Advertisment

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 73-ஆக உயர்வு

ஏப்ரல் 15ஆம் தேதி வரை அனைத்து விசாக்களும் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் 'உலகளாவிய தொற்று நோய்' என அறிவிப்பு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 73-ஆக உயர்வு

Coronavirus, Coronavirus updates, Coronavirus latest news

“கொரோனா வைரஸ் ஒரு உலகளாவிய தொற்று நோய் ” என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்த உடனே, ஏப்ரல் 15ஆம் தேதி வரை அனைத்து விசாக்களும் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

மேலும்,வெளிநாட்டு இந்தியக குடியுரிமை (OCI ) அட்டை வைத்திருப்பவர்களுக்கான விசா இல்லாத  பயண வசதி திட்டமும் ஏப்ரல் 15 வரை நிறுத்தி வைக்கப்படுவாதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 29 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்தியன் பிரீமியர் லீக் போட்டி ஒரு பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.

 

1897 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கொள்ளை நோய் ஒழிப்புச் சட்ட விதிகளைச் (குறிப்பாக பிரிவு 2) செயல்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு  அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகள் அவ்வப்போது வழங்கும் ஆலோசனைகள் கூட இதன்மூலம் நடைமுறைபடுத்தப்படும்.

அவசர நிலை காரணமாக இந்தியாவுக்கு வரவிரும்பும் எந்தவொரு வெளிநாட்டவரும் அருகிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்” என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்திற்கும் மேலாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்திருப்பதால், பொருளாதாரம் அழுத்தமடையும். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, இந்தியா ஓபன் டென்னிஸ் போட்டி உட்பட பல விளையாட்டு நிகழ்வுகளும் இந்த மாதத்தில் தொடங்க இருந்தன.

கொரொனோ வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்வதற்கும், கண்காணிப்பதற்கும், அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு (GOM) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

“2020 பிப்ரவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு சீனா, இத்தாலி, ஈரான், கொரியா குடியரசு, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்த  அனைத்து பயணிகளும் (இந்தியர்கள் உட்பட), குறைந்தபட்சம் 14 நாட்கள் தங்களை  தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது  மார்ச் 13 ஆம் தேதி இரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும். இந்த கால கட்டங்களில் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதியை நிறுவனங்கள் செய்து தர வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது ஒருபுறமிறக்க, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், சுகாதார செயலாளர் ப்ரீத்தி சூடானை தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் தலைமை அதிகாரியாக  உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.

 

கொரோனா வைரஸ் தொற்று : இந்தியாவில் 70-ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை தற்போது 73 ஆக உயர்ந்துள்ளது. விமான நிலையங்களில் 10,57,506 பயணிகளின் சோதனை செய்யப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரொனோ வைரஸ் - தமிழகம் :  சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளானவர் என்று அனுமதிக்கப்பட்டவருக்கு, தற்போது நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் மீண்டும் நெகட்டிவாக வந்துள்ளது, அவர் ஓரிரு நாட்களில் வெளியேற்றப்படுவார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டரில்," இது ஒரு அதிசயம் அல்ல, ஆனால், சுகாதாரத்துறை மேற்கொண்ட துல்லியமான நடவடிக்கையின் மூலம் இவர் குனமாகியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

இன்று சட்டப்பேரவையில்,  கொரோனா வைரஸ் தொடர்பாக அனைத்து கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு  அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கமளித்தார். தமிழகத்தில் கொரொனோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஜனவரி மாதத்தில் இருந்தே தொடங்கப் பட்டதாகவும், கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படுகின்றன என்றும் விளக்கமளித்தார்.

மற்றொரு செய்தியாக, கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளையும் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

ஹரியானா : 

கொரோனா வைரசை'தொற்றுநோயாக' ஹரியானா அரசு அறிவித்துள்ளது. ஹரியானா சுகாதார அமைச்சர் அனில் விஜ் இதனை தனது ட்விட்டரில் பதிவு செய்தார்.

அமெரிக்கா:  ஐரோப்பா செல்லும் மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் அடுத்த 30 நாட்களுக்குத் தடை செய்வதாக அறிவித்தார். இந்த தடையானது இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது.

ஜெர்மன் : சான்சிலர் ஏஞ்சிலா மெர்கல் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜெர்மனியில்  இன்னும் பலர் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்,தற்போதைய மக்கள் தொகையில், கொரொனோ வைரசால்  60 முதல் 70 சதவீதம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும்  நிபுணர்கள் கருதுவதாக" தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸ் நாட்டில் கோரோனோ வைரஸ் அதிகம் பரவி வருவதால் அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர், நிதி மந்திரி உட்பட அனைவரும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதிபர் ரோட்ரிகோ-டூர்ட்டே கொரொனோ வைரஸ் சோதனை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில், 49 பேர் வைரசால்  பாதிக்கப் பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் இறந்துள்ளதாகவும்  சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

மார்ச் 8 ஆம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட ஒருவர் கொரொனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மெல்போர்ன் கிரிக்கெட் மைதான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment