Advertisment

கொரோனா தடுப்பு மருந்து சோதனைக்கு பிரேசில் ஒப்புதல் - மாடர்னா மருந்து இறுதி சோதனைக்கு தயார்

Coronavirus (Covid-19) Vaccine Latest Update: புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்திற்கு கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க மத்திய அரசு அனுமதித்ததன் பேரில், அந்த மருந்துகளை 3 முதல் 4 வயதான 30 குரங்குகளிடையே சோதனை நடத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உருவான 2வது தடுப்பு மருந்து!

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 6.29 மில்லியன் அளவிலான மக்களை கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ள நிலையில், நோய்த்தடுப்பூசியின் மூலமே, இதனை கட்டுப்படுத்த முடியும் என்பதால், உலக நாடுகள், தடுப்பூசி கண்டுபிடிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன.

Advertisment

இந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளின் பலனாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை தயாரிக்க 5 நிறுவனங்களை தேர்வு செய்துள்ளார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணந்து தயாரித்துள்ள தடுப்பு மருந்தை மனிதர்களிடம் சோதனை நடத்த பிரேசில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

சர்வதேச அளவில், தற்போதைய நிலையில் 120 மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 10 மருந்துகள், மனிதர்களிடையே விரைவில் சோதனை செய்துபார்க்கப்பட உள்ளன.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 14 மருந்துகளில் அடுத்த 3 முதல் 5 மாதங்களுக்குள் 4 மருந்துகள் சோதனை செய்யப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை, இந்தாண்டு இறுதிக்குள் வர்த்தப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை வகுத்து வருகிறார். அதன்படி, Moderna Inc, AstraZeneca Plc and Pfizer Inc,Johnson & Johnson and Merck & Co Inc உள்ளிட்ட 5 நிறுவனங்களை, டிரம்ப் தேர்வு செய்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனங்களுக்கு, சோதனைகளுக்காக கூடுதல் நிதியினை வழங்க டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனங்கள், கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பிற்கு தேவையான மருந்துகளை பிரான்ஸ் மருந்து நிறுவனங்களான Sanofi, Novavax Inc and Inovio Pharmaceuticals Inc. உள்ளிட்டவைகளிடமிருந்து பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரம்ப் அரசு, இந்த மருந்துகளை 1.5 லட்சம் வரையிலான மக்களிடம் வைத்து சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சோதனைகள், ஜூலை மாதம் பிற்பகுதியில் துவங்கும் என்றும், முதற்கட்டமாக Moderna and the AstraZeneca/Oxford University இணைந்து தயாரித்துள்ள மருந்தை, அமெரிக்கா சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா இணைந்து தயாரித்துள்ள ChAdOx1 nCoV-19 மருந்தை மனிதர்களிடம் சோதனை செய்ய பிரேசில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம், முதலில் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் நிலையில் உள்ளது. இது அமெரிக்க பயோடெக் நிறுவனமான மாடர்னா உடன் இணைந்து ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றியுள்ளது.

மூன்றாம் கட்ட சோதனையில் மருந்தின் பாதுகாப்பு, திறன், வைரசின் பல்கிப்பெருகும் திறனை தடுப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்று பிரேசில் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி அன்விசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

publive-image

இந்த சோதனைகளுக்காக, ஷா பாலோவில் உள்ள பெடரல் பல்கலைகழகம், புதிதாக ஆயிரம் தன்னார்வலர்களை பணியமர்த்த உள்ளது.

அமெரிக்காவின் மசாசுசெட்ஸை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மாடர்னா நிறுவனம் mRNA-1273 மருந்தின் இரண்டாம் கட்ட சோதனையை, கடந்த வாரம் நிகழ்த்தியுள்ளது. இறுதிகட்ட ஆய்வை, ஜூலை முற்பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளது.

மூன்றாம் கட்ட சோதனைக்காக, 18 முதல் 55 வயது கொண்ட 30 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த 3ம் கட்ட சோதனை முடிவுகள் இந்தாண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் வெளியாகும் என்றும், இந்த முடிவுகளை பொறுத்து 100 மில்லியன் டோஸ் மருந்தை தயாரிக்க மாடர்னா நிறுவனம் தயாரித்திருக்கும் என்று அலர்ஜி நோயியல் சிறப்பு மருத்துவர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார்.

மாடர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்து, இதற்கு முந்தைய சோதனைகளில், வைரசுக்கு எதிராக ஆன்ட்டிபாடிகளை தேவையான அளவில் உற்பத்தி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், ஐசிஎம்ஆர் உடன் இணைந்து பாரத் பயோடெக் இன்டர்நேசனல் லிமிடெட் நிறுவனம் 30 தடுப்பு மருந்துகளை உருவாக்கியுள்ளது. இந்த மருந்துகளின் சோதனைகள் நல்ல முடிவுகளை வழங்கியுள்ளது. வரும்காலங்களில் தங்களுக்கு மிகவும் முக்கியமான காலகட்டம் என்றும்,விஞ்ஞானி என்ற முறையில் நான் கூறுகிறேன். சோதனை முடிவுகள் நல்ல பயனை அளிக்க இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவன தலைமை செயல் அதிகாரி கிருஷ்ண மோகன் எல்லா தெரிவித்துள்ளார்.

புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்திற்கு கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க மத்திய அரசு அனுமதித்ததன் பேரில், அந்த மருந்துகளை 3 முதல் 4 வயதான 30 குரங்குகளிடையே சோதனை நடத்தியுள்ளது.

தென்கொரியா கண்டுபிடித்துள்ள மருந்தை, இம்மாத இறுதியில் சோதனை நத்த உள்ளதாக கொரியா ஹெரால்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. y Inovio’s vaccine candidate INO-4800 மருந்தை, சர்வதேச தடுப்பு மருந்து மையம் மற்றும்ச சியோல் தேசிய மருத்துவ பல்கலைகழகம் இணைந்து உருவாக்கியுள்ளது.

முதற்கட்ட சோதனை 19 முதல் 50 வயது கொண்ட 40 பேருக்கும், இரண்டாம் கட்ட சோதனை 19 முதல் 64 வயதினரிடையேயும் நடத்தப்பட்டது. இந்த சோதனை முடிவுகள், செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - Coronavirus (Covid-19) vaccine latest update: Brazil approves Oxford corona vaccine trials; Moderna to start final phase in July

Corona Virus Vaccine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment