Advertisment

2 முதல் 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி - வல்லுநர் குழு பரிந்துரை

கோவாக்சின் தடுப்பூசியை, 2 வயது முதல் 18 வரையிலான குழந்தைகளுக்கு அவசர கால தேவைக்கு பயன்படுத்தலாம் என இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதா

author-image
WebDesk
Oct 12, 2021 14:59 IST
2 முதல் 18 வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி - வல்லுநர் குழு பரிந்துரை

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின், ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிகளை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவசரக்கால அடிப்படையில் பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், பாரத் பயோடேக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியை, 2 வயது முதல் 18 வரையிலான குழந்தைகளுக்கு அவசர கால தேவைக்குப் பயன்படுத்த வழங்கலாம் என இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

வல்லுநர் குழுவின் பரிந்துரையை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஏற்றுக்கொண்டது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஒப்புதல் இறுதிகட்ட நிலையில் உள்ளது. ஏற்கனவே 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான சைடஸ் காடிலாவின் டிஎன்ஏ கோவிட் -19 தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

publive-image

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவது குறித்து வல்லுநர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு வந்தன.கோவாக்சினின் பாதுகாப்பு, நோயெதிர்ப்புத் சக்தி மதிப்பாய்வு செய்யப்பட்டது. இதற்காக, நாடு முழுவதும் ஆறு இடங்களில் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளிடம் தடுப்பூசி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் குழந்தைகள் மீது பரிசோதிக்கப்படும் மூன்றாவது தடுப்பூசி கோவாவாக்ஸ் ஆகும். இந்தத் தடுப்பூசியை புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ளது. அமெரிக்க நிறுவனமான நோவாவாக்ஸ் தயாரித்திருக்கும் 'NVX-CoV2373' எனப்படும் தடுப்பூசி தான், இந்தியாவில் கோவாவாக்ஸ் (Covavax) என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. தற்போது இந்தியாவில் 23 இடங்களில் தன்னார்வலர்கள் மீது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகள் மீது  பரிசோதிக்கப்படவுள்ள 4ஆவது தடுப்பூசி ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிகல்-இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி தான். இந்தத் தடுப்பூசயின் பரிசோதனை விரைவில் தொடங்கவுள்ளது.யாலஜிகல்-இ நிறுவனம் தயாரித்து வரும் Corbevax தடுப்பூசி இன்னும் அங்கீகரிக்கப்படாத நிலையில், 30 கோடி டோஸ்கள் வாங்க இந்தியா ஆர்டர் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Covaxin #Dcgi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment