WHO பிரதிநிதி டாக்டர் ஹென்க் பெக்கெடம் – ‘இந்தியா கொரோனா சோதனையை முடுக்கிவிட வேண்டும்’

நாவல் கொரோனா வைரஸுக்கு எதிரான உலக சுகாதார அமைப்பின் ‘சோதனை சோதனை சோதனை’ என்ற மருத்துவ முறையை இந்தியா இன்னும் ஏற்கவில்லை. இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் ஹென்க் பெக்கெடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை விரிவாகவும் வலுவாகவும் இருப்பதாகக்…

By: Updated: March 19, 2020, 03:45:33 PM

நாவல் கொரோனா வைரஸுக்கு எதிரான உலக சுகாதார அமைப்பின் ‘சோதனை சோதனை சோதனை’ என்ற மருத்துவ முறையை இந்தியா இன்னும் ஏற்கவில்லை. இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் ஹென்க் பெக்கெடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை விரிவாகவும் வலுவாகவும் இருப்பதாகக் கூறினார்.

டாக்டர் ஹென்க் பெக்கெடம் உடனான நேர்காணல்:

இந்தியா இதுவரை கோரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் எவ்வாறு செயல்பட்டுள்ளது?

இந்தியாவின் நடவடிக்கை விரிவாகவும் வலிமையாகவும் உள்ளது. தொடக்கத்திலிருந்தே, அரசாங்கம் விஷயங்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டது. இது பிரதமர் உள்பட உயர்மட்ட அரசியல் உறுதிப்பாடுகளில் பிரதிபலிக்கிறது.

கண்காணிப்பு, ஆய்வகத் திறன், தொடர்பு தடமறிதல், தனிமைப்படுத்தல் ஆகியவற்றை வலுப்படுத்துவது உள்பட கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மத்திய சுகாதார அமைச்சரும் மத்திய சுகாதார செயலாளரும் தவறாமல் மாநில அரசுகளை அழைக்கிறார்கள்… அவர்கள் மாநிலங்களை மிகவும் திறம்பட அணிதிரட்டியுள்ளனர். இதில் பல்வேறு , துறைகளும் அமைச்சகங்களும் ஈடுபட்ட்டுள்ளன. நாங்கள் இதை ஒரு முழு அரசாங்க அணுகுமுறை என்று அழைக்கிறோம். இந்த கட்டத்தில் ஒருவேளை ஒரு பெரிய பரவல் ஏற்பட்டால் அவர்கள் நன்கு இயங்குகிறார்கள்.

இந்தியாவின் சோதனைத் தளம் மிகக் குறைவு என்ற கவலைகள் உள்ளன. மேலும், நோயாளிகளைக் காணத் தவறவிட்டிருக்கலாம். உலக சுகாதார அமைப்பின், தென்கிழக்கு ஆசியா பிராந்திய அலுவலகத்தின் பிராந்திய இயக்குனர் இது பற்றி எவ்வளவோ கூறியுள்ளார். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன?

டாக்டர் பெக்கெடம் நேர்காணலை ஆங்கிலத்தில் படிப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்

இந்தியா சோதனையை முடுக்கிவிட வேண்டும். இந்தியா அந்த பாதையில் இருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து, கண்காணிப்பு அமைப்பிலிருந்து கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான பரிசோதனையை இந்தியா உள்ளடக்கியுள்ளது. இவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயண தொடர்பு இல்லாதவர்கள். இதில் சில முடிவுகள் ஏற்கனவே எதிர்மறையாக வெளிவந்துள்ளன. மற்ற முடிவுகள் வார இறுதிக்குள் வெளிவரும்.

இரண்டு விஷயங்கள்: ஒன்று திறனை அதிகரிக்கிறது. மற்றொன்று பரப்பை அதிகரிக்கிறது.

திறன் பிரச்சினையில், அரசாங்கம் ஏற்கனவே திறனை கணிசமாக விரிவுபடுத்தியிருக்கிறது. வணிக ரீதியில் பல சோதனைகளும் உள்ளன. ஐசிஎம்ஆர் இப்போது மதிப்பீடு செய்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அவை சரிபார்க்கப்பட்டவுடன், சோதனையில் தனியார் துறையின் பங்கு அதிகரித்து இருக்கும்.

