ஏப்ரல்-மே மாதங்களில் முற்றிலும் சரிந்த பயணிகள் ரயில் போக்குவரத்து!

Coronavirus traveller traffic on railways slumps இரண்டாவது அலைக்கு ஒரு நாளைக்கு முன்பு, நாள் ஒன்றுக்கு சுமார் 1,500 வழக்கமான ரயில்களின் எண்ணிக்கை 865-ஆகக் குறைக்கப்பட்டது. இதில் “சிறப்பு” ரயில்களும் அடங்கும்.

Coronavirus traveller traffic on railways slumps in April May Tamil News
Coronavirus traveller traffic on railways slumps in April May Tamil News

Coronavirus traveller traffic on railways slumps in April May Tamil News : கடந்த மூன்று மாதங்களில் தொற்றுநோயின் இரண்டாவது அலை வந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் மட்டுமே சுமார் 3.27 கோடி மக்கள் நீண்ட தூர ரயில் பயணத்தை மேற்கொண்டனர். தொற்றுநோய்க்கு முந்தைய கடைசி ‘இயல்பான’ ஆண்டான ஏப்ரல் 2019-ல், 30 கோடி பயணிகள் ரயில்களில் நீண்ட தூரம் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மே மாதத்தில் இதுவரை 1.76 கோடி பயணிகள் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்தனர்.

குறைக்கப்பட்ட தேவைக்கு பதிலளிப்பது மட்டுமல்லாமல், அத்தியாவசியமற்ற பயணங்களை மட்டுப்படுத்தவும் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வழக்கமான ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது அலைக்கு ஒரு நாளைக்கு முன்பு, நாள் ஒன்றுக்கு சுமார் 1,500 வழக்கமான ரயில்களின் எண்ணிக்கை 865-ஆகக் குறைக்கப்பட்டது. இதில் “சிறப்பு” ரயில்களும் அடங்கும்.

தொற்றுநோய் 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில், ஒவ்வொரு நாளும் 1,768 நீண்ட தூர ரயில்கள் ஒட்டப்பட்டன.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பயணிகள் போக்குவரத்தின் பெரும்பகுதி, கிழக்கு மாநிலங்களுக்கும் உத்தரப்பிரதேசத்திற்கும் அனுப்பப்பட்டது. இந்த போக்குவரத்து மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லியில் உள்ள பல்வேறு இடங்களிலிருந்து தோன்றியது. மேலும், இந்த ஆண்டு உள்ளூர் மயமாக்கப்பட்ட லாக்டவுன் காரணத்தினால் பணியிடங்கள் மூடப்பட்ட நிலையில் இந்தியப் பயணிகள் எவ்வாறு பயணித்தனர் என்பதற்கான ஒரு ஸ்னாப்ஷாட்டை சமீபத்திய தரவு வழங்குகிறது.

டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற பெரிய தொழில்துறை மையங்களிலிருந்து பயணத்திற்கான கோரிக்கைகளுக்குச் சிறப்பு ரயில்கள் பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் உள்ள புலம்பெயர்ந்தோரை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து வருகின்றன.

இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பயணிகளின் போக்குவரத்து முன்பு போலவே மாற தொடங்கியது. எடுத்துக்காட்டாக, பிப்ரவரியில் 7.5 கோடி பயணிகள் நீண்ட தூர அஞ்சல் / எக்ஸ்பிரஸ் ரயில்களையும், மார்ச் மாதத்தில் 5.8 கோடியையும் தொட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் காட்டுகின்றன.

ஏப்ரல் 1 முதல் தொடங்கும் இந்த நிதியாண்டில், 2.72 கோடி மக்கள், அல்லது பயணிகளில் பாதிப் பேர், நீண்ட தூர ரயில்களின் பொது வகுப்பினரால் பயணித்ததாகத் தரவு காட்டுகிறது (வழக்கமாக முன்பதிவு செய்யப்படாத ஆனால் இப்போது பாதுகாப்பான தொலைதூர விதிமுறைகளை அமல்படுத்த இட ஒதுக்கீட்டில் இயங்குகிறது). ஏசி அல்லாத ஸ்லீப்பர் வகுப்பில் சுமார் 1.65 கோடி மக்கள் பயணம் செய்தனர்.

ரயில் சேவைகளை நிறுத்துவதற்கு பதிலாக, சிறப்பு ரயில்கள் மற்றும் வழக்கமான ரயில்களைத் தொடர்ச்சியாக இயக்குவது அவசரக்கால பயணங்களை மேற்கொள்ள விரும்புவோருக்கும், லாக்டவுன் போடப்பட்ட நிலையில் உள்ள மாநிலங்களிலிருந்து வீடு திரும்புவதற்கும் உதவியுள்ளதாக இருந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

2020-2021 நிதியாண்டில் இந்திய ரயில்வே 122 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றது. இதில், ஷ்ராமிக் ஸ்பெஷல்களில் 63 லட்சம் குடியேறியவர்கள் உள்ளனர். சுமார் 28 கோடி பேர் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள். ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு படிப்படியாகப் பொருளாதாரம் இயல்பாகத் திரும்பியதில், இந்த புதிய எழுச்சிக்கு முன்பே நீண்ட தூரப் பயணம் ஆரம்பமானது.

ஒரு சாதாரண ஆண்டில், உதாரணமாக, 2019-20-ம் ஆண்டில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800 கோடி பயணிகள் நீண்ட தூர முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களில் பயணம் செய்தனர்.

“நிலைமை மாற்றம் பெறும் மற்றும் அவை தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. கடந்த காலாண்டில், பயணிகள் போக்குவரத்து அதிகரித்தது. துரதிர்ஷ்டவசமாக, இரண்டாவது கோவிட் அலை இதனை மாற்றியது. சுகாதார நிலைமை மேம்படுகையில், மாற்றங்கள் தொடரும் ”என்று ரயில்வே அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டி.ஜே.நாரேன் கூறினார்.

“சாத்தியமான அனைத்து பயணிகள் வழித்தடங்களிலும், சில பயணிகள் ரயில்களை இயக்குவது, குடிமக்களுக்கு இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் எந்தவொரு அவசர காரணத்திற்காகவும் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை தருகிறது. ரயில்வேயைப் பொறுத்தவரை, இது ஒரு நூற்றாண்டுக்கான சவாலில் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு” என்றும் அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus traveller traffic on railways slumps in april may tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com