ராமர் கோவில் : கயிற்றில் நடப்பதை போன்று இறுக்கமான சூழலை சந்திக்கும் காங்கிரஸ்

பிரதமரின் வருகையை கேள்விக்குள்ளாக்கினால் நாங்கள் ராமர் கோவிலுக்கு எதிரான பேசுகின்றோம் என்று பொருள்படுத்துவார்கள்.

By: August 4, 2020, 11:18:52 AM

Manoj C G

அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோவில் பூஜையில் என்ன நிலைப்பாட்டினை எட்டுவது என்ற குழப்பத்தில் உள்ளது காங்கிரஸ் கட்சி. பூமி பூஜையில் கலந்து கொள்வதா அல்லது கோவிலுக்கு நுழைவதா என்பதில் இன்னும் தெளிவான முடிவினை எடுக்கவில்லை காங்கிரஸ்.  இந்த சூழலில் எடுக்கப்படும் எந்த ஒரு தவறான நடவடிக்கையும் இந்தி அதிகம் பேசும் மாநிலங்களில் காங்கிரஸிற்கான வாய்ப்புகள் பாதிக்ககூடும் என்பதை காங்கிரஸ் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது. அயோத்தி பிரச்சனையை மறுபரீசிலனை செய்வதால் பாஜக இந்துத்துவ பலத்தை தக்கவைக்க முயற்சி மேற்கொள்கிறது என்பதால் காங்கிரஸின் ஒரு சாரர் இது தொடர்பாக அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் அரசியல் ரீதியாக கருத்து தெரிவிப்பதிலும் மிகவும் கவனமாக உள்ளது. அயோத்தி இயக்கம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு போன்றவைகளால் இந்த பகுதியில் கட்சி பெரும் பாதிப்பை சந்தித்தது. உயர் சாதியினரின் வாக்குகள் பாஜகவிற்கு சென்றது. இஸ்லாமியர்கள் பி.வி. நரசிம்ம ராவின் ஆட்சி மசூதி இடிப்பை தவிர்க்க முடியாமல் போனதால் ஏமாற்றம் அடைந்தனர். பிராந்திய கட்சிகளான சமஜ்வாடி மாற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மீது தங்களின் கவனத்தை செலுத்தினர்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

கடந்த நவம்பர் மாதம் காங்கிரஸ் கட்சி, உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பினை வரவேற்றது. மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது. ஆனால் தற்போது கட்சி அமைதியாக உள்ளது. ஆனாலும் கூட மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல் நாத் கோவில் கட்டுமானத்தினை வரவேற்கும் விதமாக பேசியுள்ளார். திக்விஜயசிங் நரேந்திர மோடியிடம், கெட்ட நேரத்தில் நிகழ்ச்சி நடைபெற வேண்டாம் என்பதை கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கடந்த வாரம், மீண்டும் காங்கிரஸ் கட்சி, ராமர் கோவில் மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்பதாக கூறினார். கொரோனா போன்ற பெருந்தொற்று சமயத்தில் பிரதமர் மோடி போன்ற முக்கியமான ஆட்கள் ஏன் பங்கேற்க வேண்டும் என்ற கேள்விகளை தவித்துவிட்டு, பங்கேற்பாளர்கள், வழிமுறை, மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை நம்பிக்கை அடிப்பையில் கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் விழாவிற்கு பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகிறது.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக பலமுறை இணைந்துள்ளது, அரசியல் ரீதியாக இதனால் ஆதாயம் அடைகின்றனர், மேலும் இவை அனைத்தும் பெரும்பான்மை அரசை நோக்கி நகர்கிறது. ஆனாலும் இதன் மறுபக்கத்தை எங்களால் காண முடியாது. அரசியல் ரீதியாக இது எங்களை பிரச்சனைக்குள்ளாக்குகிறது என்று மூத்த அரசியல்வாதி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸில் கூறினார்.

இதற்கு தக்கவாறு பதில் கூற வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் குறித்து கேட்ட போது, இதை அவர்கள் ஒரு அரசியல் நிகழ்வாக பார்த்தால், எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் கூறியே ஆக வேண்டும். ராமரை ஒரு சிலருக்கு மட்டுமல்லாமல், அனைவருக்குமான கடவுளாக ஏற்றுக் கொண்டால் ஒரு சிலர் தவிர்த்து, அவரை வணங்குவது என்பது ராமர் மீது இழைக்கப்படும் அவதூறு ஆகும். இதை நாங்கள் கூறியே ஆக வேண்டும் என்று கூறினார். உத்திர பிரதேசத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர், ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் 1986ம் ஆண்டு தான் பாபர் மசூதியின் பூட்டுகள் திறக்கப்பட்டன என்றும் மூன்று ஆண்டுகள் ஷிலாயன்களை அங்கே தங்க அனுமதிக்கப்பட்டனர் என்றும் கூறியிருக்க வேண்டும் என்று மற்ற தலைவர் ஒருவர் கூறினார்.

நிறைய பேர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தான் இந்த விழாவை கொண்டாட உரிமை உள்ளது. நாங்கள் ஏதேனும் கூற இருந்தால் அது சேவல் மற்றும் காளை கதையை தவிர ஒன்றும் இல்லை.

“1980 காலத்தைப் பற்றி பேசினால் எந்த வித்தியாசமும் ஏற்படுமா? கோவிலின் கட்டுமானத்தை வரவேற்பது நல்லது … அந்த மேடையில் உங்களுக்கு இடமில்லை” என்று ஒரு தலைவர் கூறினார். விவாதத்தில் இறங்க காங்கிரஸ் கட்சி வழி தேடி வருகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் இருப்பை கேள்விக்குள்ளாக்கினால், கொரோனா காலத்தில் நாடு இயங்காமலா சென்றுவிட்டது? இதை ஏன் கேள்விக்கு ஆளாக்க வேண்டும். ராமர் கோவில் கட்டுமானத்திற்கு எதிராக பேசுகின்றோம் என்று கதை திரிக்கப்படும் என்று இந்த விவகாரத்தில் காங்கிரஸ் சந்திக்கும் பிரச்சனை குறித்து பேசினார் தலைவர் ஒருவர்.

ராமர் கோவில் கட்டுவதில் எனக்கு பிரச்சனை ஏதும் இல்லை என்று சல்மான் குர்ஷித் தெரிவித்தார். மேலும் நாம் அங்கீகரிக்க வேண்டிய வாழ்வின் உண்மை இது. ஆனாலும் இது சிலரின் பார்வைக்கு சரியான நீதியை அளிக்காத உண்மை. சிறந்த சூழ்நிலைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட தோராயமான நீதி இது என்று அவர் அறிவித்தார்.

மேலும் படிக்க : ஆகஸ்ட் 5 : நேருவின் லட்சியம் மீது விழுந்த மற்றொரு அடி!

”உ.பி. நிர்வாகத்துடன், மத்திய அரசு மற்றும் உயர்மட்டத்தில் இருந்து பிரதமர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் இந்தியாவின் அரசியல் சாசனத்திற்கும் எதிரானது என்று சி.பி.எம். கட்சி திங்கள் கிழமை கூறியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு, 1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மஸ்ஜித் இடித்ததை ஒரு குற்றச் செயல் என்று வர்ணித்தது. குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக, மத்திய / மாநில அரசாங்கங்களின் தலையீடு இந்த அழிவை சட்டப்பூர்வமாக்க கூடாது ”என்று சிபிஎம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Counter narrative or silence congress faces tightrope walk on ram temple

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X