Covid 19 indian Tamil News: இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் டெல்டா வகை மாறுபாட்டிற்கு (SARS-CoV-2) எதிர் வினையாற்றும் 'ஸ்பூட்னிக் வி' தடுப்பூசியின் புதிய பதிப்பை ரஷ்யாவின் கமலேயா ஆராய்ச்சி தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் விரைவில் வழங்க உள்ளது. தடுப்பூசியின் இந்த புதிய பதிப்பு “பூஸ்டர்” ஷாட் என அழைக்கப்பட உள்ளது. மேலும் இது மற்ற நேரடி தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படும் என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஸ்பூட்னிக் வி - யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "#SputnikV விரைவில் 'பூஸ்டர்' ஷாட்டை வழங்கும். இது இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக வேலை செய்ய சரிசெய்யப்பட்டு, பிற தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும்" என்று நேற்று வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
டெல்டா மாறுபாட்டிற்கு எதிரான இந்த பூஸ்டரின் செயல்திறன் குறித்த கூடுதல் தகவலை அதன் ட்விட்டர் பக்கத்திலோ அல்லது ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (RDIF) இணைய பக்கத்திலோ இன்னும் வெளியிடப்படவில்லை
கொரோனா வைரஸின் B.1.617.2 திரிபு என்றும் அழைக்கப்படும் டெல்டா மாறுபாடு, இந்தியா மற்றும் WHO ஆகியவற்றால் கவலைக்குரிய மாறுபாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“