9-ம் தேதியில் இருந்து தமிழகத்தில் ‘ரேபிட் டெஸ்ட்’: சீனாவில் இருந்து 1 லட்சம் கருவிகள் இறக்குமதி

Covid 19 Latest Updates: ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக ஆளுயர குத்து விளக்கை ஏற்றினார் பிரதமர் மோடி.

By: Apr 7, 2020, 7:27:47 AM

Covid-19 Cases Updates: 30 நிமிடத்தில் ரிசல்ட் தரக் கூடிய 1 லட்சம் கொரோனா ராபிட் டெஸ்ட் கிட் வாங்க ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும், மக்கள் அனைவரும் விளக்கேற்றினார்கள். ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக ஆளுயர குத்து விளக்கை ஏற்றினார் பிரதமர் மோடி. குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், திரையுலக பிரபலங்களும் விளக்கேற்றி தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் 571 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதோடு இத்தொற்றுக்கு 5 பேர்  தமிழகத்தில் பலியாகியிருக்கிறார்கள். சென்னையில் அதிகபட்சமாக 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதால், இதனை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அபாயம் காரணமான ஈரோட்டில் 1,09,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83-ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைக்குப் பின் 273 பேர் குணமடைந்திருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஒரே நாளில் 1 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் பலியானவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ நெருங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Live Blog
Coronavirus Updates, Coronavirus Latest cases, Covid-19 Latest Cases numbers in tamil nadu - உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்    
22:03 (IST)06 Apr 2020
இந்தியாவில் கடந்த 2 4 மணி நேரத்தில் 704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; 28 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 704 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மொத்தம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 4,281 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

21:34 (IST)06 Apr 2020
மேக் இன் இந்தியா திட்டத்துக்கு இந்த நெருக்கடி ஒரு வாய்ப்பு - பிரதமர் மோடி

பிரதமர் மோடி, “இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை ஊக்குவிக்கவும், மற்ற நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கவும் இந்த நெருக்கடி ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. மத்திய அமைச்சர்கள், ஊரடங்கு முடிவுக்கு வந்ததும், கவனம் செலுத்த வேண்டிய 10 முக்கிய பிரிவுகளை கண்டறிய வேண்டும். அறுவடை காலத்தில் விவசாயிகளுக்கு அனைத்து விதமான உதவிகளையும் அரசு வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

20:32 (IST)06 Apr 2020
மத்திய அரசு எம்.பி.க்கள் ஊதியம், படிகள் குறைப்பு நடவடிக்கைக்கு விசிக தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரு உள்பட அனைத்து எம்.பி-க்களின் ஊதியம், படிகள், ஓய்வூதியம் 30% குறைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

எம்.பி.க்களின் ஊதியம், படிகள் பிடித்தம், தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தம் நடவடிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்

மற்ற கட்சிகளின் எம்.பி.-க்களின் கருத்துகளைக் கேட்காமல் மத்திய அமைச்சரவை தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பது ஜனநாயக விரோதமானது - திருமாவளவன்

20:14 (IST)06 Apr 2020
தமிழகத்தில் அதிபட்சமாக சென்னையில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

19:08 (IST)06 Apr 2020
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 6 ஆக உயர்வு

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 6 ஆக உயர்வு

மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியான நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கொரோனாவிற்கு பலி

18:12 (IST)06 Apr 2020
வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 91, 851

தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 91, 851.

5016 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

-  பீலா ராஜேஷ்

18:10 (IST)06 Apr 2020
50பேருக்கு கொரோனா பாதிப்பு

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 50பேருக்கு கொரோனா பாதிப்பு

* சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

* தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்வு

17:53 (IST)06 Apr 2020
2.5 லட்சம் கருவிகள்

புதிதாக 5 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது, ஏப்ரல் 8-9 தேதிகளில் 2.5 லட்சம் கருவிகள் வழங்கப்படும் - ஐசிஎம்ஆர்

17:13 (IST)06 Apr 2020
693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கொரோனா பாதிப்பு உள்ளவர்களில் 76% பேர் ஆண்கள், 24% பெண்கள்

- மத்திய சுகாதாரத்துறை

17:13 (IST)06 Apr 2020
போதிய சான்று இல்லை

கொரோனாவுக்கு எதிராக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து பயனளிப்பதாக போதிய சான்று இல்லை

* ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை பரிந்துரைப்பது பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்

16:52 (IST)06 Apr 2020
3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு மேலும் ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு

16:49 (IST)06 Apr 2020
350 இந்தியர்களை மீட்க நடவடிக்கை

மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு - விரைவில் விசாரணை

16:48 (IST)06 Apr 2020
முன்பதிவு தொடக்கம்

ஏப்ரல் 15ம் தேதியிலிருந்து உள்நாட்டு விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவை தொடங்கியது கோ ஏர் நிறுவனம்.

