மாணவர், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று உணர்ந்ததும் தானாகவே திரிச்சூர் மாவட்ட மருத்துமனைக்கு சென்று சேர்ந்துள்ளார். அங்கே அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் திரிச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றப்படுகிறார்.
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான அந்த மாணவர் திரிச்சூர் மாவட்ட மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட 20 மாதிரிகளில், ஒரு சோதனையில் பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவர் தற்போது நன்றாக இருப்பதாகவும் அவரது உடல்நிலை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சர், “இதே போன்ற அறிகுறிகளுடன் (கொரோனா வைரஸ்) வரும் நோயாளிகளைக் கண்காணிக்க தனியார் மருத்துவமனைகள் உட்பட அனைத்து மருத்துவமனைகளுக்கும் நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையைத் தொடங்க சுகாதாரத் துறை தயாராக உள்ளது.” என்று கூறினார்.
கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக சந்தேகப்படும் 400 க்கும் மேற்பட்டோர் சீனாவிலிருந்து திரும்பி வந்து கேரளாவில் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில், 5 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளிலும், மற்றவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவில் இருந்து திரும்பியவரக்ளை விமான நிலையங்களில் இருந்து நேரடியாக கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டனர்.“அவர்கள் மாணவர்கள் மற்றும் வணிகப் பயணிகள் ஆவார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் சுகாதாரத் துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கேரளாவுக்கு வந்த சில நாட்களில் மருத்துவமனைகளுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
கேரளாவில் 14 மாவட்டங்களிலும் உள்ள மருத்துமனைகளில் தனிமைப்படுத்தும் வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளவர்கள் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களால் கண்காணிக்கப்படுவார்கள். அவர்கள் 28 நாட்கள் கண்காணிப்பில் இருப்பார்கள். சுகாதார ஊழியர்கள் தினமும் சீரான இடைவெளியில் அவர்களுடன் தொடர்பில் இருப்பார்கள்.
புது டெல்லியில் வழக்கமாக்ஜ 14 நாள் தங்க வைப்பதற்குப் பதிலாக இந்திய குடிமக்களை ஹூபேயிலிருந்து வெளியேற்றவும், 28 நாட்களுக்கு தனிமைப்படுத்தவும் இரண்டு விமானங்களை இயக்கும் திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது. வைரஸின் பாதிப்பு ஏற்படாத நபர்களுக்கு, நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதற்காக, காய்ச்சலின் அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே ஹூபேயின் தலைநகரான வுஹானில் இருந்து விமானத்தில் கொண்டு செல்லப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.