/tamil-ie/media/media_files/uploads/2020/06/New-Project-2020-06-03T111525.981.jpg)
கொரோனா வைரஸ் மாதிரிகளில் 7 சதவீதம் மட்டுமே அதிக அளவு வைரஸ் உள்ளது. இந்த மக்கள் சராசரியாக 6.25 மற்ற நபர்களுக்கு தொற்றுநோயை பரப்புவார்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் (84%) குறைந்த அளவு தொற்றுநோயைக் கொண்டுள்ளனர். இது சராசரியாக 0.8 நபர்களுக்கு மட்டுமே பரவுகிறது. மேலும், 9 சதவீதம் பேருக்கு மிதமான அளவு வைரஸ் உள்ளது தெரியவந்துள்ளது.
வைரஸ் சுமை அல்லது வைரஸ் அளவு என்பது ஒரு உயிரினத்தின் உடலில் உள்ள வைரஸின் அளவைக் குறிக்கிறது. மேலும், ஒரு வைரஸ் எவ்வளவு விரைவாக பிரதிபலிக்கிறது என்பதும் ஆகும்.
கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் மாநிலத்தில் சேகரிக்கப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட மாதிரிகள் பற்றிய ஆய்வின் அடிப்படையில் அகமதாபாத்தில் உள்ள ஐ.சி.எம்.ஆரின் தேசிய தொழில்சார் சுகாதார நிறுவனம் (என்.ஐ.ஓ.எச்) புதிய முடிவுகளை கண்டுபிடித்துள்ளது. அதன் முடிவுகள் இந்த வாரம் ஐ.சி.எம்.ஆரின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி ஆய்விதழுக்கு (ஐ.ஜே.எம்.ஆர்) சமர்ப்பிக்கப்படும். இந்த ஆய்வு கோவிட் பரிசோதனை அறிக்கைகளில் வைரஸ் அளவு பற்றிய புள்ளிவிவரங்களை சேர்க்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்ட பலருக்கு அறிகுறிகள் இல்லை என்பதால் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.
அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “குஜராத்தில் நாம் பார்க்கும் வைரஸ் சுமைகளில் வைரஸ் அளவை சோதித்து, வைரஸ் தொற்று ‘சூப்பர் பரப்புபவர்களைக்’ கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். வைரஸ் அளவு என்பது தொற்று பரவுவதை மிகவும் வலுவாக தீர்மானிக்கும் காரணி என்பதை நாங்கள் கவனித்தோம். மிகக் குறைவானவர்கள் மட்டுமே அதிக அளவில் தொற்றுநோய்களைப் பரப்புகிறார்கள். பெரும்பாலான மக்கள் மிகக் குறைவான அளவே தொற்றுநோய்களைப் பரப்புகிறார்கள் என்பது எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது” என்று கூறினார்.
வைரஸ் அளவைக் காட்டுவதற்கு வைரஸ் சிடி மதிப்பு அல்லது சுழற்சி வாயில் இருக்கிறது.
கோவிட் ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனைகள் நியூக்ளிக் அமிலங்களைக் கண்டறிய ஃப்ளோரசன்ட் சிக்னல்களைப் பயன்படுத்துகின்றன.
ct மதிப்பு என்பது இயந்திரத்தின் அடிப்படை அளவைக் கடக்க ஃப்ளோரசன்ட் சிக்னலுக்கு இயந்திரத்தில் தேவையான சுழற்சிகளின் எண்ணிக்கை ஆகும். குறைந்த மதிப்பு, அதிக வைரஸ் சுமை மற்றும் நேர்மறை என்று பொருள்.
