அடுத்த 15 நாட்களில் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு- ரயில்வே

Shramik Special trains: 1200 பயனர்களை ஏந்தி செல்லும் ஒவ்வொரு ஷ்ராமிக் சிறப்பு ரயில்களிலும், மாநிலங்கள் குறைந்தது 90 சதவீதத்தை நிரப்ப வேண்டும். 500 கி.மீ.க்கு அப்பால் செல்ல வேண்டிய இடங்களுக்கு ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்

By: Updated: May 3, 2020, 05:50:27 PM

Shramik Special trains:  மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, தொழிலாளர்கள், புனிதப் பயணம் சென்றவர்கள், சுற்றுலாவாசிகள், மாணவர்கள் மற்றும் இதர மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக கடந்த மே- 1ம் தேதி ஐந்து  “ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள்” மத்திய அரசு இயக்கியது. சிக்கித் தவிக்கும் மக்களுக்காக மேலும், 11  சிறப்பு ரயில்களுக்கான  அனுமதியை  ரயில்வே அமைச்சகம் நேற்று வழங்கியுள்ளது.

இதுபோன்ற சிக்கித் தவிக்கும் மக்களை தங்கள் இடங்களை அடைவதற்காக மேலும் இதுபோன்ற 500 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், மாநிலங்களின் வேண்டுகோளுக்கு உட்பட்டு அடுத்த 15 நாட்களுக்குள் இந்த சேவையை முடிக்க திட்ட மிட்டுள்ளதாகவும்  ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்காக, கூடுதாலாக  1,200  ரயில் பெட்டிகள் தயார் நிலையில் இருக்கின்றன,  தேவை ஏற்பட்டால் மேலும் சில ரயில் பெட்டிகளை பயன்படுத்த ரயில்வே தயாராக இருப்பதாக ரயில்வே அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவிகின்றன.

சிக்கித் தவிக்கும் மக்களை மாநிலத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையை பீகார் மாநிலம் முடிக்கிவிட்டது. மே- 2ம் தேதி, கேரளாவின் திரூர், எர்ணாகுளம் போன்ற ரயில் நிலையங்களில் இருந்து  பீகாருக்கு இயக்கப்பட்டன. ராஜஸ்தான் கோட்டா பகுதியில் சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்காக இரண்டு சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படுகிறது. மேலும், பெங்களூரிலிருந்து தனபூருக்கு மற்றொரு சிறப்பு ரயிலை இயக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

சனிக்கிழமையன்று, ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்கான ஒரு நிலையான இயக்க முறைமையை ரயில்வே துறை வெளியிட்டது. 1200 பயனர்களை ஏந்தி செல்லும் ஒவ்வொரு ஷ்ராமிக் சிறப்பு ரயில்களிலும், மாநிலங்கள் குறைந்தது 90 சதவீதத்தை நிரப்ப வேண்டும். 500 கி.மீ.க்கு அப்பால் செல்ல வேண்டிய இடங்களுக்கு ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ரயில் புறப்படும் இடத்தில்  அந்தந்த மாநிலங்களால், பயனர்களுக்கு ஒருவேளை உணவு வழங்கப்பட வேண்டும். ரயில் பயணத்தின் போது, தண்ணீரும், இணை உணவும் பயனர்களுக்கு வழங்கப்படும் என்று அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்குவதில் மாநிலங்களுக்கு இடையிலான  ஒருங்கிணைப்பு மிகவும் தேவை. சரியான திட்டமிடல் இல்லையென்றால் குழப்பங்கள் தரும் வேதனையை நாம் சந்திக்க நேரிடம் அதிகாரிகள் கருதுகின்றனர்.

சனிக்கிழமை முழுவதும் ரயில்வே பல சிக்கல்களைத் தீர்ப்பதில் மும்முரமாக இருந்தது.

அஜ்மீரில் இருந்து கொல்கத்தாவுக்கு யாத்ரீகர்களை வெளியேற்றுவதற்கான அனுமதியை மேற்கு வங்கம் மாநிலம் கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றதால்,ரயில்வே தனது திட்டங்களை கடைசி நேரத்தில் மாற்ற நிர்பந்திக்கப்பட்டது. சனிக்கிழமை பிற்பகுதியில் மாநிலம் எழுத்துப்பூர்வமாக  அனுமதியளித்த பின்பு தான் ரயில் புறப்பட்டது.

இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் குறித்து மத்திய அரசிடம் விருப்பம் தெரிவித்திருந்தாலும், அம்மாநில் அரசு  முறையாக ரயில்வே துறையை  நாடவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக நேற்று 28 சிறப்பு ரயில்களை சத்திஸ்கர் மாநிலம் கோரியது. இருப்பினும், ​​ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மேலும்மேலும் மூன்று சிறப்பு ரயில்கள் தொடர்பாக  ட்வீட் செய்துள்ளார்.

புலம்பெயர் தொளிலார்களுக்கான டிக்கெட் பணத்தை முன்கூட்டியே ரயில்வே துறைக்கு செலுத்திய  ஒரே மாநிலமும் ஜார்க்கண்ட்  என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. ரயில்வே சேவைகளை ஒட்டு மொத்தமாக ராஞ்சியோடு நிறுத்திக் கொள்ளமால், தன்பாத் போன்ற பிற நகரங்களுக்கும் விரிவாக்கம்  செய்யலாம் என்ற ரயில்வேயின் பரிந்துரைக்கு அரசு ஒப்புக்கொண்tடது.

ஒரு குறிப்பிட்ட மாநிலம், அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களை ரயில்  நிலையத்திற்கு நேராக அழைத்து வந்து, பயணிகளின் பட்டியலைத் தயாரிக்கத் தொடங்கியது. இது சமூக விலகல் நெறிமுறையை காற்றில் பறக்க விட்டதற்கு சமம் என்று ரயில்வே வட்டாரங்கள் முனுமுனுக்கின்றன.

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா  ரயில் நிலையங்களில்  உள்ளூர் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்கள் ஆதரவாளர்களுடன் கூடினர். இந்த விவகாரம் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் சென்றதையடுத்து, எந்தவொரு ரயில் நிலையத்திலும் அரசியல் பிரதிநிதிகள் தங்கள் ஆதரவாளர்களுடன் கூட்டம் போடக் கூடாது என்று உத்தரவிட்டார்.

இருப்பினும், ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கம் தொடர்பான செய்திகள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் கூட்டம் வருவதைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாகத் தான் இந்த ஏற்பாடு என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிகின்றன. “எந்த அவசரமும் இல்லை. சமூக விலகல் மற்றும் சுகாதார நெறிமுறையுடன் , இந்த பொது முடக்கநிலை காலம் முழுவதும் சிறப்பு  ரயில்கள் இயக்கப்படும், ”என்று ஒரு உயர் ரயில் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

அதனால்தான், சனிக்கிழமையன்று 11 ரயில்கள் திட்டமிடப்பட்டிருந்தாலும், போர்டிங்-க்கு முந்தைய நெறிமுறையை அவசரப்படுத்த முடியாததால், இவற்றில் சில மறுநாள் இயக்கப்படும் சூழல் உருவாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Covid 19 lockdown railways issued a standard operating procedure for shramik special trains

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X