Advertisment

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பெற 13 நாடுகள் தயார், உள்நாட்டு நிலவரம் என்ன?

கடந்த வியாழன்கிழமை இஸ்ரேலுக்கு குளோரோகுயின் மாத்திரைகளை வழங்க இந்தியா முடிவு செய்திருப்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நன்றி தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பெற 13 நாடுகள் தயார், உள்நாட்டு  நிலவரம் என்ன?

கோவிட்-19 பெருந்தொற்றுக்கான சிகிச்சை மருந்தாகவும், தடுப்பு மருந்தாகவும் கருதப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பெறும்; அமெரிக்கா, பிரேசில் உட்பட 13 நாடுகளின் முதல் பட்டியலை இந்தியா தயாரித்துள்ளது.

Advertisment

வெளியுறவு துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,"உலகளவில் மருந்தின் தேவை அதிகமாக இருப்பதால், ஏற்றுமதி தொடர்பான முடிவுகளில் சரியான திட்டமிடல் தேவைப்படுகிறது. முதலில் வந்தவர்களுக்கு முன்னிரிமை" என்ற அடிப்படையில் இந்த 13 நாடுகள் கொண்ட முதல் பட்டியல் தயார் செய்யப்பட்டது" என்று தெரிவித்தார்.

ஏற்றுமதி செய்யப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளில் 35 சதவீதமும், மருந்து தயாரிக்கப் பயன்பட உதவும் செயலூக்கமான மருந்து மூலப்பொருளில் 65 சதவீதமும்  அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

அமெரிக்கா தற்போது கொரோனா வைரஸ் பரவலின் மையமாக உருவெடுத்துள்ளது. இதுநாள் வரையில் அங்கு  4.63 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,000 க்கும் அதிகமான இறப்புகளை அந்த நாடு பதிவு செய்துள்ளது.

அமெரிக்காவைத் தவிர, பிரேசில், பஹ்ரைன், மொரிஷியஸ், டொமினிகன் குடியரசு, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் சார்க் நாடுகளான நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 13 நாடுகள் முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

முதல் சரக்குகளில், சுமார் 13.8 மில்லியன் மாத்திரைகளும், 13.5 மெட்ரிக் டன் ஏ.பி.ஐ-க்கள் அனுப்பப்படும் என்று வெளிவிவகார அமைச்சின் கூடுதல் செயலாளரும், உலகளாவிய கோவிட்-19 நடவடிக்கைகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஒருங்கிணைப்பாளருமான தம்மு ரவி தெரிவித்தார்.

"முதல் பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு,பொருட்கள் வெளியேறத் தொடங்கியுள்ளன. இப்போது, நாங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது பட்டியல் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். எவ்வாராயினும் உள்நாட்டு தேவை அரசாங்கத்திற்கு முன்னுரிமையாக இருக்கும் என்பதை, இந்த நேரத்தில் மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறேன், ”என்று ரவி கூறினார்.

முன்னதாக, கடந்த வியாழன்கிழமை இஸ்ரேலுக்கு குளோரோகுயின் மாத்திரைகளை வழங்க இந்தியா முடிவு செய்திருப்பது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்திருந்தார். இருப்பினும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தயாரிப்பைப் பெறும் முதல் பட்டியலில் இஸ்ரேல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆகியோர் “தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டதற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்திருந்தனர் .

"அமெரிக்காவில் வைரஸ் பரவல் மிகவும் விரிவாக உள்ளது. அவர்கள் ஒன்பது மெட்ரிக் டன் ஏ.பி.ஐ (மூலப் பொருட்கள் ) மற்றும் சுமார் 4.8 மில்லியன் மாத்திரைகளை நாடினர். இந்திய  இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. சரக்கைப் பெற்றுக்கொள்வது அவர்கள் கையில் தான் உள்ளது,” என்று ரவி தெரிவித்தார் .

"மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மருந்துகள் துறை,மற்றும் கோவிட்- 19 தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுக்களில் உள்ள பலருடன் கலந்து ஆலோசித்த பின்பு," பிற நாடுகளுக்கு ஏற்றுமதி தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டதாக, முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறப்பட்டது  .

முன்னுரிமை கொடுக்கும் விதமாக,"ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் சர்வ்" அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு 13 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது .

சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், இந்தியா தனது தேவைக்கும் அதிகமான கிட்டதட்ட மூன்று மடங்கு மாத்திரிகளை கொண்டுள்ளது. அதாவது, 3.28 கோடி எண்ணிக்கை அளவிலான மாத்திரைகள் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, நாட்டின் முதல் மற்றும் பழமையான மருந்து நிறுவனம் ஒன்றிற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தயாரிக்க மேற்குவங்க அரசு அனுமதி வழங்கியது.

முதல் பட்டியலில் சார்க் நாடுகள் இருப்பதை பற்றி ரவி கூறுகையில், " இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சில நாடுகள் மிகவும் பலவீனமானை, மேலும் மருந்துக்கான அதிக தேவைகள் உடையதாகவும் உள்ளது. எனவே, அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு ஏற்றுமதி தொடர்பான முடிவெடுக்கப்பட்டது" என்றார்.

ஏற்றுமதி தடையை இந்தியா எளிதாக்கவில்லை என்றால் பதிலடி கொடுப்பதை ஏன் அமெரிக்கா? யோசிக்க கூடாது என்று அமேரிக்கா அதிபர் டொனல்ட் டிரம்ப் அச்சுறுத்திய மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்தியா தனது முதல் பட்டியலை தயாரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment