இந்தியாவில், இதுநாள் வரையில் கொரோனா வைரஸ் குறித்த முழுபாதுகாப்பு சோதனை விமான நிலையத்தை மையமாக கொண்டு தான் இருந்தது.
இந்தியா ரயில்வே வாரியம் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்தியாவில் செயல்படும் அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அறிவுரை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அனைத்து ரயில்வே மண்டலங்களும் கொரோனோ வைரஸ் தனிமைப்படுத்தும் இருப்பிடம் ( வார்டு)அமைக்க வேண்டும். குறைந்தது 1,000 பேரையாவது தனிமைப்படுத்தும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும்"என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளா மாநிலத்தில் புதிதாக மேலும் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது . அவர்களில் மூன்று பேர் பிப்ரவரி 29 ஆம் தேதியன்று இத்தாலியில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியவர்கள். மேலும், ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழர் ஒருவருக்கு கொரொனோ வைரஸ் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
Explained : கொரோனா வைரஸ் (COVID-19) பயத்தை எவ்வாறு கையாள்வது?
இதனையடுத்து, கொரோனோ வைரஸ் தனிமைப்படுத்தும் இருப்பிடத்தை அமைக்க பணியை தெற்கு ரயில்வே விரைந்து செயல்படுத்தி வருகிறது. சென்னை பெரம்பூரில் இயங்க விருக்கும் ரயில்வே மருத்துவமனை கட்டிடம், மூர் மார்க்கெட் வளாகத்தில் செயல்படும் (எம்.எம்.சி) ரயில்வே பாதுகாப்பு படை மண்டபம் போன்றவைகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவைகளால் சுமார் 350 நோயாளிகளை தனிமைப்படுத்த முடியும் என்றும் நம்பப்படுகிறது.
ரயில்வே திருமண அரங்குகள்,பயிற்சி மையங்கள், பயிற்சி விடுதிகள், ரயில்வே நிறுவனங்கள் போன்றவைகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை உருவாக்கும் பொறுப்பு தலைமை திட்ட மேலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்: வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதா? தவிர்ப்பதா ?
கொரோனா வைரஸ்: சீனாவில் 2019-ல் டிசம்பர் 31 அன்று புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது . மிகவும் குறுகிய காலத்திலேயே உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியது. கடந்த மார்ச் 6ம் தேதி நிலவரப்படி, உலகில் 1,00,600க்கும் மேற்பட்ட நபர்கள் நோய்வாய்ப் பட்டுள்ளனர். குறைந்தது 3,404 பேர் மரணம் அடைந்துள்ளனர். சீனாவைத் தாண்டி தற்போது ஈரான், தென் கொரியா,இத்தாலி ஜப்பான் போன்ற நாடுகள் அதிகமான பாதிப்புகளை சந்தித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.