காவிரி விவகாரம்: மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணை

மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணை

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக் கெடுவுக்குள் மத்திய அரசு வாரியத்தை அமைக்கவில்லை. இதனால், மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நேற்று சினிமாத் துறையினரும் வாரியம் அமைக்கக் கோரி மவுன போராட்டம் நடத்தினர். சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தவும் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி என வெளிநாடுகளிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேபோன்று, கர்நாடகாவிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

மேலும் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க 3 மாத காலம் கூடுதல் அவகாசம் கோாி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும், இறுதி தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள “ஸ்கீம்” என்ற வாா்த்தைக்கான அர்த்தம் கோாி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழக அரசை போன்று புதுச்சோி அரசு கொறடா மத்திய அரசுக்கு எதிராக தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, கால தாமதமின்றி காவிாி மேலாண்மை வாாியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனு என காவிாி விவகாரம் தொடா்பான அனைத்தும் ஒன்றாக இன்று விசாரிக்கப்படுகிறது.

×Close
×Close