16:33 (IST)06 Apr 2020
ஆண்கள் 76% பேர், பெண்கள் 24% பேர்

நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் ஆண்கள் 76% பேர், பெண்கள் 24% பேர் - மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால்!

16:32 (IST)06 Apr 2020
14 மாத குழந்தைக்கு கொரோனா

குஜராத்தின் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த தினக்கூலி வேலைபார்க்கும் தம்பதியரின் 14 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

குழந்தையின் பெற்றோர் சமீபத்தில் எவ்வித பயணமும் மேற்கொள்ளாத நிலையில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு

16:19 (IST)06 Apr 2020
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 70,172ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 70,172ஆக உயர்வு. அதிகபட்சமாக இத்தாலி - 15,887 ஸ்பெயின் - 13,055 அமெரிக்கா - 9,620 பிரான்ஸ் - 8,078 பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் 12.82 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் - 2.69 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்

16:11 (IST)06 Apr 2020
அரசுக்கு ரூ.7,900 கோடி மிச்சமாகும்

ஊதியம் குறைப்பு, தொகுதி நிதி நிறுத்தம் ஆகியவற்றின் மூலம் அரசுக்கு ரூ.7,900 கோடி மிச்சமாகும்.

கொரோனாவால் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக அளவில் பாதிப்பு.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்.

16:06 (IST)06 Apr 2020
கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்த அனுமதி

தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்த அனுமதி

* "கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க கல்லூரி மற்றும் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்

16:02 (IST)06 Apr 2020
ஊதியம் 30 சதவீதம் குறைப்பு

குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், ஆளுநர்களின் ஊதியம் 30 சதவீதம் குறைப்பு. பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஊதியமும் 30 சதவீதம் குறைப்பு. அனைத்து எம்.பி-க்களின் ஓராண்டு ஊதியமும் 30 சதவீதம் குறைப்பு. ஊதிய குறைப்பால் சேமிக்கப்படும் நிதி கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு - அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது

15:41 (IST)06 Apr 2020
புதிதாக வைரஸ் தொற்று இல்லை

அசாமில் புதிதாக வைரஸ் தொற்று இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக வைரஸ் தொற்று இல்லை என்று அமைச்சர் ஹிம்ந்தா பிஸ்வா கூறியுள்ளார்.

15:15 (IST)06 Apr 2020
எண்ணெய் இல்லாத மக்கள் எப்படி விளக்கு ஏற்றுவார்கள்?

முறையான திட்டமிடல் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது - பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்

அடுத்த வேளை சமைப்பதற்கு எண்ணெய் இல்லாத மக்கள் எப்படி விளக்கு ஏற்றுவார்கள்? - கமல்ஹாசன்

15:14 (IST)06 Apr 2020
1800-425-0111 என்ற எண்ணில் அழைக்கலாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு 24 மணி நேரமும் உதவ அரசு தயாராக உள்ளது - ஜானி டாம் வர்க்கீஸ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர்

* உதவி தேவைப்பட்டால் 1800-425-0111 என்ற எண்ணில் அழைக்கலாம்

14:35 (IST)06 Apr 2020
OTPயையும் பெற்றபிறகு பண மோசடி நடக்கிறது

”EMI-ஐ நீட்டிப்பு செய்கிறோம் எனக்கூறி வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு கொடுத்து தகவல்களை பெறுகிறார்கள். OTPயையும் பெற்றபிறகு பண மோசடி நடக்கிறது. எனவே கவனமுடன் இருக்க வேண்டும்”- ஐபிஎஸ் அதிகாரி ரூபா எச்சரிக்கை

14:34 (IST)06 Apr 2020
வனத்துறை அமைச்சகம் எச்சரிக்கை

அமெரிக்கா வனஉயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா தொற்று எதிரொலி

இந்தியாவில் உள்ள வன உயிரியல் பூங்காக்களுக்கு மத்திய வனத்துறை அமைச்சகம் எச்சரிக்கை. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவு.

நோய்வாய்ப்பட்ட விலங்குகளை தனிமையில் வைத்து கண்காணிக்க உத்தரவு. நோய்வாய்ப்பட்ட விலங்குகளின் ரத்த மாதிரிகளை உடனடியாக ஆய்வகங்களுக்கு அனுப்ப உத்தரவு.

