/tamil-ie/media/media_files/uploads/2020/04/b215.jpg)
Covid-19 Cases Update: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், கிருமிநாசினி தெளிப்பான் கருவிகள் மாவட்டங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் 6,500 கிருமிநாசினி தெளிப்பான் கருவிகளை, பணியாளர்களிடம் வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர், உள்ளாட்சித் துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறினார்.
டெல்லி மாநாட்டிற்கு சென்ற நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அனைவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தடுப்பு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 15-க்கும் மேற்பட்டவர்கள் மேலப்பாளையத்தை சேர்ந்தவர்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனால் மேலப்பாளையம் செல்லும் அனைத்துப் பகுதிகளும் அடைக்கப்பட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலப்பாளையத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு சார்பில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Coronavirus Latest Updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: தற்போதைய சூழ்நிலையில் கேரளாவில் பால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் 1,80,000 லிட்டர் பால் மிச்சமாகிறது. இதையடுத்து கேரளாவில் மிச்சமாகும் பாலை வாங்கிக் கொள்ள முடியுமா என்று தமிழக அரசிடம் கேட்டிருந்தோம். இதை பரிசீலிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்நிலையில் தினமும் கேரளாவில் இருந்து 50,000 லிட்டர் பாலை வாங்கிக் கொள்வதாக ஈரோடு ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. அங்கு பால் பவுடர் தயாரிக்க இந்த பால் வாங்கப் படுகிறது . கேரளாவின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நிதி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் சிலர், இதிலும் போலி கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இப்படியான போலி கணக்குகளில் ஒன்றை புவனேஷ்வர் குமார் என்பவர் உருவாக்கி இருப்பதை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்தும் உள்ளன. தற்போது அந்த நபரை புலனாய்வுத்துறை அதிகாரிகள் குழு தேடி வருகிறது.
அவிநாசியில் புதிய பேருந்து நிலையத்தில் நாளை 2 -04 -2020 முதல் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை அவிநாசி தினசரி மார்கெட் செயல்படும் - சபாநாயகர் தனபால்
அவிநாசியில் புதிய பேருந்து நிலையத்தில் நாளை 2 -04 -2020 முதல் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை அவிநாசி தினசரி மார்கெட் செயல்படும் pic.twitter.com/ZTiMIlUldE
— P Dhanapal (@PDhanapaloffcl) April 1, 2020
110 புதிய கொரோனா பாதிப்புகள் மாவட்டம் வாரியாக,
திருநெல்வேலி - 6
கோவை - 28
ஈரோடு - 2
தேனி - 20
திண்டுக்கல் - 17
மதுரை - 9
திருப்பத்தூர் - 7
செங்கல்பட்டு - 7
சிவகங்கை - 5
தூத்துக்குடி - 2
திருவாரூர் - 2
கரூர் - 1
காஞ்சி - 2
சென்னை - 1
திருவண்ணாமலை - 1
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் காலை உணவு வழங்கினர். நகராட்சி அலுவலகத்தில் இருந்து தூய்மை பணிக்கு செல்லும் முன் தேநீர் அளித்தும் விருந்தோம்பலில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த எண்ணிக்கை 1637 ஆனது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 38 பேர் பலியாகி உள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், மத்திய அரசு வருங்கால வைப்பு நிதி, மற்றும் சிறுசேமிப்புக்கு வட்டி குறைப்பு செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், வட்டி குறைப்பு பொருளாதார விதிப்படி சரியானது என்றாலும் தவறான நேரத்தில் இதை செய்யப்படுகிறது. வருகிற ஜூன் மாதம் 30 வரை, பழைய வட்டி விகிதத்தையே கடை பிடிக்க வேண்டும் என்று வேண்டுகொள் விடுத்துள்ளார்.
While reducing the interest rate on PPF and small savings may be technically correct, it is absolutely the wrong time to do so.
— P. Chidambaram (@PChidambaram_IN) April 1, 2020
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை வரை பணியில் இருந்த மருத்துவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
பயணம் தொடங்கியது என்ற தலைப்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “வெளியில் நடமாடுவதால் நமக்கு தெரியாமால் வைரஸின் பலத்தை அதிகரிக்கிறோம். கொரொனாவை குறைத்து மதிப்பிட்டதாலேயே வளர்ந்த நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருந்தால் நாம் மறைவாக இருப்பதே விவேகமானது என்பதை உணர வேண்டும். அதனால், தேவையின்றி வீட்டுக்கு வெளியே வரவேண்டாம். மரணத்தை நேருக்குநேர் சந்திக்க வேண்டாம். கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரின் ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் வரும்காலத்தில் நிலைமை கடினமாக இருக்கும். தனித்திருந்து மனதை அடக்கி வெற்றி காண்பதற்கு வேறெந்த வெற்றியும் ஈடாகாது.” என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு அளிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 144 தடை உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், சென்னையில் ஏப்ரல் 15-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும், 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
”டெல்லியில் நடந்த தப்லிஹி ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரியைச் சேர்ந்த 6 பேரையும், காரைக்காலின் 3 பேரையும் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற அனைவரும் தாமாக முன் வந்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
We've identified 6 people from Puducherry & 3 from Karaikal who had attended Tablighi Jamaat meeting in Delhi. Their samples have been taken & sent for tests. I appeal to all other people who had attended the meeting to come forward & identify themeselves: Puducherry CM(file pic) pic.twitter.com/yMswGaWV4L
— ANI (@ANI) April 1, 2020
கடந்த மார்ச் 8 முதல் 20 வரை டெல்லி நிஜாமுதீன் தப்லிஹி மாநாட்டில் கலந்துக் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதால், அதில் கலந்துக் கொண்டவர்கள் தாமாக முன்வந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும், என தமிழக மக்கள் நலவாழ்வுத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 8.59 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 1.7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்கா - 1,88,592, இத்தாலி - 1,05,792, ஸ்பெயின் - 95,923, ஜெர்மனி - 71,808, பிரான்ஸ் - 52,128, பிரிட்டன் - 25,150 என்ற கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை, வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. அதோடு, பிப்ரவரி மாதத்தில் இருந்தே மாநில சுகாதார அதிகாரிகள் ஈஷா மையத்தில் மருத்துவ சோதனைகளை பார்வையிட்டு வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை அடையாளம் காணும் பணி தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார துறையுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் காவல்துறையும் தீவிரம் காட்டி வருகிறது. செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 46 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்ற 35 பேருக்கு திருவாரூரில் பரிசோதனை நடத்தப்படுகிறது. திருவண்ணாமலை 7, ராஜபாளையம் 4, மதுரை, தூத்துக்குடியில் தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1,131 பேர் கலந்து கொண்டனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில், உணவருந்தி தர பரிசோதனையில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனா தொற்றின் தாக்கத்தை அறியாமல் மக்கள் வெளியே வருகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும். கொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights