COVID19 Coronavirus outbreak Indian Railway Isolation wards
Indian Railway Coaches To Become Corona Isolation Wards: கொரோனா முன் எச்சரிக்கையாக தனது ஓட்டத்தை நிறுத்தியது இந்திய ரயில்வே. ஆனால் சேவை நிற்கவில்லை. இதோ இன்னொரு பரிமாணத்தில்! ரயில் பெட்டிகள், கொரோனா வார்டுகளாக உருப்பெறுகின்றன. சென்னை ஐ.சி.எஃப்-ல் வென்டிலேட்டர் தயாராக இருக்கிறது.
Advertisment
கொரோனா முன் எச்சரிக்கையாக நாடு முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பயணிகள் ரயில்கள் இப்படி முடக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. எனினும் இந்த நெருக்கடியான சூழலில் மக்களுக்கு தனது சேவையை இந்திய ரயில்வே நிறுத்தவில்லை.
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் ஆகியோர் வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் பேட்டி அளித்தனர். அப்போது ரயில்வே மேற்கொள்ளவிருக்கும் கொரோனா எதிர்ப்பு சேவையை பட்டியல் இட்டனர்.
Advertisment
Advertisements
அதன்படி கபுர்தலாவில் அமைந்துள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை, தனது ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்கான தனி வார்டுகளாக மாற்ற இருக்கிறது. இந்த சேவைக்கு ஏ.சி. அல்லாத பெட்டிகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. ஏ.சி. பெட்டிகள் என்றால், கிருமி நாசினி போக்குவது உள்ளிட்ட பணிகள் சிரமம் என்பதால் இந்தத் தேர்வு.
ஐ.சி.யூ வார்டு மாதிரியான டிஸைன் இறுதி செய்யப்பட்டுவிட்டால், அதன்பிறகு பணிகளை தொடங்க இருக்கிறது கபுர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலை. இந்தப் பணி மிகச் சுலபமானதாகவே இருக்கும் என்கிறார்கள் அதிகாரிகள்.
சென்னை ஐ.சி.எஃப் நிறுவனத்தில், வென் டிலேட்டர்கள் தயாரிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தியாவின் முதல் மின்சார மிதவேக ரயிலை உருவாக்கிய பெருமைக்குரியது சென்னை ஐ.சி.எஃப். வென்டிலேட்டர்களை உருவாக்குவது சுலபம் என்றாலும், அதை பயன்பாடு அளவுக்கு மேம்படுத்துவதில் சவால்கள் இருக்கின்றன. அந்த சவாலை ஐசிஎஃப் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
கொரோனாவின் அடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என உறுதியாக கணிக்க முடியவில்லை. எனினும் இந்தியாவின் ஊரக, கிராமப் பகுதிகளில் பாதிப்பு இருந்தால் ரயில் பெட்டிகள் மூலமாக உருவாகும் தனி வார்டுகளும், வென்டிலேட்டர்களும் பெரும் பயன் அளிப்பவையாக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
ஒவ்வொரு மண்டலத்திலும் வாரத்திற்கு இது போன்று 10 தனியார் வார்டுகள் உருவாக்கப்படும் வேலை துரிதமாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் தயார் நிலையில் இருக்கும் இந்திய ரயில்வே கோவிட்19 வார்டுகளின் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக. (Express photo by Toshi Tabgyal)