தேர்வு கால பதற்றத்தைக் குறைக்க உதவும் மோடியின் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ புத்தகம்

மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை சமாளிக்கும் வழிமுறைகள் அடங்கிய ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற நூலை நாளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட உள்ளார்.

பள்ளி மாணவர்கள் தேர்வு காலங்களில் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை சமாளிக்கும் வழிமுறைகள் அடங்கிய ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற நூலை நாளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட உள்ளார்.

’எக்ஸாம் வாரியர்ஸ்’ நூலை பிரதமர் மோடி நாளை வெளியிட உள்ள நிலையில், இந்நூலின் அட்டைப்படம் வெளியாகியுள்ளது. இந்நூல் பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் மானவர்களிடம் உரையாடியதன் சில பகுதிகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகத்தின் மூலம், மாணவர்களின் நண்பனாக மோடி விரும்புவதாக பதிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

10 மற்றும் 12-ஆம் வகுப்புகளின்போது மாணவர்கள் எதிர்கொள்ளும் கடினமான மனநிலையை மாற்றும் வகையில் இந்த புத்தகங்களில் சில பாகங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புத்தகத்தை பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பித்துள்ளது. இந்த புத்தகம் குறித்து பதிப்பகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில், “மாணவர்கள் எவ்வாறு மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது, தேர்வு நேரங்களில் அமைதியை கடைபிடிப்பது எப்படி, தேர்வுக்கு பின் எஞ்சிய நேரத்தையும் ஆற்றலையும் எவ்வாறு செலவிடுவது என்பது உள்ளிட்ட பாகங்கள் இடம்பெற்றுள்ளன. இவை உரையாடல் வடிவிலேயே பெரும்பாலும் உள்ளன. நாட்டின் எதிர்காலத்தை நாம் ஏன் நமது கடமையாக கொண்டிருக்க வேண்டும் என்பதும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.”,என குறிப்பிடப்பட்டிருந்தது.

×Close
×Close