Advertisment

தாய்-சேய் இடையே கோவிட்- 19 தொற்று : ஐ.சி.எம்.ஆர் வழிமுறைகள் சொல்வது என்ன?

இந்த கோவிட்- 19 வைரஸ் நமக்கு மிகவும் புதியது. அதன் தன்மைகளை நாம் இன்னும் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றோம். எனினும், தாய்- செய்  பரவலுக்காண  சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தாய்-சேய் இடையே கோவிட்- 19 தொற்று : ஐ.சி.எம்.ஆர் வழிமுறைகள் சொல்வது என்ன?

கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு கர்ப்பிணி, தனது குழந்தைக்கும் அந்த தொற்றை அனுப்புவது சாத்தியம் என இந்திய மருத்துவ ஆரய்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற ஒரு தருணத்தில் தாயையும், சேயையும் பராமரிப்பதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் குறிப்பாக குறிப்பாக, பிரசவ காலங்களில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Advertisment

கோவிட்-19 பெருந்தோற்று காலத்தில் கர்ப்பிணிப் பெண்களை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதலை ஐ.சி.எம்.ஆர் கடந்த  திங்களன்று வெளியிட்டது. “பிரசவத்திற்கு முன்பும், (அ) பிரசவத்தின் போதும், கோவிட்- 19 தொற்றுக் கொண்ட   (Vertical Transmission) தாயிடமிருந்து, குழந்தைக்கு தொற்று பரவுவதற்கான சான்றுகள் தற்போது தெரியவருகிறது.  இருப்பினும், பாதிப்பின் விகிதங்கள், இன்னும் முழுமையாக தீர்மானிக்கப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.

கோவிட்- 19 நோய் கொண்ட கர்ப்பிணிப் பெண் தனது குழந்தைக்கு பரவலை அனுப்ப முடியுமா? என்ற கேள்விக்கு  நமது அறிவியல் பார்வை பதில் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், இது தொடர்பான ஆய்வுகள் குறைந்த எண்ணிக்கையில் அடிப்படையில் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், கோவிட்- 19 பாதிக்கப்பட்ட ஒரு தாய்  முழுமையான ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்த நிகழ்வுகளும் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

கோவிட் -19 க்கான மருத்துவ அவசரநிலை மேலாண்மை திட்டத்தின் அதிகாரம் பெற்ற குழுவின் தலைவரான என்.ஐ.டி.ஐ. ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத் பால் கூறுகையில்,“மகப்பேறு காலம் என்பது வாழ்க்கையில் மிகவும் சிறப்பான காலம். எனினும், கடுமையான தன்மைகளை கொண்ட தொற்று, சில குறிப்பிடத்தக்க பாதக விளைவுகளைக் ஏற்படுத்தும். எனவே, தாய் மற்றும் குழந்தையை உகந்த முறையில் கவனிக்க நாம் எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்த கோவிட்- 19 வைரஸ் நமக்கு மிகவும் புதியது. அதன் தன்மைகளை நாம் இன்னும் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றோம். எனினும், தாய்- செய்  பரவலுக்காண  சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. நாங்கள் இன்னும் இந்த சாத்தியக் கூறுகளின் தன்மையை மதிப்பீட்டு வருகிறோம்.  பிரசவத்தின்போது, ​​தாயின் உடல் திரவங்களுடன் தொடர்பு கொள்ளும், குழந்தைக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக முக்கியம்” என்றும் தெரிவித்தார்.

பிப்ரவரி 22ம் தேதியன்று  வுஹான் மாகாணத்தில் உள்ள ரென்மின் மருத்துவமனையில் பிறந்த குழந்தையிடம் செய்யப்பட்ட பரிசோதனையில், கோவிட்- 19 தொற்றும், அதற்கு எதிரான ஆன்டிபாடிகள் ( நோய் எதிர்ப்பு சக்தி) இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆண்டிபாடிகள் இருத்தலின் மூலம், மகப்பேறு காலங்களில் தொற்று நிகழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகள் உறுதியாகின. இந்த ஆராய்ச்சிக் கட்டுரை, மார்ச் 26ம் தேதியன்று, அமெரிக்க மருத்துவ சங்கத்தின் ஜர்னலில்  வெளியிடப்பட்டது.  எவ்வாறாயினும், அதற்கு முன்னதாக, ஒன்பது கர்ப்பிணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,  தாய்-குழந்தை பரவுவதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

"உயர்த்தப்பட்ட ஐஜிஎம் (IgM) ஆன்டிபாடி அளவை வைத்து, பிறந்த குழந்தை தாயின் கருப்பையில் இருக்கும் போதே தொற்றல்  பாதிக்கப்பட்டதை கண்டறிந்தனர். ஏனெனில்,ஐஜிஎம் ஆன்டிபாடிகள் நஞ்சுக்கொடி வழியாக கருவுக்கு மாற்றப்படுவதில்லை. மேலும், கல்லீரல் காயம் மற்றும் வீக்கத்தைக் காண்பிக்கும் ஆய்வக முடிவுகளும், தாய்- சேய் பரவலுக்கான சாத்தியத்தை மறைமுகமாக ஆதரிக்கின்றன, ”என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் லண்டனில், கோவிட் தொற்று கொண்ட கர்ப்பிணிக்கு பிறந்த பிஞ்சு குழந்தைக்கும் கோவிட்- 19 தொற்று கண்டறியப்பட்டது. இருப்பினும், கருப்பையில் தான் தொற்று நடந்தது என்பதை மதிப்பீடு செய்ய முடியாது என்று  என்ஃபீல்டில் உள்ள வடக்கு  மிடில்செக்ஸ் மருத்துவமனையைச் சார்ந்த மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

பிரிட்டன் தேசிய சுகாதார சேவை இது தொடர்பாக தற்போது  வெளியிட்ட அறிக்கையில்,“ இது புதிய வைரஸ் என்பதால்,  அதை பற்றிய புரிதலை தற்போது தான் உள்வாங்க முடிகிறது. கருச்சிதைவு அதிகரிக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. தாய்- சேய் பரவலின்  சான்றுகள் தற்போது கிடைத்து வருகின்றன.  இருப்பினும் ஒரே ஒரு வழக்கு மட்டுமே இதுவரை பதிவாகியுள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் பிறந்த குழந்தையின்  நிலைமையை தொடர்ந்து மதிப்பீடு செய்து கண்காணிப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

அமெரிக்காவின் அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறுகையில், “கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கு கொரோனா வைரஸ் பரவுவது சாத்தியமில்லை, ஆனால் குழந்தை பிறந்த பிறகு, ஒருவருக்கு ஒருவர் பரவுதல் மூலமாக  எளிதில் பாதிக்கப்படும். குறைந்த அளவிலான பிறந்த குழந்தைகளுக்கு மட்டும் கோவிட்- 19 தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த தொற்று எப்போது எற்பட்டது என்பது தெரியவில்லை. அம்னோடிக் திரவம், தாய்ப்பால் போன்ற பிற தாய்வழி மாதிரிகளில் இந்த வைரஸ் கண்டறியப்படவில்லை,” என்று தெரிவித்துள்ளது.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment