பிச்சை எடுத்த சிறுவன்; கேரளாவில் வீடற்றவர்களின் பாதுகாவலராக மாறிய முருகன்

​​முருகன் எஸ் என்பவர் குழந்தையாக இருந்தபோது, கொச்சியின் தெருக்களில் வசித்து வந்தார். உணவுக்காக அந்நியர்களிடம் பிச்சை கேட்டவர். இன்றைக்கு தனது தெருவோரம் தொண்டு நிறுவனம் மூலம்...

​​முருகன் எஸ் என்பவர் குழந்தையாக இருந்தபோது, கொச்சியின் தெருக்களில் வசித்து வந்தார். உணவுக்காக அந்நியர்களிடம் பிச்சை கேட்டவர். அவரது தந்தை, ஒரு குடிகாரர், மற்றும் அவரது தாயார் ஒரு தினக்கூலி. அவருக்கு ஒரு நாளைக்கு ஒரு வீடு அல்லது இரண்டு வாய் உணவை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை. ஆகவே, அவர் தனது பதின்வயதுக்கு முந்தைய ஆண்டுகளை கழிவு கூடைகளில் இருந்து எஞ்சியவற்றிற்காகவும் உணவுக்கு ஈடாக ஏதெனும் ஒரு வேலையைச் செய்தார்.

பின்னர் ஒரு நாள், காவல்துறையினர் அவரைக் கண்டுபிடித்து அனாதை இல்லத்தில் சேர்த்தனர். அங்கு அவர் பல ஆண்டுகளாக கன்னியாஸ்திரிகளால் பராமரிக்கப்பட்டு வந்தார். அங்கே அவர், அன்னை தெரசா, ஸ்ரீ நாராயண குரு போன்ற புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதிகளின் பணிகளை அறிந்திருந்தார். “அவர்களின் கொள்கைகளும் போதனைகளும் எப்படியோ என் மனதில் வேரூன்றி விட்டன. ஆனால், அதைப் பற்றிக்கொண்டு எப்படி செல்வது என்று எனக்குத் தெரியவில்லை” என்று 34 வயதான முருகன் எஸ் போனில் கூறினார்.

அடுத்த 7 ஆண்டுகளுக்கு, அவர் சைல்ட்லைனில் தன்னார்வலராக பணியாற்றினார். ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவை வாங்குவதற்காக பணம் சேமித்து வந்தார். மற்றொரு பக்கம், கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் வயதானவர்களை, குறிப்பாக மனநல பிரச்சினைகள் உள்ளவர்களைக் கண்காணித்து, அவர்களை வீதிகளில் இருந்து மீட்டார். 2007-ம் ஆண்டில், ஒரு சமூக சேவகர் என்ற அவரது லட்சியங்கள் மலையாளத்தில் தெரு என்று பொருள்படும் தெருவோரம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் பரவலானது.

கோவிட்-19-இன் காலத்தில், பெரும்பான்மையான இந்தியர்கள் தங்கள் வீடுகளில் சமூக இடைவெளியைக் கடைபிடித்துக்கொண்டிருந்தபோது, முருகனும் அவருடைய தெருவோரம் என்.ஜி.ஓ வில் உள்ள 8 பேர் கொண்ட குழுவும் கேரளாவின் வீதிகளில் இருந்து வீடற்ற மற்றும் ஆதரவற்ற மக்களை மீட்டு அழைத்துக்கொண்டு பாதுகாப்பான ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

அத்தகையவர்களில் பெரும்பாலோர், ஆச்சரியப்படும் விதமாக, வேலைக்காக கேரளாவுக்கு வந்த பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். “நாங்கள் மீட்கும் மக்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பெரும்பாலும் 20 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள். அவர்களில் பலர் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை அழிக்கிறார்கள். விரைவில், அவர்களுக்கு மனநல பிரச்சினைகள் உருவாகிறது” என்று முருகன் கூறினார்.

“நாங்கள் அத்தகையவர்களைக் கண்டுபிடித்து அவர்களைக் குளிக்க வைத்து புதிய ஆடைகளை கொடுத்து, பின்னர் அவர்களை ஒரு மனநல மையம் அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம். நாங்கள் மீட்கும் ஒவ்வொரு நபருக்கும், உள்ளூர் போலீசாரிடமிருந்து நாங்கள் அனுமதி வாங்குகிறோம்” என்று கூறினார்.

தெருவோரத்தின் ஊழியர்கள், 6 உதவியாளர்கள் மற்றும் இரண்டு ஓட்டுநர்கள் உட்பட, ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்துகின்றனர். அவை மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கம் (AMMA) கேரள திரைப்படத் துறையில் நடிகர்களின் கூட்டு மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. AMMA நன்கொடை அளித்த ஆம்புலன்ஸ் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. ஏனென்றால், அதன் மேலே ஒரு தண்ணீர் தொட்டியும் பின்புறத்தில் ஒரு ஷவரும் உள்ளது. மீட்கப்படும் ஆதரவற்றவர்களை பாதுகாப்பான வீட்டிற்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் அவர்களை குளிக்க வைக்க இந்த சிறப்பு வடிவமைப்பு உதவியாக உள்ளது.

தேசிய பொதுமுடக்கம் முதல் சில வாரங்களில், ஏப்ரல் கடைசி வாரம் வரை கேரளாவின் 6 மாவட்டங்களின் தெருக்களில் இருந்து 617 பேரை தனது குழு மீட்டதாக முருகன் கூறினார். “அவர்களில் பலர் பல மாதங்களாக குளிக்காமல் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளனர். இது போன்ற ஒரு நேரத்தில், அவர்கள் செல்லும் இடமெல்லாம் அவர்கள் தற்செயலாக கிருமிகளையும் தொற்றுநோயையும் பரப்பக்கூடும். கொல்லத்தில், கைகளில் பெரிய மற்றும் கனமான எஃகு வளையல்களைக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டோம். அவற்றைத் திறக்க தீயணைப்புத் துறையின் உதவியை நாட வேண்டியிருந்தது” என்று அவர் கூறினார்.

சராசரியாக ஒரு நாளில், தெருவோரம் குழுவினர் தங்கள் 2 ஆம்புலன்ஸ்களுக்கும் ஒரு நாளைக்கு ரூ.8,000 எரிபொருளுக்காக செலவிடுகிறார்கள். மேலும் ஷேவிங் கிட்கள், உடைகள், முகக் கவசங்கள் மற்றும் கை துப்புரவுப் பொருட்களை வாங்க கூடுதல் பணத்தை தேட வேண்டும். இது முற்றிலும் தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் நன்கொடைகளைப் பொறுத்தது என்று சமூக சேவைக்கான பல கௌரவங்களைப் பெற்ற முருகன் கூறுகிறார்.

2012 ஆம் ஆண்டில், கொச்சியைச் சேர்ந்த ஏழ்மையான இந்த ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் சமூக சேவைக்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடமிருந்து விருந்து வாங்கினார். மேலும், 2015-ம் ஆண்டில், தொலைக்காட்சி நெட்வொர்க் டைம்ஸ் நவ் வழங்கிய ‘அமேசிங் இந்தியன்ஸ்’ விருதை பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து பெற்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close