14:13 (IST)06 Apr 2020
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 - முதலமைச்சர் பழனிசாமி

"இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரிக்கிறது. 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளன. மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. 3,371 வெண்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன. பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும். 21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகு தான் பள்ளித் தேர்வுகள் குறித்து முடிவு செய்யப்படும். அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே அரசின் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்" - முதல்வர் பழனிசாமி.

14:00 (IST)06 Apr 2020
முதல்வர் பேட்டி

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி, “மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும். மக்களை துன்புறுத்த வேண்டும் என்பது, அரசின் நோக்கமல்ல. மக்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்களை முடிந்தளவு வீடுகளுக்கே சென்று, வழங்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சென்னையிலும் நடமாடும் காய்கறி கடைகளை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார். 

13:53 (IST)06 Apr 2020
அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

கொரோனா நோய் தடுப்பு பணிக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி வழங்கப்படும் எனவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் நிவாரண நிதியாக வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

13:45 (IST)06 Apr 2020
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 8 பேர் மீது வழக்குப்பதிவு

டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு மதுராந்தகத்தில் தங்கியிருந்த இந்தோனேசியர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்ட விதி மீறல், விசா விதி மீறல், 144 தடை மீறல் உள்ளிட்ட விதிகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

13:16 (IST)06 Apr 2020
கண்காணிப்பில் உயிரியல் பூங்காக்கள்

நாடு முழுவதும் உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை கண்காணிக்க உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

12:28 (IST)06 Apr 2020
தடையை மீறியதால் 82,752 வழக்குகள்

ஊரடங்கு உத்தரவை மீறியதாக, தமிழகத்தில் இதுவரை 82,752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் காவல்துறையால் 90,918 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் சுற்றிய 69,589 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இதுவரை 24 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிப்பு

12:26 (IST)06 Apr 2020
கொடியேற்றிய ஹெச்.ராஜா
12:13 (IST)06 Apr 2020
மக்கள் ஒத்துழைப்பு அவசியம் -அமைச்சர் ஜெயக்குமார்

நிலவேம்பு குடிநீர் போல் கபசுர குடிநீர் குடிப்பதும் பயனுள்ளதாக இருக்கும், அது நன்மைதரும் என்றும், அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம் எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

11:28 (IST)06 Apr 2020
கவுதம் காம்பீர் மேலும் 50 லட்சம் ஒதுக்கீடு

கொரோனா மருத்துவ உபகரணங்களுக்காக, எம்.பி கவுதம் காம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே அவர் ரூ.50 லட்சத்தை டெல்லி அரசுக்கு வழங்கியது குறிப்பிடத் தக்கது. 

11:17 (IST)06 Apr 2020
சமூக விலகலை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல்

மதுரை மாட்டுத்தாவணி மொத்த காய்கறி சந்தையில் சமூக விலகலை கடைப்பிடிக்காத 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் வழங்கியும் சமூக விலகலை கடைப்பிடிக்காததால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதே போல் சென்னை தி நகரில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

10:59 (IST)06 Apr 2020
சுப.உதயகுமார் மீது வழக்குப் பதிவு

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் மீது கோட்டார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு

10:34 (IST)06 Apr 2020
மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலம் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. 

10:08 (IST)06 Apr 2020
மலேசியா செல்ல முயன்ற 10 பேர் மீது வழக்கு

சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் மலேசியா செல்ல முயன்ற 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற 10 பேரும் மலேசியா செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். 

09:47 (IST)06 Apr 2020
கொரோனா விழிப்புணர்வு பாடல்

கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும், சோர்வடைந்த மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் சிஆர்பிஎஃப் வீரர்களின் இசைக்குழு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது. பேண்டு வாத்தியங்கள் முழங்க இசைக்கப்ப்டும் அந்த பாடலை சிஆர் பிஎஃப் வெளியிட்டுள்ளது. 

09:35 (IST)06 Apr 2020
இந்தியாவில் 4000-ஐ கடந்த கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,067ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

09:27 (IST)06 Apr 2020
ப.சிதம்பரம் ட்வீட்

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது. கொரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். 

Corona Virus Updates : ’தமிழகத்தில் எதிர்ப்பார்த்ததை விட 1,000 மெகாவாட் மின்சாரம் குறைந்துள்ளது. எந்த இடத்திலும் பிரச்னை ஏற்படவில்லை. அரசின் வேண்டுகோளை ஏற்று ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும், மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி" என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Web Title:Coronavirus updates live covid 19 india lockdown

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X