இ-பாஸ், 14 நாட்கள் குவாரண்டைன் ரத்து ; இயல்பு நிலைக்கு திரும்பும் கர்நாடகா!

வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு கைகளில் சீல் வைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு கைகளில் சீல் வைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Coronavirus india

Coronavirus restrictions : EPass system cancelled in Karnataka :  கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவிலும் 2.85 லட்சம் நபர்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். கட்டுப்பாடுகளை அதிகரிப்பதற்கு பதிலாக தளர்த்துவதில் தீவிரம் காட்டியது அம்மாநிலம். தற்போது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பயணம் செல்வதற்கான விதிமுறைகளையும் தளர்த்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisment

மேலும் படிக்க : கொரோனா பாதிப்பால் கமாண்டோ இன்ஸ்பெக்டர் மரணம்; டிஜிபி, காவலர்கள் அஞ்சலிகொரோனா பாதிப்பால் கமாண்டோ இன்ஸ்பெக்டர் மரணம்; டிஜிபி, காவலர்கள் அஞ்சலி

அதே போன்று மாநிலத்திற்குள் பயணிப்பதற்கும் இருக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் இ-பாஸ் தளர்வுகள் குறித்து 29ம் தேதி முதல்வர் ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் “மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட அனைத்து போக்குவரத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுவதாக” அறிவித்துள்ளார் அம்மாநில கூடுதல் சுகாதார துறை செயலாளர் ஜாவேத் அக்தர்.

கர்நாடக அரசின் சேவா சிந்து செயலியில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை. அதே போன்று 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதும் இல்லை. வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு கைகளில் சீல் வைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில எல்லைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ முகாம்கள் நீக்கப்படுகின்றன. இனி கர்நாடகாவிற்கு சாலை, விமானம் மற்றும் ரயில்கள் மூலமாக வர தடை ஏதும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும் எந்த தடையும் இல்லை. ஆனால் அதே சமயத்தில் கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் ஏதாவது இருந்தால் அது தொடர்பாக அரசு உதவி மையத்திற்கு 14410 என்ற எண்ணில் அழைத்து விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

 

Karnataka

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: