ஜிஎஸ்டி நிதி பற்றாக்குறை கடவுளின் செயல் என்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சிதம்பரம் கண்டனம் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலங்களில் நிர்வாக தவறுக்கு என்ன காரணம் என்பதை கடவுளின் தூதராக விளங்கும் நிதி அமைச்சர் விவரிப்பாரா? என்ற கேள்வியையும் எழுப்பினார்.
கடந்த, வியாழக்கிழமை 41வது ஜி.எஸ்.டி. குழுமத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நிர்மலா சீதாராமன், " கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக இந்திய பொருளாதாரம் கடுமையான அடியை சந்தித்து. இது ஒரு கடவுளின் செயல். நடப்பு நிதியாண்டில் அதன் அழுத்தத்தை நாம் உணர்வோம்" என்று தெரிவித்தார்.
If the pandemic is an ‘Act of God’, how do we describe the mismanagement of the economy during 2017-18 2018-19 and 2019-20 BEFORE the pandemic struck India? Will the FM as the Messenger of God please answer?
— P. Chidambaram (@PChidambaram_IN) August 29, 2020
இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த சிதம்பரம், தனது ட்விட்டரில் “ பெருந்தொற்று ஒரு‘ கடவுளின் செயல்’என்றால், 2017-18, 2018-19, 2019-20 போன்ற பெருந்தொற்றுக்கு முந்தைய நிதி ஆண்டுகளில் தவறான பொருளாதார மேலாண்மையை எவ்வாறு நாம் விவரிப்பது" என்று பதிவிட்டார். "இந்த கேள்விக்கு, கடவுளின் தூதரான நிதி அமைச்சார் தயவுசெய்து பதிலளிப்பாரா?" என்றும் கேள்வி எழுப்பினார்.
The central government is absolving itself of any financial responsibility. This is a gross betrayal as well as a direct violation of the law
— P. Chidambaram (@PChidambaram_IN) August 29, 2020
ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இழப்பை ஈடுசெய்ய, மாநில அரசுகள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் சிதம்பரம் எதிர்த்தார்.
முதல் வாய்ப்பின் கீழ், 97,000 கோடி ரூபாயை, நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் மாநிலங்களுக்கு வழங்க சிறப்பு ஏற்பாடுகள் உருவாக்கப்படுகிறது. 5 வருடங்கள் முடிவடைந்த பின்னர், செஸ் நிதி இழப்பீட்டில் இருந்து மாநிலங்கள் அந்த தொகையைத் திருப்பி செலுத்தாலம் என்று தெரிவிக்கப்பட்டது.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
இரண்டாவது வாய்ப்பின் கீழ், மொத்த ஜிஎஸ்டி இழப்பீட்டையும் (ரூ.2.35 லட்சம் கோடி) ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து மாநிலங்கள் கடனாக பெற்றுக் கொள்ளலாம்.
சிதம்பரம் தனது ட்விட்டரில், " இந்த அறிவிப்பின் மூலம், ஒட்டுமொத்த பொருளாதாரப் பளுவும் மாநிலங்கள் மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு, அனைத்து வகையான நிதிப் பொறுப்புகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது. இது கூட்டாச்சித் தத்துவத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்,சட்டத்தை நேரடியாக மீறும் செயல்" என்று குற்றம் சாட்டினார்.
கோவிட்-19 ஊரடங்கு காரணமாக, மாநிலங்களின் வரி வருவாய் குறைந்துள்ள நிலையில், அதனை ஈடுசெய்ய வேண்டுமென பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில், நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.