“ஆர்டி-பி.சி.ஆர் முடிவுகள் இப்போது நேர்மறை மற்றும் எதிர்மறை முடிவுகளைத் தருகின்றன. ஆனால், நாங்கள் சி.டி (சுழற்சி வாயில்) மதிப்பு குறித்து புகார் அளிக்க வேண்டும். அந்த மதிப்பைக் கொண்டு, அதிக, மிதமான அல்லது குறைந்த வைரஸ் அளவை நாம் அடையாளம் காணலாம். இது எப்படியும் ஆர்டி- பிசிஆர் பரிசோதனையில் தானாகவே வழங்கப்படுகிறது. ஆனால், நாம் நம்முடிடைய சோதனைக் கொள்கையை மாற்ற வேண்டும். எனவே இந்த மதிப்பு சோதனை ஆய்வகங்களால் சேகரிக்கப்படுகிறது.” அந்த நிருவனத்தின் அதிகாரி மேலும் கூறினார்.
கோவிட் பரிசோதனைக்கு ஐ.சி.எம்.ஆர் 23 முதல் 40 வரை சி.டி மதிப்புகளைக் காண்கிறது என்று ஒரு அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். அது 35 க்கு கீழே இருந்தால் பாஸிட்டிவ் முடிவு 35க்கு மேல் இருந்தால் நெகட்டிவ், 35 இருந்தால் மீண்டும் பரிசோதனை தேவைப்படும்.
பரிசோதனைக்கு மாதிரிகள் எடுப்பதில் உள்ள ஒழுங்கற்ற முறை வைரஸ் அளவு முடிவுகளை குழப்பக்கூடும் என்று சில நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும், தரப்படுத்தப்பட்ட மாதிரி எடுக்கும் நடைமுறையானது தொற்றுநோய்க்கான வெளிப்படும் அளவு பரவல் குறித்து தெரிவிக்கும். இது வைரஸ் அளவை நோய் தீவிரம் மற்றும் தொற்றுநோயுடன் வரைபடமாக்குகிறது.
வைரஸின் அளவு மற்றும் வயது, அடிப்படை நிலைமைகள் அல்லது நோயின் தீவிரத்தன்மை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளைக் காண தேசிய தொழில்சார் சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர்கள் மருத்துவத் தரவுகளை ஒருங்கிணைக்கவில்லை. இருப்பினும், அதிக நோய் எதிர்ப்பு சக்திகொண்டவர்கள் மற்றும் வைரஸை எதிர்க்கும் நபர்கள் அதிக வைரஸ் அளவைக் கொண்டிருக்கலாம் என்று அந்த அதிகாரி கூறினார்.
இந்தியாவுக்கு வெளியே ஆராய்ச்சி போக்குகள் வைரஸ் அளவு மற்றும் நோயின் தீவிரத்தன்மை ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பைக் காட்டுகின்றன என்று அந்த அதிகாரி கூறினார். இந்த ஆரம்ப ஆராய்ச்சியில் ஒரு எடுத்துக்காட்டு சீனாவிலிருந்து மார்ச் மாதம் வந்த லான்செட் ஆய்வில், இது கடுமையான நோயாளிகளுக்கு வைரஸின் அளவு அதிகமாக இருப்பதை கண்டறிந்தது. அவை வைரஸின் லேசான வடிவங்களை விட அறுபது மடங்கு அதிகம்.
மேலும், அந்த நிறுவன அதிகாரி கூறுகையில், “உதாரணமாக, மருத்துவர்கள் ஏன் இத்தகைய விகிதங்களில் தொற்றுநோயைப் பார்க்கிறார்கள்? வைரஸ் அதிக அளவு கொண்ட நோயாளிகளுக்கு அவை அதிகமாக வெளிப்படும்.” என்று கூறினார்.
இந்த ஆராய்ச்சி இன்னும் பரிசீலிக்கப்படுகிறது. மார்ச் மாதத்தில் லோம்பார்டியில் இருந்து ஒரு கட்டுரை மற்றும் புதிய இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் கட்டுரை ஆகியவை அறிகுறி மற்றும் அறிகுறியற்ற நோயாளிகளுக்கு இடையில் வைரஸ் அளவுகளில் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை என்று தெரிவித்துள்ளன. இது வைரஸ் தொற்று அறிகுறி இல்லாத அறிகுறி உள்ள நபர்களிடையே ஒரே மாதிரியான பரவல் இருப்பதைக் குறிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.