திருப்பதி வெங்கடாஜலபதியை பார்க்க கிளம்புங்கடா டோய் - 11ம் தேதி முதல் அனைவருக்கும் அனுமதி
Tirupati devasthanam : 11ம் தேதியில் இருந்து காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை விஐபி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அறிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாதவர்களுக்கு கோயில் மலை அடிவாரத்தில் கவுண்டர் அமைத்து டிக்கெட் விநியோகம் செய்யப்படவுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜூன் 11ஆம் தேதி முதல் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பேருக்கு ஏழுமலையான் தரிசனம் வழங்கத் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தேசிய அளவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, மார்ச் 25ம் முதல் திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
மே 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு 5 வது முறையாக ஜூன் 30ம் தேதி வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டது. இந்த தளர்வுகளில் மத வழிபாட்டு தலங்களை வரும் 8ம் தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
Advertisment
Advertisement
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 11ம் தேதி முதல் வெளியூர் பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி வரும் 8ம் தேதி திருப்பதி கோயில் நடை திறக்கப்பட்டு தேவஸ்தான ஊழியர்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், வரும் ஜூன் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் 11ம் தேதி முதல் தினமும் ஆன்லைனில் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு நாளுக்கு 3 ஆயிரம் பக்தர்கள் என ஒரு மணி நேரத்துக்கு 500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும், 11ம் தேதியில் இருந்து காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை விஐபி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அறிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாதவர்களுக்கு கோயில் மலை அடிவாரத்தில் கவுண்டர் அமைத்து டிக்கெட் விநியோகம் செய்யப்படவுள்ளது.
கொரோனா பொது முடக்கத்தால் இரண்டரை மாத கால நீண்ட இடைவெளிக்கு பின்னர் திருப்பதி ஏழுமலையானை வரும் 11ம் அனைத்து பக்தர்களும் தரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil