அதிகரிக்கும் கொரோனா: இனி ‘அட்மிட்’ ஆகிறவர்களுக்கு மட்டுமே டெஸ்ட்

ரத்து செய்யப்பட்ட ரேபிட் ஆன்டிபாடி பரிசோதனை மீண்டும் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும், இந்த முறை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பரிசோதனை முக்கிய பங்குவகிக்கும்.

By: Updated: June 9, 2020, 04:39:40 PM

அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு மட்டும் கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள  டெல்லி அரசு நிர்வாகாம் முயற்சித்து வரும் நிலையில், நாட்டின் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையை கையாளும் விதமாக டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்கள் நோய் தணிக்கும் தீர்வுகளில் (Mitigation Strategy )கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா அரசின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும், இந்திய சுகதாரா அமைச்சகத்தில் பணிபுரியிம் மூத்த அதிகாரி ஒருவர், கொரோனா மருத்துவ பரிசோதனை கொள்கையில் திடீர் மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 2,56,611-க உயர்ந்துள்ளது ( 7200 உயிரிழப்புகள், 1,24,430 குனமடைந்தவர்களின் எண்ணிக்கை).

இந்திய, தற்போது அபாயகரமான நிலையில் இல்லை. தொடர்பு தடமரிதல் மூலம் நோய்த் தொற்றை கட்டுபடுத்தி வருகிறோம். இருப்பினும், டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் கொரோனா பரவல் விரிவடைந்துள்ளது. இந்த மாநிலங்கள், கால ஓட்டத்தில், எப்படியும்  நோய் தணிக்கும் தீர்வுகளை உருவாக்க வேண்டும். அதாவது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் கொரோனா  பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், அதிகம் ஆபத்து நிறைந்த மக்களுக்கு மருத்துவ வளங்களை கொண்டு சேர்க்க முடியும். இதை மாநில அரசுகள் தான் முடிவு செய்ய முடியும் என்றாலும், உலகளாவிய அனுபவங்கள் நமக்கு இதை தான் சொல்ல வருகின்றன” என்று அந்த உயரதிகாரி தெரிவித்தார்.

நோய்த் தடுப்பின் மற்றொரு முயற்சியாக நாம் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கலாம். ஆனால், பரிசோதனை உபகரணங்கள் கிடைப்பதில் வரம்பு  உள்ளது. இந்தியா கொரோனா நோய்த தொற்றின் உச்ச நிலையை இன்னும் எட்ட வில்லை என்பதைத் தான் ஐ.சி.எம்.ஆர் அமைப்பும் தெளிவுபடுத்தி வருகிறது.

உண்மையில், நாம் கொரோனா பரிசோதனையை விரிவு படுத்தியுள்ளோம். ஒரு நாளைக்கு பரிசோதனையின் எண்ணிக்கையை  ஐந்து லட்சமாக அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். இருப்பினும், நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமாவது நோய் தணிக்கும் தீர்வுகள் உருவாக்கப்பட வேண்டும். அந்த தீர்வுகள் எப்போது? எங்கே? என்ற கேள்விக்கான பதிலைத் தான் தற்போது ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

நாட்டின் எந்த பகுதியில் இந்த நோய் தணிக்கும் தீர்வுகள் முதலில் அமல்படுத்த வேண்டும் என்பதில் அதிகாரிகளுக்கிடையே ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை என்றாலும், இதுபோன்ற கடினமான முடிவின் அவசியத்தை அனைத்து அதிகாரிகளும் புரிந்துள்ளனர்.

பயண அல்லது தொடர்பு வரலாறு கொண்டவர்கள், முன்கள சுகாதாரத் துறைப் பணியாளர்கள், பாதிப்புள்ள மற்றும் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், தீவிர சுவாச மண்டலத் தொற்று (சாரி) / சளி போன்ற உடல்நலக் குறைபாடு உடைய நோயாளிகள்,  உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியோடு நேரடி தொடர்பில் இருந்த அறிகுறியற்ற மற்றும் உயர் ஆபத்து கொண்ட  நோயாளிகள், மருத்துவமனை அல்லது கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிகளில் நோய்த் தொற்று அறிகுறிகளை வெளிபடுத்தும் மக்கள், அறிகுறிகளை வெளிபடுத்தும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆகியோர் ஐ.சி.எம்.ஆர் அமைப்பின் தற்போதைய நெறிமுறையின்படி கொரோனா மருத்துவ சோதனைக்குத் தகுதியுள்ளவர்களாக கருதப்படுவர்.

முன்னதாக, ரத்து செய்யப்பட்ட ரேபிட் ஆன்டிபாடி பரிசோதனை மீண்டும் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த முறை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பரிசோதனை முக்கிய பங்குவகிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, டெல்லி அரசின் தொடர்புத் தடமறிதல் முயற்சிகள் குறித்து கவலைகள் எழுந்துள்ளன. குறைந்த அளவிலான எண்ணிக்கையில் மட்டுமே நோய்த் தொற்று உடையவர்களின் தொடர்புகள் தடமறியப்படுகிறது. இந்த முயற்சியை டெல்லி அரசு முற்றிலுமாக கைவிட்டுவிட்டது  என்று எடுத்துக் கொள்ளாவிட்டாலும், அவர்கள் தொடர்பு தடமறிதலில்  மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள் ”என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus testing strategy icmr protocol mitigation strategy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X