Advertisment

கொரொனோ வைரஸ் மார்ச் 11: இந்தியாவில் 52 பேர் பாதிப்பு, உலகளவில் முன்னேற்பாடுகள் தீவிரம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரொனோ வைரஸ் மார்ச் 11: இந்தியாவில் 52 பேர் பாதிப்பு, உலகளவில் முன்னேற்பாடுகள் தீவிரம்

டெல்லியிலும், ராஜஸ்தானிலும் மேலும் ஒருவருக்கு கொரொனோ வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில்  கொரொனோ வைரசால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

உலகளவில் 1.15 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ள நிலையில், 4,000க்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸ் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்று: மேலும் ஒருவருக்கு கண்டறியப்பட்டது: 

கடந்த பிப்ரவரி 28 அன்று, துபாயில் இருந்து இந்தியா திரும்பிய 85 வயது நிரம்பிய ஒருவருக்கு, கொரொனோ வைரஸ் இருப்பது தற்போது கண்டறியப்பட்டது.

கடந்த வாரம், ராஜஸ்தான் ஜெய்பூரில் கொரொனோ வைரஸ் உறுதி செய்யப்பட்ட இத்தாலிய தம்பதிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதே மருத்துவமனியில் தான் இவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதியவர் பயணம் செய்த விமானத்தின் விவரங்களை பெற்ற  சுகாதார அதிகாரிகள், விமானத்தில் பயணித்த மற்ற பயனாளிகளை தொடர்பு கொண்டு, முன்னேற்பாடுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், தொடர்பில் இருந்த, அவரது குடும்பம் உட்பட 235 பேர் ஏற்கனவே தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

உறுதியோடு போராடும் கேரளா: நேற்று (மார்ச் - 10 ),  மாநிலத்தில் மேலும் எட்டு பேருக்கு கொரொனோ வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம், கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 17 ஆகக் கூடியுள்ளது.

கொரொனோ வைரஸ் எண்ணிக்கை  உயர்வதால், மார்ச் 31 வரை அனைத்து கல்வி நிறுவனங்களையும், சினிமா அரங்குகளையும் மூடுவதாக பினராயி விஜயன் அரசு அறிவித்துள்ளது. சபரிமலை போன்ற மக்கள் கூடும் இடங்களைத் தவிர்க்கவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் கேரளாவில் இத்தாலியில் இருந்து வந்த  தம்பதியினருக்கு  கொரொனோ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது பாதித்துள்ள எட்டு பேரில், ஆறு பேர் அந்த தம்பதியினரின் முதன்மையான தொடர்பில் இருந்தவர்கள். புதியதாய் பாதித்துள்ள இந்த எட்டு பேரிடம், தொடர்பில் இருந்தவர்கள் குறித்த  விவரங்களை கேரளா அரசு சேகரித்து வருகிறது. "பயண வரலாற்றை மறைப்பது ஒரு குற்றமாக கருதப்படும், சரியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கேரளா சுகாதார அமைச்சர் கே.கே ஷைலாஜா கூறினார்.

 

11, 2020

மற்றொரு செய்தியாக, கேரளாவில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர்,  காய்ச்சலோடு வந்த ஒரு என்ஆர்ஆ நோயாளி குறித்த  தகவலை சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்ததாகவும், இதனால், அந்த மருத்துவமனை நிர்வாகிகள் தன்னை பணியில் இருந்தே நீக்கி விட்டார்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

11, 2020

இது தவிர, இத்தாலியில் இருந்து கொச்சியை அடைந்த 45 பேரை கேரள அரசு தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது. இரண்டு குழந்தைகள், இரண்டு கர்ப்பிணி பெண்கள் உட்பட 35 பேர் ஆலுவாவில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10 பேர் காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினையில் அவதிப்படுவதால்  கலாமாசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து பெறப்பட்ட சாம்பிள்கள் ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்தில் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புனேவில் பள்ளிகள் மூடப்பட்டன: புனேவின் தயாரி பாட்டா பகுதியில் இயங்கும் வீட்டுவசதி சங்கத்தின் உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டது. இந்த பயத்தால், அப்பகுதியில் இயங்கி வரும் இரண்டு பள்ளிகள் சனிக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளன. நகரத்தின் பிற பள்ளிகளும் பள்ளிகளை மூடுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா கல்வி ஆணையர் விஷால் சோலங்கி, மாநில கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் உடன் இது குறித்து கலந்து ஆலோசித்து வருகிறார்.

