ஜாமீன் பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட நபர் போஸீசாருடன் கூகுள் லொக்கேஷன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை நீதிமன்றங்கள் விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜாமீன் பெற வேண்டுமானால் ஜாமீன் காலம் முழுவதும் அந்த நபர் தனது கூகுள் லொக்கேஷனை போலீசாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை நீதிமன்றங்கள் விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று திங்களன்று தீர்ப்பளித்தது. இது தனிநபர் உரிமை மீறல்களுக்கு சமமாகும் என்றும் கூறியது.
ஆங்கிலத்தில் படிக்க: Courts can’t order accused to share Google location as condition for bail: Supreme Court
இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனையாக ஜாமீன் பெறும் அந்த நபர் விசாரணை அதிகாரியுடன் தனது மொபைல் கூகுள் மேப் லொக்கேஷனை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த உத்தடவிற்கு தடை விதித்தது.
“ஜாமீனின் நோக்கத்தை முறியடிக்கும் வகையில் ஜாமீன் நிபந்தனைகள் இருக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் நடமாட்டத்தை காவல்துறை தொடர்ந்து கண்காணிக்கவும், குற்றம் சாட்டப்பட்டவரின் தனியுரிமையைப் பார்க்கவும் ஜாமீன் நிபந்தனை இருக்க முடியாது, ”என்று நீதிபதி உஜ்ஜல் புயான் பெஞ்ச் தீர்ப்பளித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“