/tamil-ie/media/media_files/uploads/2022/07/covid-4-1-1.jpg)
BA 2.75 sub variants of the parent Omicron under the spotlight
கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்து வருவதால், கொரோனா சோதனை, தடுப்பூசி மற்றும் கோவிட் -19 வுழிகாட்டுதல் நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட ஆறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில், 'வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் பொதுமக்கள் கூட்டங்கள் வைரஸ் பரவுவதை அதிகரிக்கக்கூடும்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க, கோவிட் பரவல் அதிகமுள்ள மாவட்டங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். போதுமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது என்று சுகாதார செயலாளர் கடிதத்தில் கூறியுள்ளார்.
டெல்லியில் தினசரி கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வருகின்றன, நகரத்தில் 2,419 வழக்குகள் மற்றும் கோவிட் பரவல் நேர்மறை விகிதம் 12.9 சதவீதமாக வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது என்று அரசாங்கத்தின் தினசரி சுகாதார அறிக்கை தெரிவிக்கிறது. ஆகஸ்ட் 5 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் வாராந்திர புதிய வழக்குகளில் 8.2 சதவீதம் டெல்லியில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.