Advertisment

கள்ளச் சாராய சந்தை: கலால் துறையை கண்டித்து புதுவையில் போராட்டம்

புதுச்சேரி கலால்துறை மெத்தனப் போக்கால்தான் புதுச்சேரி கள்ளச் சாராய சந்தையாக உருவெடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டி பொதுநல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
puducherry

Puducherry

தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயம் என நினைத்து மெத்தனால் கலந்த சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். இந்த கள்ளச் சாராயம் புதுச்சேரி பகுதியில் இருந்துதான் தமிழகத்துக்கு கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. புதுச்சேரி கலால்துறை மெத்தனப் போக்கால்தான் புதுச்சேரி கள்ளச் சாராய சந்தையாக உருவெடுத்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு வரும் வருவாய் கிடைக்காமல் போகிறது என கலால் துறையைக் கண்டித்து பொதுநல அமைப்புகள் சார்பில் இன்று (மே 18) கலால்துறை அலுவலகம் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Advertisment

இதற்காக கொக்குபார்க் வளாகத்தில் நேரு எம்.எல்.ஏ தலைமையில் பொதுநல அமைப்புகள் ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக சென்றனர். கலால்துறை அலுவலகம் அருகே போலீசார் பேரிகார்டு அமைத்து தடுத்து நிறுத்தினர். கலால் துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் போலீசார் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் நேரு, "புதுவையில் இருந்து தமிழகப் பகுதிக்கு அதிகளவில் போலி மதுபானம் கடத்தப்படுவது தொடர்பாக தலைமைச்செயலர், ஆட்சியர் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்துள்ளேன். எரிச் சாராயம் கடத்தல் மற்றும் போலி மதுபானத் தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்த தொடர்ந்து கூறி வருகிறேன்.

publive-image

ஆனால், கலால்துறை அதிகாரிகள் கடத்தலுக்கு துணை போகிறார்கள். இதில் கடத்தப்படும் எரிச் சாராயம் மற்றும் போலி மதுபானம் யாருக்கு சொந்தம் எனத் தெரிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறார்கள். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு கவர்னர் உத்தரவிடவேண்டும். இக்குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் ஸ்ரீதர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சுகுமாரன், வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன், மனித உரிமைகள் அமைப்பு முருகானந்தம், தமிழர் களம் அழகர், பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன் மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment