/tamil-ie/media/media_files/uploads/2021/05/tamil-indian-express-25.jpg)
Covid 19 India Tamil News: ஒவ்வொரு வாரமும் உலக சுகாதார அமைப்பால் வெளியிடப்படும் எபிடெமியோலாஜிகல் அப்டேட்டில், கொரோனா தொற்று பரவலை அதிகப்படுத்தும் பி.1.617 வகை வைரஸ்கள் இந்தியாவில் முதன்முதலில் 2020 அக்டோபரில் பதிவாகியுள்ளன என்று நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மற்றும் இறப்புகளின் மீள் எழுச்சி B.1.617 மற்றும் பிற வகைகளின் (எ.கா., B.1.1.7) புழக்கத்தில் உள்ள சாத்தியமான பங்கு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது" என்று அப்டேட்டில் தெரிவித்துள்ளது.
மேலும் "உலக சுகாதார அமைப்பால் நடத்தப்பட்ட இந்தியாவின் நிலைமை குறித்த சமீபத்திய பேரிடர் மதிப்பீட்டில், இந்தியாவில் கொரோனா தொற்று பரிமாற்றத்தின் மீள் எழுச்சி மற்றும் முடுக்கம் பல சாத்தியமான காரணிகளைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தது.
இதில் SARS-CoV-2 வகை தொற்றுகளின் விகிதத்தில் அதிகரிப்புடன் கூடிய பரவுதல் உள்ளது. சமூக பரவலை அதிகரித்த மத மற்றும் அரசியல் வெகுஜன கூட்ட நிகழ்வுகள் மற்றும், பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை (PHSM) பயன்படுத்துவதும் குறைப்பதும். இந்தியாவில் அதிகரித்த பரவலுக்கான இந்த ஒவ்வொரு காரணிகளின் சரியான பங்களிப்புகள் நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.
SARS-CoV-2 வகைகளை அடையாளம் காண இந்தியாவில் சுமார் 0.1% நேர்மறை மாதிரிகள் வரிசைப்படுத்தப்பட்டு GISAID இல் பதிவேற்றப்பட்டுள்ளன என்றும் தொற்றுநோய் மற்றும் தொற்று வைரஸ் தரவுகளுக்கு விரைவான மற்றும் திறந்த அணுகலை செயல்படுத்துகிறது என்றும் அந்த அப்டேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.