இரண்டாவது அலை வீழ்ச்சியடைந்ததால், ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களில், 10 வயதுக்கு கீழ் உள்ள கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பங்கில் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஒரு நிலையான அதிகரிப்பு உள்ளது. அதிகாரம்மிக்க குழு -1 (EG-1) உடன் கிடைத்துள்ள தரவுகளின்படி, நாட்டின் கோவிட் அவசர உத்தியை உருவாக்கும் பணியை மேற்கொள்கிறது.
கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது மொத்தம் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையில், 1-10 வயதுடைய குழந்தைகளின் பங்கு இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 2.80% ஆக இருந்து ஆகஸ்ட் மாதத்தில் 7.04% ஆக அதிகரித்துள்ளது என்று தரவுகள் காட்டுகிறது. அதாவது, ஒவ்வொரு சிகிச்சையில் உள்ள 100 கோவிட் தொற்றுகளில் ஏறக்குறைய 7 குழந்தைகள் உள்ளனர்.
குழந்தைகளை நோக்கிய இந்த ஓரளவான மாற்றம் என்பதை வியத்தகு மாற்றம் என்று கூற முடியாது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். 1 முதல் 10 வயதுக்குட்பட்டோரில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றுகள் பெரியவர்கள் வைரஸால் பாதிக்கப்படுவதைக் குறைக்கலாம்.
நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் தலைமையிலான EG -1 கூட்டத்தில் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் உட்பட பல்வேறு அமைச்சகங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மார்ச் மாதத்திற்கு முன், ஜூன் 2020 முதல் பிப்ரவரி 2021 வரையிலான 9 மாதங்களில், சிகிச்சையில் இருந்த மொத்த தொற்றுகளில் (Total active cases) 1-10 வயதுடைய குழந்தைகள் 2.72% முதல் 3.59% வரையில் இருந்ததாக தரவுகள் காட்டுகிறது.
மொத்தம் சிகிச்சையில் உள்ள கோவிட்-19 தொற்றுகளில் 1-10 வயதுடைய குழந்தைகளின் பங்கு இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 2.80%ல் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் 7.04%ஆக அதிகரித்துள்ளது என்று தரவுகள் காட்டுகிறது.
கிடைக்கக்கூடிய தரவுகளின் படி, 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், ஆகஸ்ட் மாதத்தில், குழந்தைகளில் கோவிட்-19 தொற்றுகள் மிசோராமில் மிக அதிகமாக இருந்தன (மொத்தம் சிகிச்சையில் உள்ள தொற்றுகளில் 16.48%) மற்றும் டெல்லியில் மிகக் குறைவாக (2.25%) உள்ளது. எட்டு மாநிலங்களில் - மிசோரம் (16.48%), மேகாலயா (9.35%), மணிப்பூர் (8.74%), கேரளா (8.62%), அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (8.2%), சிக்கிம் (8.02%), தாத்ரா மற்றும் நகர் ஹவேலி (7.69%) மற்றும் அருணாச்சல பிரதேசம் (7.38%) - தேசிய சராசரி 7.04%ஐ விட கோவிட்-19 தொற்று ஏற்பட்ட குழந்தைகளின் அதிக விகிதத்தை பதிவு செய்துள்ளது.
புதுச்சேரி (6.95%), கோவா (6.86%), நாகாலாந்து (5.48%), அசாம் (5.04%), கர்நாடகா (4.59%), ஆந்திரா (4.53%) , ஒடிசா (4.18%), மகாராஷ்டிரா (4.08%), திரிபுரா (3.54%) மற்றும் டெல்லி (2.25%) என ஆகஸ்ட் மாதத்திற்கான தேசிய சராசரியைவிட இந்த மாநிலங்கள் குறைவான விகிதத்தை பதிவு செய்துள்ளன.
மக்கள்தொகை கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையின்படி, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மார்ச் 2021 இறுதிக்குள் மொத்த மக்கள் தொகையில் சுமார் 17 சதவிகிதமாக இருப்பார்கள்.
அதிகாரம்மிக்க குழுவின் (EG-1) தரவு முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் சில வல்லுநர்கள் கோவிட்-19இன் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளனர். வைரஸ் அதிக அளவு சுற்றுகளில் இருப்பதால் - அடுத்த அலை குழந்தைகளையும் தாக்கக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் இருக்கிறார்கள்.
