கொரோனா காரணமாக நிதிநெருக்கடி : மத்திய அரசிடம் உதவி கேட்கும் மாநிலங்கள்

States centre GST fund : 5 ஆண்டுகள் காலஅளவிலான அந்த ஒப்பந்தம் 2022ம் ஆண்டில் நிறைவடைய உள்ள நிலையில், மத்திய அரசு, இந்த விவகாரத்தில் மாநில அரசுகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

By: August 27, 2020, 11:04:14 AM

Aanchal Magazine

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்குகளின் மூலம், பெரும்பாலான நிறுவனங்களின் செயல்பாடு அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையிலும், பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு நிதிஒதுக்காத நிலையில் உள்ளனர். இந்நிலையில், இந்த நிறுவனங்களுக்கு உதவும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் குழு கூட்டம் இன்று ( ஆகஸ்ட் 27ம் தேதி) நடைபெற உள்ளது.

ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியினால், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் திரிபுரா மாநிலங்களில் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கே சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கல்வித்துறை ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை எதிரொலியாக, மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிறுத்திவைத்துள்ள ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை உடனே வழங்கிடவும், நிதிப்பற்றாக்குறை அளவை எவ்வித நிபந்தனையுமின்றி அதிகரிக்கவும் பா.ஜ. ஆளும் மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்கள், இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்த உள்ளன.

கொரோனா காரணமாக, பெரும்பாலான மாநிலங்களின் நிதிநிலைமை கணிசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் கலால் வரி, பத்திரபதிவு உள்ளிட்ட துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு, ஜிஎஸ்டி வரிவிதிப்பில் தங்களுக்கு சாதகமாக நடந்துகொள்ள வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மாநிலங்கள் கடன் வாங்கும் தொகையின் அளவை அதிகரிப்பதனால் மட்டுமே, இந்த விவகாரத்திற்கு தீர்வு கண்டுவிட முடியாது, ஏனெனில், 8 மாநிலங்கள் மட்டுமே, இதற்கு தகுதி பெற்றுள்ளன.

ஜிஎஸ்டி வரி வரம்பில், மாநிலங்களின் 42 சதவித வரி வருவாய் சென்றுவிடுகிறது. மாநிலங்களின் மொத்த வருவாயில் இது 60 சதவீதம் ஆகும். எனவே, இந்த கொரோனா பேரிடரை கருத்தில்கொண்டு வரிவிதிப்பில் மாற்றம் மேற்கொள்ளவேண்டும் என்பதே, பல்வேறு மாநில நிதியமைச்சர்களின் கோரிக்கையாக உள்ளது.

கொரோனா பேரிடரில் சிக்கி மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்று உறுதியளித்திருந்த நிலையில், தற்போது போதிய அளவில் பணம் இல்லாதாதால், கொடுத்த வாக்கை மத்திய அரசு மீறி வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த மாநில நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, மாநிலங்கள் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில், இந்த நிலையிலிருந்து மீள, கடன் வாங்கும் அளவை அதிகரிக்க வேண்டும் அதற்கான நெறிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இல்லையேல், மாநிலங்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக கருதப்படும் என்று அவர் மேலும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்படும்போது, மாநிலங்களிடமிருந்து பெறப்படும் வரிகள், மீண்டும் அவர்களுக்கே திருப்பியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் காலஅளவிலான அந்த ஒப்பந்தம் 2022ம் ஆண்டில் நிறைவடைய உள்ள நிலையில், மத்திய அரசு, இந்த விவகாரத்தில் மாநில அரசுகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

மாநிலங்கள் தற்போது கடன் பெறுவதற்கான தகுதியில் இல்லை. இதேநிலை தொடரும்பட்சத்தில் அவைகள் மேலும் பொருளாதார இன்னலுக்கு ஆளாகும்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு, கடன் அளவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, அதற்கான செஸ் நிதி கட்டும் வரம்பை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். இழப்பீடு மற்றும் நிலுவைத்தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இது பெரிய நடவடிக்கை தான் என்றாலும், மத்திய அரசு மனதுவைத்தால் நடக்கக்கூடிய காரியம் தான் என்று பீகார் துணை முதல்வர் சுசில்குமார் மோடி கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி கூட்டத்தில், அவசர சட்டத்தை பிறப்பித்து, இழப்பீடுகளான செஸ் வரித்தொகை வரம்பை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் அதுதொடர்பான முறையான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்று கேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார். மாநிலங்கள் கடன் பெறும் அளவு 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, மாநில அரசுகள் கடன் பெறும் அளவை, gross state domestic product (GSDP) என்பதனடிப்படையில் 3 சதவீதம் என்ற அளவிற்கும் உயர்த்தப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, உத்தரபிரதேசம், ஆந்திர பிரதேசம், மத்தியபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமே, கூடுதலாக 2 சதவீதம் அளவிற்கு கடன் பெற தகுதி பெற்றுள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள ரூ.4.28 லட்சம் கோடி அளவில், ரூ.3.13 லட்சம் கோடி நிதி மட்டும் கடனாக பெறப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 18ம் தேதி நிலவரப்படி, அனைத்து மாநிலங்களையு் சேர்த்து ரூ.2.5 லட்சம் கோடி மட்டுமே கடனாக பெறப்பட்டுள்ளது. அதாவது மொத்த கடனில் 30 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ள. 70 சதவீத தொகை பயன்படுத்தப்படாமலேயே உள்ளதாக எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Squeezed by Covid, salaries on hold: states’ SOS to Centre

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Covid 19 indian economy states to centre on funds coronavirus impact on salaries states centre gst fund

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X