மும்பை நகரமும் மிகவும் தயார் நிலையில் உள்ளது.  வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த 537 பேர், கொரோனா வைரஸுக்கு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம், துபாயில் இருந்து திரும்பி வந்து புனே தம்பதியினருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களின் குழந்தை, அவர்களை ஓட்டிச் சென்ற ஓலா கேப் டிரைவர், அவர்களுடன் பயணித்த ஒருவருக்கு கொரொனோ வைரஸ் தொற்று இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது .

இந்த ஐந்து பேரோடு தொடர்பு கொண்ட மற்றவர்களை கண்டறிவதற்காக ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக புனே நகர ஆணையர் தீபக் மைசேகர் தெரிவித்தார்.

கர்நாடகாவில் நான்கு பேருக்கு கொரொனோ வைரஸ்: அமெரிக்காவிலிருந்து திரும்பிய பெங்களூர் மென்பொருள் பொறியாளருக்கு கொரொனோ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. தர்போது, அவரின் மனைவிக்கும், மகளுக்கும் கொரொனோ வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. லண்டன் வழியாக அமெரிக்கா சென்று பெங்களூருக்கு திரும்பிய 50 வயது நபருக்கும் கோரோனோ வைரஸ் தொற்று உறுதி படுத்தப்பட்டது.

மென்பொருள் பொறியாளரோடு தொடர்பில் இருந்த 2,666 நபர்களை மாநில சுகாதாரத் துறை இப்போது கண்காணித்து வருகின்றனர். அவரின் அபார்ட்மென்ட்டிலும், அலுவலக வளாகங்களிலும், அவர் மகள் படிக்கும் பள்ளியிலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தொற்றுநோய்க் கிருமி நீக்கம் செய்து வருகின்றனர். நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ், மக்கள் அதிக எண்ணிக்கையில் பொது இடங்களில் கூட வேண்டாம் என்று கோரியுள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகள் குறித்தும் கர்நாடக அரசு மத்திய அரசிடம் ஆலோசனை கோரியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைச் சமாளிக்கும் வகையில், ‘நமஸ்தே ஓவர் ஹேண்ட்ஷேக்’ என்ற பிரச்சாரத்தையும் இது தொடங்கியுள்ளது. கை குலுக்குவதற்கு பதிலாக பாரம்பரிய வணக்கத்தை பழக்கப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

கொரோனா வைரஸ் பயம் காரணமாக ஸ்ரீநகரில் பள்ளிகள் மூடல்: ஸ்ரீநகரில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும்,விளையாட்டு மைதானங்களும் வரும்  வியாழக்கிழமை முதல் மூடப்படுப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஸ்ரீநகர் மாநகராட்சியில் இயங்கும் அனைத்து பள்ளிகளையும், கல்லூரிகளையும் தொற்றுநோய்க் கிருமி நீக்குவதற்கான வேலைகள் செய்யப்படும் என்று ஸ்ரீநகர் மேயர் ஜுனைத் அஸிம் மாத்து நேற்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பற்றிய உலகளாவிய செய்திகள்: 

பிரிட்டனின் இளைய சுகாதார அமைச்சர் நாடின் டோரிஸ், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களாக, சீனாவில் குறைந்து வந்த கொரொனோ வைரஸ் தொற்று,  தற்போது சற்று அதிகமாகியுள்ளது. நேற்று மட்டும் 24 பேர் கொரொனோ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்னென்றால், இந்த 24-ல், 10 பேர் மற்ற நாடுகளில் இருந்து சினாவிற்குள் வந்தவர்கள்.

கனடாவில் கொரொனோ வைரஸ் காரணமாக முதல் முறையாக ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இலங்கை தனது முதல் கொரோனா வைரஸ் வழக்கை அறிவித்தது.

தென் கொரியாவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துருக்கி தனது முதல் கொரொனோ வைரசை உறுதி படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கொரோனா வைரஸ் தொற்று ‘விரைவில் போய்விடும் ’ என்று அறிவித்துள்ளார். 800 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கோரோனோ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவிற்கு பிறகு கொரோனா வைரசால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளில் ஒன்று இத்தாலி. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், அங்கு மேலும் 168 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில்  அதிகபட்ச மக்கள் இத்தாலியில் இறந்துள்ளனர் .கொரோனா வைரஸ் தொற்றை சமாளிப்பதற்கான முயற்சிகளை இத்தாலிய அரசு முடுக்கிவிட்டுள்ளது

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment