தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை இலவசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆய்வகங்களில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்களில் கோவிட்-19, தொடர்பான பரிசோதனைகளை இலவசமாக நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆய்வகங்களில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்களில் கோவிட்-19, தொடர்பான பரிசோதனைகளை இலவசமாக நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
coronavirus testing free, covid 19 testing private labs, கொரோனா வைரஸ் பரிசோதனை இலவசமாக செய்ய உத்தரவு, உச்ச நீதிமன்றம், மத்திய அரசு, கோவிட்-19, supreme court order on coronavirus testing, india news, coronavirus cases india, india news, tamil indian express
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளை தாக்கிய கொரோனாவுக்கு, இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது தனியார் ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனையை இலவசமாக நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதுதொடர்பாக உடனடியாக வழிகாட்டுதல்களை வெளியிடவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Advertisment
நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனையை இலவசமாக செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சஷாங்க் தியோ சுதி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் உச்ச நிதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எஸ்.ரவீந்திர பட் அடங்கிய அமர்வு விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு, அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆய்வகங்களில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்களில் கோவிட்-19, தொடர்பான பரிசோதனைகளை இலவசமாக நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Advertisment
Advertisements
மேலும், இந்த கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகளை, “பரிசோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகாரம் வாரியம் என்.ஏ.பி.எல் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் அல்லது உலக சுகாதார அமைப்பு (WHO) அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) அங்கீகரித்த ஏதேனும் ஏஜென்சிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
“தேசிய பேரிடர் போது, தனியார் ஆய்வகங்கள் கோவிட்-19 ஸ்கிரீனிங் மற்றும் வைரஸ் நோய்த் தொற்றை உறுதிப்படுத்துதல் சோதனைக்கு ரூ.4,500 வசூலிக்கின்றனர். தேசிய பேரிடர் காலத்தில் இந்த நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் பரிசோதனைக்கு ரூ.4,500ஐ செலுத்த முடியாததால், எந்தவொரு நபரும் கோவிட்-9 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என்று மனுதாரர் தாக்கல் செய்த மனுவில் முதன்மையான கருத்தாக உள்ளது.” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளனர்.
அரசாங்க ஆய்வகங்கள் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை இலவசமாக நடத்துகின்றன என்று மத்திய அரசு அறிக்கை சமர்ப்பித்ததைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், தேசிய நெருக்கடி காலத்தில் தொண்டு சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் தொற்றுநோய்களின் அளவைக் கட்டுப்படுத்துவதில் ஆய்வகங்கள் உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், “கோவிட்-19 பரிசோதனையை இலவசமாக நடத்துவதற்கு அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வகங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மனுதாரர் வழக்கு தொடுத்திருப்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம்” என்று நிதிபதிகள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை மொத்தம் 149 பேர் உயிரிழந்துள்ளனர். 5,274 பேர் கோரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”