குழந்தைகளிடையே கோவிட் தொற்றுகள் அதிகரிப்பதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் கூறப்படவில்லை என்றாலும், வைரஸ் தொற்றுக்கு அதிகம் ஆளாவதற்கு (வைரஸுக்கு) அதிக அளவிலான சோதனை காரணமாக இருக்கலாம் என்று ஒரு வட்டாரம் கூறுகிறது.
“குழந்தைகளின் சேர்க்கை விகிதம் முன்பைவிட அதிகமாக உள்ளது. இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள், முதலில், அதிக விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையுணர்வு உள்ளது; இரண்டாவதாக, பாதிப்பும் விகிதாசாரமாக அதிகரித்திருக்கலாம்” என்று மற்றொரு வட்டாரம் கூறுகிறது. குழந்தைகளிடையே வைரஸின் அதிக வெளிப்பாடுகளை பரிந்துரைக்கும் சீரம் ஆய்வுகளை சுட்டிக்காட்டுகிறது. “நாம் சீரம் ஆய்வுகளைப் பார்த்தால், குழந்தைகளில் தொற்று விகிதம் 57-58 சதவிகிதம் ஆகும். இது பெரும்பாலும், குழந்தைகள் தொற்றுநோயின் ஒரு பகுதியாக இருப்பதையும், அவர்கள் எப்போதும் தொற்றுநோயின் ஒரு பகுதியாக இருப்பதையும் இது காட்டுகிறது” என்று வட்டாரம் தெரிவித்தது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய கோவிட் -19க்கான நான்காவது மற்றும் சமீபத்திய தேசிய அளவிலான சீரம் சர்வேயில் சர்வே கணக்கெடுப்பில், 6-9 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் செரோ பாதிப்பு 57.2% என்றும் 10-17 வயதினரில் 61.6% என்றும் காட்டுகிறது. இது முழு மக்கள்தொகையில் 67.6% க்கும் குறைவானது.
குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றுகள் பெரியவர்கள் வைரஸால் பாதிக்கப்படுவது குறைவதன் விளைவாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
“ஒட்டுமொத்தமாக, குழந்தைகளில் கோவிட் தொற்றுகளின் விகிதம் அதிகரிப்பதைக் காட்டுகிறது. ஏனென்றால், பெரியவர்களில் தொற்று பாதிப்பு குறைந்துவிட்டது… எனவே, ஓரளவு மாற்றம் உள்ளது. ஆனால், நாம் பெரிய அளவில் பார்த்தால், இதை வியத்தகு மாற்றம் என்று அழைக்க முடியாது. நாம் அதை கண்காணிக்க வேண்டும்” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
குழந்தைகள் ஏற்கனவே ஓரளவிற்கு வைரஸுக்கு ஆளாகியிருப்பதைக் கவனித்த வட்டாரத்தினர், மேலும் கூறுகையில், “குழந்தைகளில் நோயின் தீவிரம் பெரியவர்களை விட லேசானதாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. குழந்தைகள் அதிகமாகிவிட்டார்கள் என்று சொல்லக்கூடிய சூழ்நிலை இல்லை. அந்த நிலை வரும் என்று நான் நினைக்கவில்லை.” என்று கூறினர்.
குழந்தைகளிடையே கோவிட்-19 இறப்பு தொடர்ந்து குறைவாக உள்ளது என்று கூறிய அந்த வட்டாரம் “மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் விகிதம் ஓரளவு அதிகரித்துள்ளது. இருப்பினும், கேரளாவில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தயார்நிலை காரணமாக இறப்பு என்பது முன்பைவிட நிலையாக அல்லது குறைவாக உள்ளது.” என்று தெரிவித்தனர்.
குழந்தைகளிடையே கோவிட் தொற்றுகளைக் கையாள்வதற்கான உத்தி குறித்து கேட்டபோது, Biological E போன்ற தடுப்பூசி விண்ணப்பதாரர்கள் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஒப்புதல்களைப் பெறுவதற்கான செயல்பாட்டில் இருப்பதாக அந்த வட்டாரம் கூறியது.
கோவிட் -19 இன் இரண்டாவது அலை இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கி மே முதல் வாரத்தில் உச்சத்தில் இருந்தது. தேசிய அளவில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 4.14 லட்சத்தை எட்டியது. அப்போதிலிருந்து, இரண்டாவது அலை வீழ்ச்சி அடைந்தது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் திங்கள்கிழமை அன்று 27,254 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. சிகிச்சையில் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கை 3,74,269 ஆக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.