Advertisment

கொரோனா அறிகுறி பயத்தில் எம்.டெக் மாணவர் தற்கொலை: இந்திய உயர் கல்வி நிறுவன துயரம்

இதற்கிடையே, கொரோன மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இறந்தவரிடம் இருந்து ஸ்வாப் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை  மேலும் தெரிவித்தனர்.

author-image
WebDesk
New Update
கொரோனா அறிகுறி பயத்தில் எம்.டெக் மாணவர் தற்கொலை: இந்திய உயர் கல்வி நிறுவன துயரம்

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எஸ்.சி) முதுகலை மாணவர், தனது அறையில் இறந்து கிடந்தார் என்று  காவல்துறை தெரிவித்தது. மேலும்,  இந்த சம்பவம் ஒரு  தற்கொலை எனவும் காவல்துறை சந்தேகிக்கிறது.

Advertisment

கடந்த சில நாட்களாக கோவிட் -19 தொடர்பான அறிகுறிகளைக் கொண்டிருந்ததால், தனது வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக தனது பகுதி நண்பர்களுக்கு அவர் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 24 வயது நிரம்பிய அந்த எம்டெக் மாணவர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், பெயர் சந்தீப் குமார் மார்க்கண்டே எனவும் அடையாளம் காணப்பட்டது.

 

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும்? வேலூர் சி.எம்.சி மருத்துவ நிபுணருடன் உரையாடல்

 

 

சந்தீப் குமார் குறுஞ்செய்தியை படித்து அதிர்ச்சியடைந்த அவரின் நண்பர் (சத்தீஸ்கர் மாநிலத்தவர்) ஐஐஎஸ்சி கல்வி நிறுவனத்தை உடனடியாக தொடர்பு கொண்டுள்ளார்.  நிறுவனம் உடனடியாக இந்த தகவலை காவல்துறையிடம் தெரிவித்தது. இருப்பினும்,  மீட்பு நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்க வில்லை என்று சதாஷிவநகர் காவல் நிலைய அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

 

கொரோனா நோய்த் தொற்று குறித்த அறிகுறிகளை, உயிரிழந்த மாணவர் தங்களிடம் தெரிவித்தாரா என்பதை ஐ.ஐ.எஸ்.சி கல்வி நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.  இதற்கிடையே, கொரோன மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இறந்தவரிடம் இருந்து ஸ்வாப் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை  மேலும் தெரிவித்தனர்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஐ.ஐ.எஸ்.சி  கல்வி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஐ.ஐ.எஸ்.சி கல்வி வளாகத்திற்குள் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து  கொண்டார் என்ற தகவலறிந்து  மிகவும் வருத்தப்படுகிறோம். தரவு அறிவியல் மற்றும் ப்ரோக்ராமிங்  துறையில் எம்டெக் பட்டம் பயின்று வந்த மாணவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், ” என்று தெரிவித்தது.

அடல் தரவரிசைப் பட்டியல்: சென்னை ஐ.ஐ.டி, அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் சாதனை

ஐ.ஐ.எஸ்.சி கல்வி நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில்," இந்த பெருந்தொற்று  காலத்தில்  மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் மனநலம் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. " இந்த நெருக்கடி காலகட்டத்தில் மன நலத்தைப் பேணுவதற்காகத் தொலைபேசி வழியே ஆற்றுப்படுத்தல் சேவைகளை ஐ.ஐ.எஸ்.சி  வலுப்படுத்தியுள்ளது. 24 x 7 அவசர அழைப்பு சேவை, 24 x 7 ஆன்லைன் ஆலோசனை சேவை, மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்களுடன் ஒன்-டு-ஒன்  ஆலோசனை  போன்ற சேவைகளை செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  ”என்று தெரிவிக்கப்பட்டது.

லாக்-டவுன் காலத்தில் ஆய்வகக் கட்டணம் எதற்கு? சர்ச்சையில் அண்ணா பல்கலைக்கழகம்

சதாஷிவநகர் காவல் நிலையத்தில், இயற்கைக்கு மாறான மரணம் என (174-பிரிவு) வழக்குப்பதிவு செய்யப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment