கோவாவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு சரி செய்த பின்பும் 13 பேர் பலி

13 more die at Goa hospital after oxygen issue fixed Tamil News: கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (ஜி.எம்.சி.எச்) நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் மேலும் 13 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Covid 19 Second wave Tamil News: 13 more die at Goa hospital after oxygen issue fixed

Covid 19 Second wave Tamil News: கொரோனா தொற்றின் 2வது அலை உருவெடுத்துள்ள நிலையில், அதன் தாக்கம் மிகக் கடுமையான ஒன்றாக மாறியுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தொற்று பரவல் மற்றும் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதோடு தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மருந்து மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டோர் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் முக்கிய சுற்றலா தளங்களில் ஒன்றான கோவா, அதன் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்த நாட்களில் இறப்புகளைக் கண்டுள்ளது. அங்குள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (ஜி.எம்.சி.எச்) நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் மேலும் 13 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஆக்ஸிஜன் போதுமானதாக இல்லை என்று எதிர்க்கட்சியான கோவா ஃபார்வர்ட் கட்சி குற்றம் சாட்டிய போதிலும், இறப்புகளுக்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இது குறித்து கோவா ஃபார்வர்ட் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் கூறுகையில், “தொடர்ந்து நான்கு நாட்களில் எழுபத்தைந்து பேர் இறந்துள்ளனர். மே 11 இரவு 21 பேர் இறந்தனர். மே 12 இரவு 15 பேர் இறந்தனர். நேற்று இரவு 13 பேர் இறந்தனர். இதற்கு காரணம் நேற்று அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை, மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளை ஏற்ற இறக்கங்களைக் கண்டது. எனவே இந்த ​​இறப்புகள் மீண்டும் நிகழ்ந்துள்ளது” என்றார்.

ஜி.எம்.சி.எச். டாக்டர் மகேஷ் காம்ப்லி கூறுகையில், “வெள்ளிக்கிழமை அதிகாலை 13 பேர் மருத்துவமனையில் இறந்தனர். ஆக்ஸிஜன் சப்ளை காரணமாக இறப்புகள் நிகழ்ந்தனவா என்பது இன்னும் தெரியவில்லை. அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரையிலும், காலை 6 மணி முதல் காலை 8 மணி வரையிலும் நான்கு பேர் உயிரிழந்தனர்” என்று கூறினார்

வெள்ளிக்கிழமை மாலை கோவாவில் உள்ள பம்பாய் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலை அறிக்கையில், சுகாதார செயலாளர் ரவி தவான், மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு செயலாளர் டாக்டர் தாரிக் தாமஸ் வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 5:45 மணி வரை மருத்துவமனையில் தனிப்பட்ட முறையில் ஆஜரானதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பன்மடங்கு (பெரிய சிலிண்டர்களின் குழு) தளத்தில் நிலைமையைக் கண்காணிக்கவும். “இந்த காலகட்டத்தில் அழுத்தம் குறைவது குறித்து எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை,” என்று அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

கோவாவில் மிகப்பெரிய கோவிட் வசதியை கொண்டுள்ள ஜி.எம்.சி.எச்-யில் இதுவரை 61 நபர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதில் 39 நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் தெற்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 2,455 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு செயலில் உள்ள தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 32,387 ஆக உள்ளது. தொற்று உறுதியாகிவரும் வரும் நபர்களின் எண்ணிக்கை மேலும் 36% தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Covid 19 second wave tamil news 13 more die at goa hospital after oxygen issue fixed

Next Story
2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு நூதன தண்டனை : சாதி பஞ்சாயத்தார் மீது வழக்கு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com