Kaunain Sheriff M
Covid-19: Expert group plans digital backend to track vaccine : புதன்கிழமை தேசிய நிபுணர்கள் குழு, கொரோனா வைரஸ் தடுப்பூசி நிர்வாகம் குறித்த ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. கொரோனாவிற்கான தடுப்பூசியை பெறுவது முதற்கொண்டு இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் உள்ள நோயாளிகளுக்கு தருவது வரை அனைத்தையும் உறுதி செய்ய தற்போது நடைமுறையில் இருக்கும் தொழில்நுட்ப தடங்களை மாற்றி அமைப்பது குறித்து பேசப்பட்டது.
டிஜிட்டல் உள்கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து பேசப்பட்டது. அப்போது தான் ஒரு திறன் வாய்ந்த தடுப்பூசி உருவாக்கப்படுவதை, பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது, அதிக அளவு மக்கள் தொகை கொண்ட நாட்டில் நிர்வகிக்க உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஏற்கன்வே இருக்கும் எலெக்ட்ரானிக் வேக்சின் இண்டெலிஜென்ஸ் நெட்வொர்க்கினை (eVIN (Electronic Vaccine Intelligence Network)) மாற்றுவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது. தடுப்பூசிகளின் இருப்பினை அறிந்து கொள்ள உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொழில் நுட்பம் இது.
மத்திய அரசு தடுப்பூசி கொள்முதலை கையாளும். எனவே மாநில அரசுகள் தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கான பணம் மற்றும் நேர விரையத்தை தவிர்க்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட குழு அதனை மையப்படுத்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான டிஜிட்டல் தளம் அமைத்தல் குறித்து பேசும் போது, எங்களிடம் வசதி அடிப்படையிலான தடுப்பூசி நிர்வகிக்கும் திறன் அல்லது துணை வசதி அடிப்படையிலான தடுப்பூசி நிர்வகிக்கும் அமைப்பு இருக்கலாம். ஏன் என்றால் இங்கு மக்கள் தொகை மிகப்பெரியது. எனவே கொரோனா வைரஸ் தடுப்பூசியின் கொள்முதல் முதல் அதன் வெப்பநிலை, பாதுகாத்தல், மற்ற இடங்களுக்கு எடுத்து செல்லுதல் என அனைத்தையும் கண்காணிக நிகழ்நேர அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப அமைப்பு தேவைப்படுகிறது.
புதன்கிழமை நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட மற்றொரு பிரச்சினை, தடுப்பூசி உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், தடுப்பூசி முன்னணியில் இந்தியாவை உலகள் முன்னிறுத்துவதாகும். "இந்தியா தனது சொந்த மக்களுக்கு மட்டுமல்ல, அக்கம் பக்கத்திலுள்ள நாடுகளுக்கும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கும் ஒரு தடுப்பூசியை வழங்க முடியும்" என்று திட்டமிடப்பட்டுள்ளது. "நாங்கள் அனைத்து முக்கியமான அமைப்புகளுடனும் இணைந்து , WHO, GAVI (தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளுக்கான சர்வதேச கூட்டணி) இதற்காக பணியாற்றுகின்றோம்” என்றும் கூறியுள்ளனர்.
தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தேவைப்படும் நிதி குறித்தும் பேசப்பட்டது. ஆனாலும் இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முதற்கட்ட பேச்சுவார்தைகள் தான். எந்தெந்த மருந்துகள் டபுள் டோசேஜ், எந்தெந்த மருந்துங்கள் சிங்கிள் டோசேஜ் என்பது குறித்தும் அதில் விவாதிக்கப்பட்டது. தடுப்பூசியின் பாதுகாப்பு தன்மை குறித்தும், வெளிப்படையாக அனைவருக்கும் கிடைகக் வழி வகை செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி கிடைக்கப் பெற்றதும் உருவாக்கப்பட வேண்டிய விழிப்புணர்வு குறித்தும் பேசப்பட்டது என அரசு தரப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டாக்டர் வி.கே. பால், (நிதி ஆயோக் உறுப்பினர்), ராஜேஷ் பூஷன் (சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் செயலாளர்) ஆகியோர் தலைமை ஏற்றனர். ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றும் துறை சார் வல்லுநர்கள், தொழில், நிதி, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர்களும் இதில் பங்கேற்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil