/tamil-ie/media/media_files/uploads/2020/04/template-2020-04-22T113030.884.jpg)
Coronavirus, tulip garden, srinagar tulip garden, tulip garden photos, jammu and kashmir, india lockdown, kashmir coronavirus cases, indian express
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துலிப் மலர்கள் சீசன் துவங்கியுள்ளதால், அங்குள்ள துலிப் தோட்டங்கள் பார்ப்பவர்களின் கண்களுக்கு கண்கொள்ளா காட்சியுடன் அதிவிருந்தை படைத்து வருகின்றன. இந்த துலிப் தோட்டங்கள், காஷ்மீரின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
கொரோனா தொற்று பரவல் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில், அதனை தடுக்கும்பொருட்டு தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே, மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்படுகின்றனர்.
ஸ்ரீநகரில் உள்ள துலிப் தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் துலிப் மலர்கள்.(Express photo: Shuaib Masoodi)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை துலிப் தோட்டங்கள் அதிகம் கவர்கின்றன. 2007ம் ஆண்டு இந்த தோட்டங்கள் திறக்கப்பட்டன. ஊரடங்கு காரணமாக, தற்போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. (Express photo: Shuaib Masoodi)
இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம், காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத்தலம் ஆகும். (Express photo: Shuaib Masoodi)
காஷ்மீர் துலிப் தோட்டம், ஆசியாவின் மிகப்பெரிய தோட்டங்களுள் ஒன்றாகும். (Express photo: Shuaib Masoodi)
காஷ்மீரில் சுற்றுலாவை விரிவுபடுத்தும் பொருட்டு 2007ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் குலாம் நபி ஆசாத்தால், இந்த தோட்டம் திறக்கப்பட்டது.(Express photo: Shuaib Masoodi)
துலிப் மலர்களை தவிர்த்து ஹயாசிந்த்கள், டேபோடைல்ஸ் மலர்களும் மக்களை மகிழ்விக்கின்றன.(Express photo: Shuaib Masoodi)
தால் ஏரி பார்க்க வருபவர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி தரும்விதத்தில் இந்த துலிப் தோட்டங்கள் அமைந்துள்ளன.(Express photo: Shuaib Masoodi)ஊரடங்கு உத்தரவு நிலையில், காஷ்மீரின் துலிப் தோட்டத்தில் மலர்கள், மக்களை காண பூத்து குலுங்குகின்றன. இதன் அழகை காண இரண்டு கண்கள் போதாது என்று அதனை பார்த்தோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us