மக்களை வீடுகளிலேயே இருக்கச் செய்தல் மற்றும் சோதனை இதில் நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழி எது?

வைரஸ் பரவலை சமாளிப்பதற்கான மிகச் சிறந்த வழி, விரைவாக செயல்படுவதுதான். ஒரு தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கையின் ஆரம்ப கட்டத்தில் இந்தியா இருக்கிறது என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம். உலகத்திடம் இருந்து கற்றுக்கொள்வதிலும் நன்மை இருக்கிறது. நோய் பரவல் தடுப்பு உத்தியாக அரசாங்கத்தின் சமூக விலகலுக்கான அழைப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

கை சுத்தமாக வைத்திருத்தல், இருமமும்போதும் தும்மும்போதும் வாயை மூடிக்கொள்ளுதல் ஆகிய விழிப்புணர்வு நடவடிக்கையுடன் இந்த யுத்தியை திறம்பட செயல்படுத்துவது வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும். இந்த நடவடிக்கைகளின் விளைவாக வைரஸ் பரவலைக் குறைக்கும். சீனாவில், ஹுபெய்க்கு வெளியே உள்ள அனைத்து மாகாணங்களிலும், அவர்கள் முக்கியமாக இது போன்ற சமூக தலையீட்டு உத்திகளால் வைரஸ் பரவலைத் தடுத்தனர்.

இந்தியாவில் 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதிபடுத்தப்பட்டிருந்தாலும், கட்டுப்பாட்டு உத்தி முக்கிய அணுகுமுறையாகும். அனைத்து மாநிலங்களும் இந்த உத்தியை செயல்படுத்துகின்றன. இதில் இந்தியா மிகச் சிறப்பாகச் செய்திருப்பது தொடர்புத் தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்துதல் நடவடிக்கையாகும். மேலும், தேவைப்படும்போது ஆயிரக்கணக்கானோர் கண்காணிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

சோதனை செலவுகளை குறைக்க அல்லது சோதனையை விரைவாக்க சர்வதேச அளவில் ஏதேனும் நடவடிக்கை உள்ளதா?

நான் புரிந்துகொண்டதிலிருந்து இந்தியாவில் சோதனை செலவு இல்லாமல் கிடைக்கிறது. இது ஒரு புதிய வைரஸ். எனவே, அதை எதிர்த்துப் போராட கருவிகள், நோயறிதல்கள், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்க வேண்டும். தென் கொரியா இப்போது சோதனை நேரத்தை 4-5 மணி நேரமாகக் குறைத்துள்ளது. தடுப்பூசி வருவதற்கு நேரம் எடுக்கும்.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் வேறு சில நாடுகளில் தடுப்பூசிகள் உள்ளன, அவை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு குறைந்தபட்சம் இன்னும் ஒரு வருடம் ஆகும்.

இப்போது ஐ.சி.எம்.ஆர் வைரஸை தனிமைப்படுத்தியுள்ளது. தடுப்பூசிகள், சிறந்த நோயறிதல்கள் குறித்த ஆராய்ச்சியில் இந்தியா ஈடுபடுவதைப் பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு தென் கிழக்கு ஆசிய பிராந்தியவியல் சோதனையை உள்ளடக்கியது. இது வைரஸ் பரவல் பற்றி ஒரு நல்ல யோசனையைப் பெற முக்கியமானதாக இருக்கும்.

பிபிஇ (தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்) சரியாக செய்யப்படாவிட்டால் தொண்டையை துணியால் துடைக்கும் செயல்முறை ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சார்ஸ் பரவலின்போது வியட்நாமில் ஒரு சக ஊழியரை இழந்தேன். துணிகளை சேகரிக்கும் போது மருத்துவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உளக அளவில் இதற்கு ஒரு முடிவு தெரிகிறதா?

நான் எனது டைரக்டர் ஜெனரலை மேற்கோள் காட்டுகிறேன்: இந்த தொற்றுநோய் கட்டுப்படுத்தக்கூடிய முதல் தொற்றுநோய்களில் ஒன்றாகும். சிங்கப்பூர், சீனா மற்றும் தென் கொரியா இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள். எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இந்த புதிய நோயை எதிர்த்துப் போராடுவதற்கும் அதை வீழ்த்துவதற்கும் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று கூறி முடிக்கிறேன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Covid 19 who representative dr henk bekedam interview on india response against coronavirus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X