கடமை தான் முக்கியம்… கல்யாணத்தை தள்ளி வைத்த சப்-இன்ஸ்பெக்டர்!

தன் குடும்பம், உறவுகள், நண்பர்கள் அனைவரையும் தாண்டி நாட்டு நலனே முக்கியம் என்று பணியாற்றும் அதிகாரிகளுக்கு வீர வணக்கம் செய்கின்றனர் பொதுமக்கள்

By: Updated: April 7, 2020, 01:13:01 PM

COVID 19 Woman sub-inspector Shahida Praveen postponed her marriage :  உலகம் முழுவதும் கொரானா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வருகின்ற காரணத்தால் பொதுமக்கள் பலரும் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரும் பொருட்டு அரசு அதிகாரிகள், காவல் துறையினர், மருத்துவத் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு இயந்திரம் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.  பலரும் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டுவிட்டு கொரோனாவிற்கு எதிரான போரில் தங்களின் உயிரையும் துச்சமாக நினைத்து போராடி வருகின்றனர். தன்னுடைய திருமணத்தை தள்ளி வைத்துவிட்டு கடமைக்கு வந்த பெண் காவல்துறை அதிகாரியை இன்று நாம் பார்ப்போம்.

மேலும் படிக்க : கொரோனா வார்டில் பணி : என் குழந்தைக்கு தாய்பாலும் தருவதில்லை – செவிலியர் உருக்கம்

ரிஷிகேஷில் (உத்திரகாண்ட் மாநிலம்) அமைந்திருக்கும் முனி கி ரெட்டி காவல் நிலையத்தில் துணை காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஷாகிதா பிரவீன். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

தற்போது வெளிமாநிலங்களில் இருந்து அம்மாநிலத்திற்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குதேவையான நிவாரண உதவி வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறார் ஷாகிதா. 5ம் தேதியும் வழக்கம் போல் அவர் பணிக்கு வந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இது குறித்து அவரிடம் கேட்ட போது, கடமை தான் இப்போது முக்கியம். கல்யாணத்தை பிறகு கூட செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த பொறுப்புணர்ச்சியை அவருடன் வேலை பார்த்து வரும் பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த செய்தி சமூகவலைதளங்களில் பரவ தன் குடும்பம், உறவுகள், நண்பர்கள் அனைவரையும் தாண்டி நாட்டு நலனே முக்கியம் என்று பணியாற்றும் அதிகாரிகளுக்கு வீர வணக்கம் செய்கின்றனர் பொதுமக்கள்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Covid 19 woman sub inspector shahida praveen postponed her marriage to help migrant workers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X