மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது அடிப்படை உரிமை ஆகாது – அலகாபாத் உயர்நீதிமன்றம்

எந்த ஒலி பெருக்கி சாதனத்தை பயன்படுத்தாமல் மனித குரலால் தொழுகையை ஓதிக் கொள்ள முடியும் என்றும், கோவிட்- 19 வழிகாட்டுதல்கள் மீறப்படாத வரை, மாவட்ட நிர்வாகம் எந்த கட்டுப்பாடுகளையும்  விதிக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

By: Updated: May 16, 2020, 04:17:23 PM

பாங்கு அல்லது அதான் (இசுலாமியர்களின் தொழுகைக்கான அழைப்பு) நடைமுறை இஸ்லாம் மதத்தின் அத்தியாவசியம் / ஒருங்கிணைப்புக் கோட்பாடுகளில் ஒரு பகுதியாக இருக்கலாம்” என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. இருப்பினும்,“ஒலிபெருக்கிகள் அல்லது பிற ஒலி பெருக்கி சாதனங்கள் மூலம் தொழுகைக்கு அழைப்பு விடுப்பது மதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதாகக் கூற முடியாது என்றும் தெரிவித்தது.  இதனால், ஒலிபெருக்கிகள் அல்லது பிற ஒலி பெருக்கி சாதனங்கள்  பயன்படுத்தும் நடைமுறை அரசியலமைப்பின் பிரிவு 25-ன் கீழ் கூறப்பட்டுள்ள மத சுதந்திரத்தின் பாதுகாப்பு அம்சங்களாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தனர்.

கோவிட் -19 வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு ஒலிபெருக்கிகள் மூலம் இசுலாமியர்கள் மூலம் தொழுகை வாசிப்பதற்கு காசிப்பூர், ஃபாரூகாபாத் , ஹத்ராஸ்  போன்ற மாவட்ட நிர்வாகங்கள் தடை உத்தரவு பிறப்பித்தது. காசிப்பூர் எம்.பி. அப்சல் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், மூத்த வழக்கறிஞர் எஸ் வாசிம் ஆகியோர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து மனு செய்தனர்.

“ஒலி பெருக்கி சாதனத்தை பயன்படுத்தாமல் மனித குரலால் தொழுகையை நடத்திக் கொள்ளலாம்  என்றும், கோவிட்- 19 வழிகாட்டுதல்கள் மீறப்படாத வரை, மாவட்ட நிர்வாகம் எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கக்கூடாது” என்று  நீதிபதிகள் எஸ். சஷி காந்த் குப்தா, அஜித் குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் தெரிவித்தது.

மேலும், இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை எந்த சூழ்நிலையிலும் ஒலி பெருக்க சாதனங்களை  பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது. அந்தந்த மசூதிகளிலிருந்து ஒலி பெருக்கி சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு மனுதாரர்கள் தங்கள் மனுவில் அனுமதி கோர தவறிவிட்டனர். எவ்வாறாயினும், இதுபோன்ற எந்தவொரு விண்ணப்பமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் தாக்கல் செய்யப்பட்டால், அது ஒலி மாசு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகளின் கீழ் தீர்க்கப்படலாம்” என்று தனது தீர்ப்பில் தெரவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Covid 19 guidelines allahabad high court azaan may be integral to islam not use of loudspeakers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X