Advertisment

ரெம்டெசிவைர் மருந்து: தீவிர கொரோனா நோயாளிகளுக்கு வழங்க ஒப்புதல்

Coronavirus Treatment: கொரோனா நோயின் தீவிரத்தை அதிகமாக வெளிப்படுத்தும்  இளம் வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு ரெம்டெசிவைர் எனும்  ஆன்டிவைரல் மருந்தை பயன்படுத்த ஒப்புதல்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரெம்டெசிவைர் மருந்து: தீவிர கொரோனா நோயாளிகளுக்கு வழங்க ஒப்புதல்

antiviral remdesivir cleared for use in ‘severe’ Covid cases: கொரோனா நோயின் தீவிரத்தை அதிகமாக வெளிப்படுத்தும் இளம் வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு ரெம்டெசிவைர் எனும்  ஆன்டிவைரல் மருந்தை பயன்படுத்த மருந்து தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) நேற்று ஒப்புதல் அளித்ததை  'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' அறிகிறது.

Advertisment

கொரோனா நோய் பரவலுக்கு தீர்வைக் கண்டறியும்  உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளில், இந்த ரெம்டெசிவைர் மருந்து மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப் பட்டுவந்தது.

இந்த தடுப்பூசி மருந்தை அதிகபட்சமாக ஐந்து நாட்கள்  வரை நோயாளின் உடலில் நிர்வகிக்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டுத் தலைமையக அதிகாரி டாக்டர் வி.ஜி சோமானி அளித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பயோஃபார்மா நிறுவனமான கிலியட் சயின்சஸ் தயாரிக்கும் இந்த மருந்தை, மும்பையைச் சேர்ந்த க்லினெரா குளோபல் சர்வீசஸ் நிறுவனம் இறக்குமதி செய்யவுள்ளதாகவும்  வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒப்புதலின் போது பெறப்பட்ட மருந்தியக்கப் பரிசோதனைகள் முடிவின் அடிப்படையில், ஆபத்துடைய நோயாளிகளுக்கு  மருந்தை 10 நாட்களுக்கு நிர்வகிக்க மத்திய அரசின் மருந்து தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு மறுத்துவிட்டதாகவும் அரியப்படுகிறது.

ஐந்து நாட்களுக்கு பதில் பத்து நாட்கள் மருந்தை  பயன்படுத்துவதினால் நோயாளியிடம் எந்த விதமான கூடுதல் நன்மை இல்லை என்று நிறுவனத்தின் சமீபத்திய பரிசோதனை தரவுகள் எடுத்துரைக்கிறது. நோயாளிகளிடம் ஏன் ஐந்து நாட்கள் கூடுதாலாக மருந்தை நிர்வகிக்க வேண்டும்? மருந்து  பயன்பாடு நீட்டிக்கப்பட்டால்  இறப்பு விகிதம் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, தீவிரத் தன்மையை உணர்ந்து அதிகாரிகள் முடிவேடுக்க வேண்டும்,”என்று  பெயர் குறிப்பிட விரும்பாத சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஒப்புதல் மூலம், இந்தியாவில் generic voluntary licence-ஐ  கொண்ட நிறுவனங்கள் ரெம்டெசிவைர் மருந்தை தயாரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மருந்தின் பயன்பாடு ஐந்து நாட்களுக்கு கட்டுப்படுத்துவதன் மூலம் நோயாளிகளின் பணம்  மிச்சமாகும்”என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இந்த முன்னேற்றம் குறித்து கிலியட் சயின்சஸ் நிறுவனத்திடம் மின்னஞ்சல் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை.

எவ்வாறாயினும், திங்களன்று தனது SIMPLE பரிசோதனை முயற்சியின் 3-ம் கட்ட முடிவுகளை அந்த நிறுவனம் அறிவித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளில், ரெம்டெசிவைர் மருந்து நிர்வகிக்காத நோயாளிகளை விட நிர்வகித்த நோயாளிகளில் (active comparator-controlled clinical trial) 65 சதவீதம் அதிகமானோர் தங்களின் 11 வது நாளில் முன்னேற்றம் அடைவதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றது.

ரெம்டெசிவைர் ஆன்டிவிரல் மருந்து மருத்துவமனை அல்லது நிறுவன அமைப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்படும்.மேலும் ஒவ்வொரு நோயாளியும் (அ)அவர்களின் பிரதிநிதிகளும் சுய உறுதியளித்தல் ஆவணத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே மருந்து நிர்வகிக்கப்படும் என்று விசயங்களை நேரடியாக அறிந்த மற்றொரு வட்டாரம் தெரிவிக்கின்றது.

சிறுநீரக மற்றும் கல்லீரல் குறைபாடுள்ள நோயாளிகளுக்கு நிர்வகிப்பதால் ஏதேனும் அபாயங்கள் உள்ளனவா? என்பதை மருந்து அட்டையில் குறிப்பிட வேண்டும். மேலும், அதுபோன்ற சூழ்நிலையில் இந்த மருந்தை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்று தெரிவிக்கவேண்டும்.

நிறுவனத்தின் இடர் மேலாண்மை திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் மருந்து பயன்பாட்டிலிருந்து வெளிவரும் பாதகமான எதிர்வினைகள் குறித்த தரவுகளை சேகரித்தல்,  பதப்படுத்துதல், அனுப்புதல் ஆகியவற்றுக்கான ஒரு நெறிமுறையை மருந்து தரநிலை ஒழுங்குமுறை அமைப்பு  கட்டாயப்படுத்தியுள்ளது. இது ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கூடுதல் மருந்தியக்கப் பரிசோதனை முடிவுகளை குறைந்தது  ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதே நேரத்தில் இந்தியாவில் ரெம்டெசிவைர் சிகிச்சை பெரும் அனைத்து நோயாளிகளின் கண்காணிப்பு குறித்த தகவலை மாதாந்திர அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment