கொரோனா சோதனை கட்டண உச்சநீதிமன்ற உத்தரவை தனியார் ஆய்வகங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதா? இந்த கட்டண இழப்பை யார் ஈடு செய்வார்கள்?.

அமெரிக்காவிலும் தனியார் ஆய்வகங்கள் கொரோனா சோதனையை செய்கின்றன. சோதனைக்கு உரிய பொருட்களை ஆய்வகங்களுக்கு அரசு சார்பிலேயே வழங்கப்படுகின்றன.

By: April 10, 2020, 12:20:06 PM

கொரோனா சோதனைகளை தனியார் ஆய்வகங்கள் கட்டணமின்றி மேற்கொள்ள அந்தந்த மாநில அரசுகள் அரசாணை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, இந்த அசாத்திய சூழ்நிலையில், தங்களின் இந்த சேவை எவ்வளவு முக்கியமானது என்பதை அரசு அறியும். எனவே, இந்த விவகாரத்தில் அரசின் விளக்கத்தை எதிர்பார்ப்பாக தனியார் ஆய்வகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த நாட்டின் முன்னணி தனியார் ஆய்வகங்களான டாக்டர் டேங்க்ஸ் மற்றும் டாக்டர் லால் பேத்லேப்ஸ் நிறுவனத்தினர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கிறோம். கொரோனா சோதனைக்கு தேவையான ரீயஜன்ட்கள் உள்ளிட்டவைகளின் விலை தற்போது மிக அதிகமாக உள்ளன.மேலும் இந்த சோதனையில் ஈடுபடும் ஊழியர்கள் உள்ளிட்டோர்களுக்கு தனிநபர் பாதுகாப்பு உபகரணம் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்துதரப்பட வேண்டி உள்ளன.

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தைரோகேர் நிறுவனம், இந்த விவகாரத்தில் அடுத்த அறிவிப்பு வரும்வரை சோதனை செய்வதை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஆய்வகம், இதுவரை சுமார் 2 ஆயிரம் மாதிரிகளை சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா சோதனைகளுக்காக மத்திய அரசு ரூ.4,500 கட்டணமாக நிர்ணயித்துள்ளது. 12 மாநிலங்களில் உள்ள 65 தனியார் ஆய்வகங்கள் இந்த சோதனையை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் 14 ஆய்வகங்கள், தெலுங்கானாவில் 10 ஆய்வகங்கள் , தமிழகத்தில் 9 ஆய்வகங்கள் என 65 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

சோதனைக்கு பயன்படும் ரியஜன்ட்கள், உபகரணங்கள், ஊழியர்கள், ஆய்வகங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு, பாதிப்பு கட்டுப்பாடு கருவிகளான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், வைரஸ் மாதிரிகளை கொண்டுவருதல், ஆய்வக சுகாதார பராமரிப்பு, ஊழியர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் அதிக முக்கியத்துவம் தரவேண்டி உள்ளது. இதற்குரிய கட்டணங்களை, அரசு நிர்ணயித்துள்ள ரூ.4,500 கட்டணங்களின் மூலமே நாங்கள் சமாளித்து வருகிறோம். உச்சநீதிமன்ற உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். இந்த விவகாரத்தில், எங்களின் பங்கு முக்கியமானது என்று அறிந்துள்ள அரசு, என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை நாங்கள் எதிர்பார்த்து காத்துள்ளோம் என்று டாக்டர் டேங்ஸ் லேப் சிஇஓ டாக்டர் அர்ஜூன் டேங் தெரிவித்துள்ளார்.

டாக்டர் லால் பேத்லேப்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்த் லால் கூறியதாவது, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விவகாரத்தில் தீர்வு காணும் பொருட்டு, அதற்குரிய நடவடிக்கைகளில் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

தைரோகேர் சிஇஓ ஆரோக்கியசாமி வேலுமணி கூறியதாவது, அரசு கட்டணம் எதுவும் வசூலிக்க தேவையில்லை என்று கூறினால், நாங்கள் வசூலிக்கப்போவதில்லை. இந்த விவகாரத்தில் அடுத்த அறிவிப்பு வரும்வரை எங்களது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளோம். அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

எங்களுக்கும் இதுபோன்ற சோதனைகளை மனிதர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. ஆனால் இங்கு பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம், பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஆகும் செலவை அரசு ஏற்றுக்கொண்டால் நாங்கள் இலவசமாக செய்ய தயாராக உள்ளோம்.
மத்திய அரசு இந்த விவகாரத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் மற்ற நாடுகள் என்ன வழிமுறைகளை பின்பற்றுகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

தென் கொரியா இந்த விவகாரத்தில் தீவிர சோதனை கொள்கையை அறிமுகப்படுத்துகிறது. சீனாவில் இருந்து வந்தவர் என்று உறுதி செய்யப்பட்டால், அவருக்கு எல்லா சோதனைகளையும் விரைந்து மேற்கொள்ள தென் கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு தொற்று உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய அரசு அதீத ஆர்வம் காட்டுகிறது.

அமெரிக்காவும் இந்த விவகாரத்தல் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி வருகிறது. இந்தியாவில் நடைமுறையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் உள்ளதைப்போல, அமெரிக்காவிலும் அதுபோன்றதொரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவிலும் தனியார் ஆய்வகங்கள் கொரோனா சோதனையை செய்கின்றன. சோதனைக்கு உரிய பொருட்களை ஆய்வகங்களுக்கு அரசு சார்பிலேயே வழங்கப்படுகின்றன.

அரசு காப்பீடு திட்டத்தில் இணைந்தவர்களுக்கு இந்த சோதனைகள் இலவசமாகவும், இணையாதவர்களுக்கு செய்யப்படும் சோதனைகளுக்கான கட்டணத்தை தேசிய பேரிடர் மருத்துவ அமைப்புக்கு ஒதுக்கப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருவதாக ஆரோக்கியசாமி வேலுமணி தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus testing covid testing labs covid test private charges coronavirus cases in india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X